"6,7 டேக் எடுத்தாங்க.. என் மனசார கொடுக்கல..! உயிரோட போகணும்னா நான் சொல்ற மாதிரி பேசுன்னு வலுக்கட்டாயமா மிரட்டி வீடியோ பதிவு பண்ணாங்க.. இல்லைனா என் குடும்பத்தை கொ*ணுடுவேன்னு சொன்னாரு.."
"நான் யார் தெரியுமா..? புஸ்ஸி ஆனந்த் கிட்ட கேளு.. அவரே நான் சொன்னா செய்வாருன்னு துணை சபாநாயகரே மிரட்டுனாரு.."
- காலையில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அருகில் அமர்ந்து கொண்டு எதுவும் பிரச்சனை இல்லை என்பது போல் பேசிய நிலையில் கார்த்திக் என்பவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ..
#Ravisankar | #Thuraiyur | #TVK | #PolimerNews
ஒரே நாளில் 11 படுகொலைகள்! குறைகளைத் தெரிவிக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்! சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறைவிட்டு விட்டாரா விஜய்?
@CMOTamilnadu@TVKVijayHQ
தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்ட நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஒரு பண்டிகை நாளைக்கூட பாதுகாப்பாகக் கொண்டாட முடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகச் சீரழிந்திருந்திருப்பது கையாலாகா தவெக ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சிக்கான சாட்சியாகும். தேனி, சமதர்மபுரத்தில் பொதுச்சாலையை மறித்துப் பட்டாசு வெடித்தவர்களைத் தட்டிக்கேட்டதற்காகக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். சாலையில் செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தட்டிக்கேட்ட ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்நிலையென்றால், பொதுமக்கள் யாரை நம்பி வீதிக்கு வருவார்கள்? மக்களைக் காக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை எனுமளவுக்குத் தமிழ்நாட்டுச்சூழல் தள்ளப்பட்டிருப்பது பொதுஅமைதி முற்றிலும் குலைந்ததற்கான அறிகுறியாகும்.
வார இறுதியில் தலைமைச்செயலகத்துக்கு விடுமுறை விடுவதுபோல, சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறை விட்டுவிட்டாரா முதலமைச்சர் விஜய்? இத்தனைக் கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? ஒரு பண்டிகை நாளன்றுகூட மக்கள் பயத்தோடும், பதற்றத்தோடும்தான் இருக்க வேண்டுமென்றால், நடப்பதற்குப் பெயர் ஆட்சியா? குற்றங்களை நிகழவிட்டுவிட்டு, குற்றவாளிகளைப் பிடித்துச் சிறைலடைப்பது காவல்துறையின் வேலை இல்லை; குற்றங்களே நிகழாதவணக்கம் அமைதியான, பாதுகாப்பான சமூகத்தைப் படைப்பதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். சிறைவாசிகள் சர்வசாதாரணமாகச் சிறையிலிருந்து தப்பித்து ஓடுவது ஒருபுறமென்றால், போதைப்பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம் மறுபுறம்! தவெகவின் நிர்வாகிகளே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒன்றிய அரசின் படையாலும், கேரள அரசின் காவல்துறையாலும் கைதுசெய்யப்படுகின்றனர். அதனைக் கண்டுகொள்ளாத காவல்துறை, மதுக்கடைக்கு எதிராகப் போராடியவரின் கடையில் போதைப்பொருளை வைத்து, பொய் வழக்குத் தொடுக்க முனைகிறதென்றால், இந்த அவலத்தை என்னவென்று கூறுவது?
தொகுதிசார்ந்த குறையை நேரில்கூறச் சென்ற ஒருவரை துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்கும் காணொளிக்காட்சிகள் தவெக ஆட்சியின் அதிகாரத் திமிருக்கும், அடாவடித்தனத்துக்குமான சான்றாகும். தேர்தல் வழக்குக்காக என்னுடைய தங்கை கார்த்திகா, தம்பி இசை மதிவாணன் உள்ளிட்டவர்களைத் தேடிப்பிடித்துக் கைதுசெய்து சிறைப்படுத்திய தவெக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது? பாதிக்கப்பட்ட நபரை மிரட்டி அச்சுறுத்தி, ஒன்றுமே நடக்கவில்லை எனப் பக்கத்தில் அமர வைத்துப் பேச வைப்பதெல்லாம் கேவலம் இல்லையா?
தவறுகளுக்குப் பொறுப்பேற்பு, பிழைகளை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளுதல், குற்றமிழைத்தவர் எவராயினும் நடவடிக்கை எடுத்தல் என்பதெல்லாம் தலைமைப்பண்புக்கான அடிப்படைக் குணநலன்கள். இதுவெல்லாம் என்னவென்று முதல்வர் விஜய்க்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. எல்லாவற்றிற்கும் அவரிடம் இருக்கும் ஒற்றைத்தீர்வு, Road Show எனும் பெயரில் நடக்கும் கேலிக்கூத்து, மக்களைத் திசைதிருப்ப நடக்கும் மலினமான நாடகங்கள், போலியானக் கட்டுக்கதைகள், பொய்யானக் கருத்துருவாக்கங்கள்! இதுவெல்லாம் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றுமே ஒழிய, ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது. இனியாவது உணர்வாரா முதல்வர் விஜய்?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கேரள காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட பிரேம்குமாரை நியூஸ் தமிழ் 24*7 இயக்குநர் என அவதூறு பரப்புகிறார்கள் என்கிறது தொலைக்காட்சி நிர்வாகம்.
முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் நியூஸ் தமிழ் 24*7 இயக்குநர்களில் ஒருவர் ஆர்.பிரேம்குமார் என ஏற்கனவே பதிவு இடப்பட்டிருக்கிறது.
இந்திய அரசு 1956-ம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவ.1 தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாள். தமிழ்நாடு நாள் வாழ்த்துகள். உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் - சீமான்
#TamilnaduDay | #NTK | #Seeman