குடும்பத்திலிருந்து பிரிந்து வந்துவிட்ட லியோ இங்கு பார்த்திபனாகப் பதுங்கியிருப்பதைக் குறியீடாக எடுத்துரைக்கும் இந்த ஹைனாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் வரைகலைக்குப் பெரும் உழைப்பைக் கொட்டியது படக்குழு. படம் முடிந்த பின்னரும் பல நிமிடங்கள் நீளும் அந்த எண்டு கிரெடிட்ஸில் வால் பிடித்ததாய் நகரும் வரைகலை கலைஞர்களின் பெயர்கள் சொல்லும், இதற்காக எத்தகையதொரு மெனக்கெடலும் உழைப்பும் இருந்தன என்பதை!
#Leo | #AnandaVikatanCinemaAwards | #VikatanAwards | @MPCVFX | @unifimedia