திராவிட இயக்கக் கொள்கைகளை கேட்போரை ஈர்��்கும் பாடல்களாகப் பரப்பிய இசை முரசு அய்யா நாகூர் ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழா இன்று நாகையில் நடைபெற்ற போது அதில் பெருமையுடன் கலந்து கொண்டோம்.
தன் கம்பீரக் குரலால் பொதுமக்களின் உள்ளங்களில் கொள்கை உணர்வையும், உற்சாகத்தையும் ஒருசேர ஊட்டியவர். மதங்களைத் தாண்டி மனங்களை இணைத்த மனிதநேயப் பண்பாளர்!
காலம் கடந்தும் கரையாத கீதமாய், இடி ஓசையாய் ஒலித்த அய்யா நாகூர் ஹனீபா அவர்களின��� நூற்றாண்டு விழாவை, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.
அய்யா நாகூர் E.M.ஹனீபா அவர்களின் புகழ் ஓங்கட்டும் !
@mp_saminathan @Anbil_Mahesh @VSELVARAJCPI @aloor_ShaNavas @NGowthamandmk
#மாற்றுத்திறனாளிகள்_நாள்:
மனு கொடுக்கும் இடத்தில் இருந்து, மக்கள் பிரதிநிதிகளாக உயர்ந்துள்ள மாற்றுத்திறனாளிகள்!
மக்களாட்சியின் உயிர்த்துடிப்பாக விளங்கும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி நமது #DravidianModel அரசு காட்டியுள்ள பாதையை அனைத்து மாநிலங்களும் பின்பற்றும் நாள் விரைவில் வந்தே தீரும்.
#LeaveNoOneBehind! #IDPD2025
2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த #AvinashiRoadFlyover-ஐ, நமது #DravidianModel அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.
கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்ட���பிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் #GDNaidu அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்.
நம் மாநிலத்தின் மண் - மொழி - மானம் காக்க திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் முழங்கியுள்ள "தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன்" தீர்மான உறுதி ஏற்புக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. அனைவரும் ஓரணியில் நின்று ஆதிக்க சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்.
#தமிழ்நாடு_தலைகுனியாது
‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பயன்பாட்டை நம் #ChepaukTriplicane தொகுதியில் இன்று தொடங்கி வைத்தோம். மூத்த குடிமக்கள் - மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கேச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கி வாழ்த்தினோம். அவர்களின் பேரன்பில் நெகிழ்ந்தோம்!
@nchitrarasu@ARPMkamaraj@Madhanmohandmk
நம் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் நம் மண், மொழி, மானம், காக்க ஓரணியில் தமிழ்நாடு என இணைந்து தமிழ்நாட்டின் உரிமை போர���ட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம்.
#ஓரணியில்_தமிழ்நாடு
திராவிட மாடல் அரசின் #நலம்_காக்கும்_ஸ்டாலின் எனும் ��ருத்துவ முகாமில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது உடல் நலத்தை பேணி காத்திடுங்கள். Blood Test, ECG, X-Ray, USG, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளும் எடுக்கப்படும் 🩺🏥
அனைத்து திறனும் கொண்ட இளைஞர் கவின், வாசிக்கும்போதே பதறுகிறது.
ஜாதி மறுத்து காதல் செய்பவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை சமத்துவ சிந்தனை கொண்ட அனைவருக்கும் இருக்கிறது. ஜாதி மறுத்து காதல் என்றாலே பயம் கொள்ளும் நிலையை உருவாக்க ஜாதிய வெறியர்கள் துடிக்கும்போது, அவர்களுக்கு பிணையில் கூட வெளிவர முடியாத தண்டன��� பெற்று தருவது மட்டுமின்றி இனி அவர்கள் அதை செய்ய குறைந்தபட்ச அச்சம் ஏற்பட ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் நிச்சயம் தேவை.
சட்டம் மட்டுமே மாற்றத்தை கொண்டு வராது என்றாலும் அச்சத்தையாவது சட்டம் கொண்டு வர வேண்டும்.
ஜாதி ஒரு மனநோய் - புரட்சியாளர் அம்பேத்கர்
ஜாதி ஒழிப்புப் பிரச்சாரங்கள் தீவிரம் அடைய வேண்டும்.
மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லாமல், உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தினார் கழகத் தலைவர், முதல்வர் @mkstalin அவர்கள்!