நான் எழுதிய குறுநாவல் பகுதி 1
https://t.co/FJX8g6fg2b
பகுதி 2
https://t.co/wyPic3iIMW
பகுதி 3
https://t.co/0pjVimdmIh
பகுதி 4
https://t.co/CQZKXEwxuV
பகுதி 5
https://t.co/wCz1texF5p
பகுதி 6 இறுதி
https://t.co/ZD2jFmK5lF
வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி
இலங்கை - 303/7
நிஸங்க - 79
போர்ட் - 2/44
வெஸ்ட் இண்டீஸ் - 262
ஹோப் - 56
சமீர - 4/67
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
கடவுள் கொடுத்த வரங்களில் மிகச்சிறந்த வரம் எனது இரண்டு மகள்கள் தான்.
இன்று எனது இரண்டாவது மகள் தனது 3வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் உங்கள் அனைவரது வாழ்த்துக்கள் ஆசிர்வாதம் வேண்டும். நன்றி.
#HappyBirthdayNayanikha
2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியா - 231/9
க்ரீன் - 53
அப்ரிடி - 3/36
பாகிஸ்தான் - 190
சதாப் கான் - 71
எல்லிஸ் - 4/33
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
3வது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வி. தொடரை இழந்தது.
இந்தியா - 180/5
ஹர்மன்பிரீட் - 56
பெல் - 2/26
இங்கிலாந்து - 184/4
கேப்ஸி - 82
அருந்ததி - 2/31
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
மும்பையில் வேலை பார்த்துவிட்டு, கையில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் ஏறிய ஒரு சிறுவன்…அப்போது அங்கு வந்த TTE அவனிடம் டிக்கெட் கேட்டார். பயத்துடன் நின்ற அந்தச் சிறுவன், தன்னிடம் டிக்கெட் ஏதும் இல்லை என்று சொன்னான்.
“எங்கே செல்ல வேண்டும்?” என்று கேட்டபோது, “ரேபரேலி…” செல்ல வேண்டும் என பதிலளித்தான்.
அதோடு தனக்கு நேர்ந்த துயரத்தையும் பகிர்ந்தான்…வேலை பார்த்த இடத்தில் முதலாளி தன்னை கொடூரமாக அடித்ததாகவும், கையை சூடு வைத்து சுட்டதாகவும், வேலைக்கான சம்பளம்கூட தராமல் நடுத்தெருவில் துரத்திவிட்டதாகவும் கண்ணீருடன் கூறினான்.
இதைக் கேட்ட அந்த TTE அதிகாரி அவனை கண்டிக்கவில்லை… அபராதம் விதிக்கவில்லை…
மாறாக, பசியுடன் இருந்த அந்தச் சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, தன் சொந்தப் பணத்தில் டிக்கெட்டும் எடுத்து, கையில் செல்வுக்கு பணம் கொடுத்து பத்திரமாக அனுப்பி வைத்தார்.
வெளியே பார்க்குபோது நிறைந்த உலகமாகத் தெரிந்தாலும், ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வலியிலும் தனிமையிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதரவற்ற அந்தச் சிறுவனுக்கு முகம் தெரியாத அந்த அதிகாரி காட்டிய கருணைதான் உண்மையான மனிதநேயம்.
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களின் எதிர்பாராத அன்புதான் இந்த உலகத்தை இன்னும் அழகாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ❤️
இந்த மனிதநேயம் மிக்க TTE அதிகாரிக்கு ஒரு ராயல் சல்யூட்..! 🙏
மஞ்சணத்தி பெயரின் அர்த்தத்தை தேட தேவையில்லை. அவர் எழுதிய மறக்கவே நினைக்கிறேன்ல ஒரு அத்தியாயமே எழுதி இருக்கிறார். மஞ்சணத்தி க்கும் அவர் ஊருக்கும் சம்மந்தம் இல்லை. அது ஹைவேல நடந்த சம்பவம்.....
மாரி செல்வராஜ் படங்களில் அடிக்கடி வரும் மஞ்சணத்தி பெயரின் அர்த்தத்தை தேடினேன்!
மஞ்சணத்தி என்பது தமிழகத்தின் பூர்வீக மூலிகை மரங்களில் ஒன்று.
சங்க இலக்கியங்களில் (குறிஞ்சிப்பாட்டில்) தணக்கம் பூ என்று குறிப்பிடப்படும் மலர் இம்மரத்தினுடையதே.!!
மாரி செல்வராஜின் சொந்த ஊரான திருநெல்வேலி/தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் மஞ்சணத்தி மரங்கள் அதிகம் உண்டு. சிறுவயதில் அவர்கள் ஆடு மேய்க்கப் போகும்போது இந்த மரத்தின் பழங்களைச் சாப்பிடுவார்களாம்.
Mari Selvaraj on மஞ்சணத்தி Name :
எங்கள் ஊரில் சில மஞ்சனத்தி மரங்களில் துணிகளைக் கட்டி வைத்திருப்பார்கள். அதில் 'மஞ்சனத்தி பேய்' அல்லது தெய்வம் இருப்பதாகக் கூறி, சிறுவர்களை அந்த மரத்தில் ஏறவிட மாட்டார்கள். இதுபற்றி என் அம்மாவிடம் கேட்டபோது, அவர் ஒரு பெண்ணின் சோகமான உண்மைக் கதையைக் கூறினார். அந்தப் பெண்ணின் உருவம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. - என்று மாரி செல்வராஜ் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.
மாரி செல்வராஜுக்குள் இருக்கும் பயம், வியப்பு, சோகம், அதீத பாசம் என எல்லாவற்றின் வடிவமாகவும் அந்த மஞ்சனத்தி உருவம் மாறிவிட்டது. சிறுவயதில் தனக்கு உதவிய பெண்கள், தன்னை அடிக்க வந்த பெண்கள், தான் காதலித்த பெண்கள் என அவர் சந்தித்த, வியந்த அனைத்து பெண்களின் உணர்ச்சிக் குவியலாகவே அவர் மஞ்சனத்தியைப் பார்க்கிறார். அதனால்தான் அவரது கதைகளில் வரும் பெண்களின் ஆன்மாவுக்கு இந்தப் பெயரை ஏதோ ஒரு வகையில் சூட்டிவிடுகிறார் போல.!!