லதாமங்கேஷ்கருக்கு பாரத் ரத்னா விருது தந்த உங்களுக்கு, அதே தராசில் என்னை வைத்து மதிப்பிட்டு அதே பாரத் ரத்னா தர மனம் வரவில்லை எனில் நீங்கள் தரும் எந்த விருதும் எனக்கு வேண்டாம் என கம்பீரமாக மறுத்த ரோஷக்காரி ஜானகியம்மா. 🙏❤
இரு மரணங்கள் – சமூகத்தின் இருவித நிலைப்பாடுகள்!
நடிகரும், கலை உலக மேதாவியுமான சத்யேந்திராவின் மறைவு. பிரபல நடிகர் அஜித்தின் தயார் மோகினியின் மறைவு.
இவை இரண்டையும் இந்தச் சமூகம் எப்படி அணுகியது என்பது பல பட்டவர்த்தனமான உண்மைகளை நமக்கு முகத்தில் அறைந்தார் போலப் படம் பிடித்துக் காட்டுகிறது;
எத்தனையெத்தனை வித உருக்கமான பதிவுகள் மறைந்த கலைஞன் சத்யேந்திரா குறித்து!
உலக சினிமாக்களை கரைத்துக் குடித்தவர், சினிமா அறிவு நிரம்பப் பெற்றவர்.
பன் மொழிப் புலமையாளர், பாசாங்குத்தனமற்ற நிஜமான மனிதன், சினிமாவையே உயிர்மூச்சாகக் கருதி வாழ்ந்த ஒரு ஏழைக் கலைஞன் என்பது தான் அவர் குறித்து பலரும் வெளியிட்ட பதிவுகளின் சாராம்சம்.
ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் 1988 தொடங்கி நானும் இவரை ஓரளவு அறிவேன்.
ரஷ்யன் கல்சுரல் செண்டர், மாக்ஸ்முல்லர் பவன், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கு, அமெரிக்க தூதரக நூலகம் ஆகிய இடங்களில் இவர் எனக்கு ஓரளவு பரிச்சயமானார்.
எல்லோரும் எழுதிக் குவித்து என்ன பயன்?
முக நூல்கள் முழுவதும் நிரம்பி வழிகின்ற அளவுக்கு பல பதிவுகள் வந்ததையடுத்து மெயின்ஸ்டீரீம் ஊடகங்களும் சத்யேந்திராவை பற்றி எழுதி தள்ளிவிட்டன.
ஆனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத் துறையில் இயங்கிய ஒரு அறிவார்ந்த கலைஞனின் உடலை அடக்கம் செய்ய அந்தத் துறை சார்ந்த அமைப்புகளோ, தனி நபர்களோ யாரும் முன்வரவில்லை என்ற யதார்த்தம், சமூகத்தின் முகத்தில் பேயறைந்தார் போல பேரதிர்ச்சி தருகிறது.
பணம் இல்லாதவன் இறந்தால், அவன் பிணத்திற்கு என்ன மரியாதை? என்பது சத்யேந்திரா மரணத்தில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவிட்டது.
நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லையாம்!
நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சுமார் ஒன்றே கால் லட்சம் கட்ட வேண்டும். அவரிடம் ஏது பணம் என்றார், சினிமா பத்திரிகையாளர் சரவணன்.
நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லையென்றாலும், சத்யேந்திரா ஒரு நடிகர் என்பதும் சுமார் 150 படங்கள் வரை நடித்தவர் என்பதும் பொய்யாகிவிடுமா? என்ன?
ஆனால், சத்யேந்திராவை அறிவு ஜீவித்தனமான நடிகர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இன்றைக்கு பிரபல்மாக இருக்கும் சுமார் ஒரு டஜன் நடிகர்கள் சத்யேந்திராவிடம் மணிக் கணக்கில் உலக சினிமா குறித்து உரையாடி தகவல்கள் பெற்றுள்ளனர்.
அவ்வளவு ஏன்? நடிகர் சங்கத் தலைவர் நாசர், சத்யேந்திராவை மிக நன்றாக அறிவார்.
நாசருக்கு சத்யேந்திராவுடன் பல வருட பழக்கம் உள்ளது என்பது திரையுலகில் பலருக்கும் தெரியும். ஆனாலும் நாசர் ஒரு இரங்கல் அறிக்கை கூட தந்ததாக தெரியவில்லை.
பிரேமலதா ஒருவர் தான் சத்யேந்திரா மறைவுக்கு அஞ்சலி அறிக்கை தந்த ஒரே பிரலபமாகும்.
ஒரு அற்புதமான அனாதைக் கலைஞனை எடுத்து நடிகர் சங்கம் அடக்கம் செய்திருக்கக் கூடாதா..? என்ற ஆதங்கம் மனதை வாட்டுகிறது.
சத்யேந்திராவை அனாதைகளை அடக்கம் செய்யும் உதவும் கரங்கள் எடுத்து செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை உருவானதை எப்படி புரிந்து கொள்வது?
இதோ நடிகர் அஜித்தின் தாயர் மறைவுக்கு போட்டி போட்டுக் கொண்டு திரையுலக அமைப்புகளும், பிரபலங்களும் வரத் தயார் ஆகிறார்கள் என்பதை அறிந்து அஜித் தன் மானேஜர் மூலம் யாரும் வர வேண்டாம் போனில் தொடர்பு கொண்ட அனைவருக்கும் ஸ்டிரிக்டாக சொல்லச் சொல்லி உள்ளார்.
தன் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே வந்தால் போதுமானது என்பது அவர் நிலைபாடு
எல்லா கட்சித்தலைவர்களும் இரங்கல் அறிக்கை தந்துள்ளனர். இந்த இரங்கலின் நோக்கம் ஒரு பிரபலத்தின் லட்சோப லட்ச ரசிகர்களின் நன் மதிப்பையும், ஆதரவையும் பெறுவது தான்
ஊடகங்களை அஜித் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்றாலும் வாசலில் நின்று கொண்டு போவோர், வருவோரைக் காட்டி நேரலை செய்கின்றன
இந்த சினிமா உலகத்தின் போலித்தனமான அனுதாபங்கள் தனக்கு தேவையில்லை என உறுதியாக இப்படி ஒரு நிலைபாடு எடுக்கும் துணிச்சல் அஜித்தை தவிர யாருக்கும் வராது..என்று தான் தோன்றுகிறது.
அஜித்தின் தாயார் மோகினி தன் குடும்பத்திற்காக, தன் கணவர், தன் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த எல்லா அம்மாக்களையும் போன்ற ஒரு சாதாரணக் குடும்பத் தலைவி. இது தவிர அவரை குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது.
ஒரு பிரபல கதையில் ஒரு செல்வக்கான அதிகாரி வளர்க்கும் அவரது செல்ல நாய் இறந்து போனதற்கு அந்த ஊரே திரண்டு அஞ்சலி செலுத்தியதாம்.
அந்த அதிகாரி ஓய்வு பெற்ற அடுத்த நாளே இறந்து போனாராம். அப்போது எந்த ஒரு நாயும் கூட அந்த ஊரில் அவருக்கு அஞ்சலி செலுத்த போகவில்லையாம்.
இது தான் இன்றைய உலகின் யதார்த்தம் மாத்திரமல்ல, என்றைக்கும் மாறாத யதார்த்தம்.
அங்கீகாரமின்றி வாழ்ந்து மறைந்தாலும், தன்னைக் குறித்து பலரும் சிந்தித்து, வருந்தி நினைக்கத்தக்க ஒரு வாழ்க்கையை சத்தியேந்திரா வாழ்ந்துள்ளார் என்பது நிஜம்.
சாவித்திரி கண்ணன்
நன்றி: அறம் இணைய இதழ்
@Rollercaster123@pencil_tweets@CMOTamilnadu@tnpoliceoffl Another young girl has gone missing. I earnestly request the police authorities to act swiftly, intensify the investigation, and ensure her safe return at the earliest. Every passing moment matters.
@tnpoliceoffl Another young girl has gone missing. I earnestly request the police authorities to act swiftly, intensify the investigation, and ensure her safe return at the earliest. Every passing moment matters. Public safety and justice must remain the highest priority.
நெதர்லாந்தின் லெய்டன் நகரில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, நமது பண்பாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பயணத்தில் மிகுந்த வரவேற்பிற்குரிய முன்னேற்றமாகும். இந்த அரிய செப்பேடுகள் வெறும் தொல்பொருள் சின்னங்கள் அல்ல; தமிழர்களின் மகத்தான வரலாறு, பண்பாடு மற்றும் சோழப் பேரரசின் மகோன்னதத்தைப் பதிவு செய்த நிரந்தரச் சான்றுகள்!
கழகத் தலைவர் அண்ணன் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது, இச்செப்பேடுகளை தமிழ் நாட்டிற்கு மீண்டும் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததுடன், ஒன்றிய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தினோம். அனைவரின் தொடர் முயற்சிகளும் இணைந்து இன்று இத்தகையைப் பலனை அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களது நெதர்லாந்து பயணத்தில் இந்தப் செப்பேடுகள் ஒப்படைக்கப்படும் நிகழ்வினை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.
அதே வேளையில், இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே ஆகும்! அதனை உணர்ந்து ஒன்றிய அரசு இச்செப்பேடுகள் தமிழ்நாட்டிற்கே கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும். தமிழ்நாடு அரசும் உரிய வகையில் இதற்கான முயற்சிகளைத் தாமதமின்றி மேற்கொண்டு, இவ்வரிய வரலாற்று ஆவணங்கள் அதன் தாய்மண்ணான தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதை உறுதி செய்யவேண்டும். நமது பாரம்பரியச் செல்வங்கள், அவற்றின் வரலாற்றுடன் இணைந்துள்ள தமிழ்நாட்டு மக்களிடையே பாதுகாக்கப்பட்டு, மக்கள் அவற்றைக் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றேன்.
@mkstalin
என் தங்கை மகன் பதினொன்றாம் வகுப்பு செல்லப்போகிறான் (அதாவது, Gen Alpha).
போன வருடம் பள்ளி சார்பாக Model UN (United Nations) Assemblyயில் பங்கெடுத்திருக்கிறான். எனவே அவனுக்கு அரசியல் புரிதல் ஓரளவுக்கு உண்டு.
அவனிடம் கேட்டேன் - "உனக்கு ஓட்டுரிமை இருந்திருந்தால் விஜய் கட்சிக்கு ஓட்டு போட்டிருப்பாயா?".
"மாட்டேன்" என்றான். ஏன் என கேட்டதற்கு அவன் சொன்ன இரண்டு காரணங்கள் -
1. Accountability இல்லை. எல்லாத்துலேயும் மத்தவங்களை blame பண்ணிட்டே இருக்கற மாதிரி தெரியுது.
2. "Stateஐ இப்படி மாத்துவேன்"ன்னு எந்த Visionம் share பண்ணல.
இந்த அளவுக்கு அவன் சிந்தனை இருப்பது எனக்கு மகிழ்ச்சி.
"இந்த Clarityஐ மட்டும் எப்போதும் விட்டுவிடாதே" என சொன்னேன்.
ஹாலிவுட் படங்கள் ஏன் கோடிக்கணக்கில் செலவாகுதுன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா?
பெரிய ஸ்டார்ஸ் மட்டும்தான் காரணம் இல்லை! புதுமுகங்கள் நடிக்கும் படங்களும்கூட பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகுது....ஏன்?
இதுக்குப் பின்னால இருக்கிற வேற லெவல் டெக்னாலஜிதான்!
சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 52வது இடம் பிடித்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ரசத்.. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக பேட்டி
#Ramanthapuram | #Civilserviceexam | #Polimernews