🚨 தவெக பொதுத் தொகுதிகளில் 26 தலித் வேட்பாளர்களை நிறுத்தியது, அதன் மூலம் தலித் MLA-களை உருவாக்கியது என்ற ஒரு தவறான அரசியல் கதை பரப்பப்படுகிறது. குறிப்பாக, நீலம் அமைப்பு தலைவர் இயக்குநர் பா. ரஞ்சித் போன்றோர் தவெக வெற்றியை சமூகநீதியை நிலைநாட்டியதை போன்று சிலாகித்து கருத்து பதிவிட்டனர்.
⚠️ ஆனால் இப்படிப்பட்ட தகவல்கள் வெறும் தரவில்லாத பிரச்சாரமாகவே பரப்பப்படுகிறது. அதிகாரப்பூர்வ தேர்தல் தரவுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்ட போது, இந்த செய்தியின் போலித்தன்மை அம்பலமானது..
📌 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியலின்படி, பொதுத் தொகுதியில் SC/தலித் வேட்பாளராக வெற்றி பெற்றவர் மேலூர் தொகுதியின் P. விஸ்வநாதன் என்ற ஒருவர் மட்டுமே.
✅ அவர் தவெக கட்சி சேர்ந்தவர் அல்ல; அவர் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்.
🔍 இதன் மூலம் தவெகவில் இருந்து எந்த தலித் வேட்பாளரும் பொதுத் தொகுதியில் வெற்றி பெறவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது..
❌ சமூகநீதி நிலைநாட்டுபவர் என்ற முலாம் பூசுவதற்காக இத்தகைய போலி செய்தி தொடர்ச்சியாக திட்டமிட்டு பரப்பப்படும், அது விவாதிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய போலி பிரச்சாரங்களை நம்புவதற்கு முன் அதிகாரப்பூர்வ தரவுகளை வைத்து சரி பார்க்கவும்..
Source Link- https://t.co/zKBSIj5IZi
#FactCheck #ECI #ElectionCommissionOfIndia #TamilNaduPolitics #TVK #Congress #Melur #PViswanathan #DalitRepresentation #SocialJustice #FakeNarrative #PoliticalPropaganda #VerifyBeforeSharing #OfficialData #ElectionData