ட்விஸ்ட் நம்பர் 1:-டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து குழந்தைக்கு அப்பானு நிருபனமான யுவராஜ் சத்தியமங்கலம் கிழக்கு தவெக ஒன்றியச் செயலாளர்
.
ட்விஸ்ட் நம்பர் 2:-இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு மனைவி இரண்டு குழந்தை இருக்கு.
Horse Tradingக்கு Negotiationsன்னு புதுசா பேர் வச்சு இருக்கானுங்க.
பிஜேபிக்கு கூட இந்தளவுக்கு உறிஞ்சதில்ல ஊடகப்பிரத்தலானுங்க.
வேலுமணி, CV சண்முகத்த ராஜினாமா பண்ணிட்டு வாங்க அமைச்சர் பதவி தரோம்ன்னு டீல் பேசறது என்ன வகை அரசியல்??
"துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் குருகுல கல்வியைச் செயல்படுத்த முடியவில்லை"
- ஆளுநர் அர்லேக்கர்.
குருகுல முறையில்,
குரு எந்த குலத்தவர்?
எந்த வர்ணத்தவர்?
எந்த பாலினத்தவர்?
Attention @Cockroach4India@Cockroachisback@CJP_for_India
Think before you post. As you grow, so should your sense of responsibility. Stop spreading fake news. Verify the facts before you share anything. This post is a reminder of why fact-checking matters before hitting the share button.
பிரதமர் மோடி புல்வாமாவில் உயிரிழந்த ராணுவ வீரர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதும்,
கரூரில் உயிரிழந்தவர்களை முதல்வர் விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதும்,
எந்த வகையில் வேறு வேறு?!
இவை செய்திச் சேனல்களில் வராது. தனிப்பட்ட உதிரி மனிதர்கள் இன்று நாள் முழுவதும் ஷேர் செய்துகொண்டிருப்பார்கள். இதற்கு இவ்வளவுதான் மதிப்பு போலிருக்கிறது என நாளை வேறு டாபிக்குக்கு மாறிவிடுவர்.
recognise the pattern.
@CJP_for_India Yes Because it was his own party TVK that was doing all these atrocities in the past two months. No other party in TN has done this before😂.
You either follow regional political news or keep away from all this. Thats good for you.
நேற்று முழுவதும் ஊடகங்கள், கரூர் நிகழ்வை மில்லிமீட்டர் கூட மிஸ் ஆகாமல் ஒளிபரப்பியதில், மிஸ் ஆன ஒரு முக்கிய செய்தி இருக்கிறது.
நேற்று கரூர் நிகழ்வில் முதல்வர் பேச்சை, (அதாவது "தில்லு.. திராணி... ஒரு டேஷம் கிடையாது.." உள்ளிட்ட..) கரூர் மாவட்டத்திற்குட்பட்ட ஓர் அரசுப்பள்ளியில், மாணவர்களுக்கு, வகுப்பிலேயே நேரடி ஒளிபரப்பு செய்ததும், அதற்கு கல்வி அமைச்சர் ராஜ்மோகன் பள்ளி தலைமை ஆசிரியரை இடைநீக்கம் செய்து, எல்லாப் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தும் நமக்கு ஒன்லைன் செய்தியாக எட்டியிருக்கலாம்..!
நேற்று முன்தினமும் அமைச்சர் ராஜ்மோகன் இதைப்போலான நாலுபக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார்..
"கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல...பள்ளிக்கூடம் என்பது அரசியலின் மேடை அல்ல...அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும்..." என புட்சட்னியில் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கியிருந்தார்.
ஏன் திடீரென இவ்ளோ மாற்றம்.. ?! நீங்கள்லாம் அவ்ளோ நல்லவங்க இல்லையே... ஆக்ஸிஜன் கூட வேண்டாம் ரீல்ஸ் போதும்னு வாழ்ற ஜனத்திரள் ஆச்சே என்று பார்த்தால்.....
கவி கணேசன் என்றொரு வழக்கறிஞர், அண்மையில் முதல்வர் பிறந்தநாளின் போது கல்வி நிலையங்கள் படுத்திய பாட்டில் காண்டாகி, பொதுநல வழக்கு தொடுத்திருக்கிறார்..
நேற்று முன்தினம் (9 ஜூலை.) வழக்கை எடுத்துக்கொண்ட நீதியரசர் தர்மாதிகாரி, அருள் முருகன் அடங்கிய நீதிமன்ற பெஞ்ச், ஆளும் அரசுக்கு ஒரு எத்து விட்டு, கண்டனத்தையும், அரசியல் கலப்பு இல்லாத கல்வி நிலையங்களை உறுதி செய்யவும், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக பதில் வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.
அதைத்தொடர்ந்துதான் நேற்று முன்தின கல்வி அமைச்சரின் நாலுபக்க அறிக்கையும், நேற்றைய அரசுப்பள்ளி தலைமையாசிரியர் இடைநீக்கமும்..
ஆச்சா...?!
ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்ட அந்த செய்தி எந்த காட்சி ஊடகத்திலும் வரவில்லை.... (வந்திருந்தால் மின்னல் அளவுக்கு..!) மாறாக அரசின் அறிவிப்பும், நடவடிக்கையும் மட்டும் ஒளிபரப்பப்பட்டது...!
நமக்கென்ன கேள்வி என்றால்.. இப்படி சாதாரண சுய ஒழுக்கத்தோடு நடைபெற வேண்டிய நடைமுறைகளுக்குக் கூட யாராவது வழக்கு போட வேண்டும்.. நீதிமன்றம் அதற்கு தீர்ப்பு வழங்க வேண்டும் என்றால்....
அரசு எப்போதுதான் ரீல்ஸ் வழியே இளைய தலைமுறையை இலக்காக நிர்ணயிக்கும் வாக்கரசியல் அற்பத்தனத்தை விட்டுவிட்டு, உருப்படியாக ஆட்சி நடத்தத் தொடங்கும்...?!
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் (550)
ஒரு விவசாயி பயிர் நன்றாக வளர வேண்டும் என்பதற்காக நடுவில் முளைக்கும் தேவையற்ற களைகளை அகற்றுவது போல, ஒரு நாட்டின் அமைதி மற்றும் நல்லோரைக் காக்கத் தீயவர்களைத் தண்டிப்பது அவசியமான ஒன்று.
செங்கோன்மை அதிகாரத்தில் வரும் இந்தக் குறள் ஒரு தலைவரின் முக்கியமான கடமையைச் சுட்டிக் காட்டுகிறது. ஒரு தலைவர் எல்லா இடத்திலும் பெருந்தன்மையாக இருக்கக் கூடாது என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.