🌱EPS 🔥
"ஐயா அவர்கள் சட்டப்பேரவையில் பேசி வருகிறார். குறிப்பாக, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளி ஒன்றில் அமைப்பதற்காகக் கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட 'மினி ஸ்டேடியம்' (சிறிய விளையாட்டு அரங்கம்) பணி, தற்போது கைவிடப்பட்டுள்ளது. அப்பணி எப்போது மீண்டும் தொடங்கும்? அதற்கு எப்போது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்? என்று ஐயா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். வாருங்கள், இது குறித்துப் பார்ப்போம். இந்தச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள். விளையாட்டு வீரர்களைப் பற்றிய சிந்தனையோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) எப்பொழுதும் மக்களுடன் மக்களாக இயங்கும்."
இந்திய விடுதலைக்காகத் தெற்கிலிருந்து வீறுகொண்டு எழுந்த நெற்கட்டான் செவலின் மாவீரர், இளம் வயதிலேயே துணிச்சலோடு “வெள்ளையனே வெளியேறு”என வீர முழக்கமிட்டதோடு,
போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத தீரராகத் திகழ்ந்து, வீரத்தில் மட்டுமல்லாமல் இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
தென்காசி மாவட்டம், 'நெற்கட்டும்செவல்' என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, @AIADMKOfficial சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
@AIADMKITWINGOFL
நெற்கட்டும்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னரும், அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, துணிச்சலுடன் எதிர்த்து நின்ற முன்னோடித் தமிழர்களில் முதன்மையானவருமான மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று, திருநெல்வேலி, நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
https://t.co/0uKZAIA48J
உயிரை பறிக்கும் கொடிக்கம்பம் மற்றும் பேனர்கள் கண் முன்னே தெரியவில்லையா முதல்வரே? அறிவு இருக்கும் எந்த கட்சியும் இந்த வேலையை செய்யாது ! மாற்றம் என்பது மக்களை ஏமாற்றவா ?
இதை வெட்கமின்றி வேடிக்கை பார்க்கும் சேலம் காவல்துறை தலைமை அதிகாரி , ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் எங்கள் பணத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! இந்த பேனர்களுக்கு செக்யூரிட்டி வேலை பார்க்கும் நீங்கள் வெட்கி தலை குனிய வேண்டும் !
இந்த அறிவற்ற கட்சிகள் வைக்கும் பேனர், கொடிக்கம்பத்தில் சிக்கி சுபஸ்ரீ , ரகு போன்று இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் உங்களுக்கு ? @CMOTamilnadu@Chief_Secy_TN
நெற்கட்டும்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னரும், அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, துணிச்சலுடன் எதிர்த்து நின்ற முன்னோடித் தமிழர்களில் முதன்மையானவருமான மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் படைபலத்தைக் கண்டு துளியளவும் பின்வாங்காமல், தாய்மண்ணைக் காக்கத் தொடர்ந்து முன்னேறிச் சென்று, பல வெற்றிகளைக் கண்டு, வீரத்தையும் விடுதலை உணர்வையும் மக்கள் மத்தியில் விதைத்த மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.
தீண்டப்படாத மக்களுக்கு காந்தியார் சூட்டிய பெயர் "ஹரிஜன்"; அதாவது கடவுளின் குழந்தைகள் என்றார்.
இந்த அவமதிப்புச் சொல்லை அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களும் கடுமையாக எதிர்த்தார்கள்.
அந்த சொல் இன்றைக்கு வெறுப்புக்குரிய சொல்லாகவே மாற்றப்பட்டுவிட்டது. இன்று (31.08.2026) சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர் பிரச்சனை எழுந்த போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன் தூய்மைப் பணியாளர்களுக்கு "தேவதைகள் " என்று பெயர் சூட்டுகிறார் .
தேவர்கள் பட்டமோ, தேவதைகள் பட்டமோ இந்த மக்களுக்கு வேண்டாம் ; முதலில் மனிதர்களாக அவர்களை நடத்துங்கள்.
அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் குறைந்தது ஒரு நாளுக்கு 2,000 ரூபாயாவது இருக்க வேண்டும்.
அனைத்து ஜாதியினரும் பங்கேற்கும் அரசு வேலையாக அது மாற்றப்பட வேண்டும்.
பணி நிரந்தரம் ஊதிய உயர்வு போன்ற அடிப்படை கோரிக்கைகள் பற்றி அமைச்சர் ராஜ்மோகன் வாய் திறக்கவே இல்லை.
முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதில் இவர்களுக்கு என்ன தடை இருக்கிறது?
தொழிலதிபர்களும், முதலீட்டாளர்களும் கோட்டு சூட்டு பிரபலங்களும் மட்டும்தான் முதலமைச்சரை சந்திக்க முடியுமா?
அதற்கான உரிமை அவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா?
எத்தனை கார்கள் இருந்தாலும் அரசு காரில் செல்வது தான் கெத்து என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கெத்து காட்டத் துடிக்கும் ஆட்சியாளர்கள்; அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள்; இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க முடியாதா?
பார்ப்பனியமும் மனுதர்மமும் தான் சமூகத்தை இப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
@sunnews@Kalaignarnews@CMOTamilnadu@imrajmohan@arivalayam
கள்ளக்குறிச்சி அருகே வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டியை நகைகளுக்காக தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், திருநெல்வேலி - மணி மூர்த்திஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரை குடியிருப்பு பகுதியிலேயே தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் செய்தி வருகிறது.
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்கள், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என்னும் கேள்வியை எழுப்புகிறது. இத்தனை சம்பவங்களுக்குப் பிறகும், இன்னும் எத்தனை காலத்திற்கு சாக்குப்போக்குகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறது தவெக அரசு?
இப்ப உனக்கு என்ன வேணும்?
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர்னு நீங்க ஒப்புக்கணும்.
ஓஹோ! இப்படி உக்காரு. உன்கூட இருக்காங்களே கம்யூனிஸ்டுங்க! அவங்க ஒப்புகிட்டாங்களா?
இல்லே...
சரி! அரவிந்த் கேஜ்ரிவால்?
அவங்களுக்கே அந்த ஆசை இருக்கும் போலிருக்கு!
அப்படியா? அகிலேஷ் யாதவ்?
நல்ல மூட்லே இருக்கும் போது கேட்டுப் பார்க்கணும். கம்யூனிஸ்டுங்க சொல்றதைதான் கேட்பாரு.
சரி! மம்தா பானர்ஜி?
கையிலே கிடைக்கறதை தூக்கிட்டு அடிக்க ஓடியாரும் அந்தம்மா..
அந்த தேஜஸ்வி யாதவ்?
முதல்லே சப்போர்ட்டாதான் இருந்தான்! அவன் தேர்தலுக்கு நாங்க பண்ண செய்முறையை இதுக்குள்ளவா அவன் மறந்திருப்பான்! வாய்ப்பு கம்மிதான்.
சரத்பவார்ஜி?
நான் இருக்கும்போது எதுக்குப்பா புதுசா ஆளை தேடுறீங்க என்பார்.
ரைட்டு! உங்க சொந்த காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டியிலே அறிவிச்சாங்களா?
அந்தப் பெருசுங்க கிட்டே முட்டுறதுக்கு பதிலா மோடிகிட்டயே கதறி அழுது கேட்டுப் பார்க்கலாம்.
வேற யார்தான்யா ஏத்துக்கிட்டாங்க?
திமுக மட்டும்தான் நாங்க கேட்காமலேயே ஏத்துகிட்டு பொதுமேடையில் அறிவிச்சாங்க.
சபாஷ்! பதில் மரியாதைக்கு நீங்க என்ன பண்ணீங்க?
அவங்க தோத்தவுடன் 22 வருச கூட்டணியை ஒரே மணி நேரத்தில் முறிச்சு முதுகுலே குத்திட்டு ஓடி வந்துட்டோம்.
அடப்பாவிகளா! இதுக்கும் மேலயா உங்கள நம்பி இனி ஒருத்தன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர்னு சொல்லுவான்! போய்யா.. போய் இவங்க கொடுத்திருக்கும் ரெண்டு அமைச்சர் பதவிக்காவது விசுவாசமா இருந்து தொலைங்க..
கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? – சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை என, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுரியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம்–ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம்–ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
திமுக Safety பத்தி பேசுறவரு யாருன்னா
1999 மூப்பனார்
2001 கலைஞர்
2004 ஜனதா
2006 ஜெயலலிதா
2009 கலைஞர்
2011 ஜெயலலிதா
2016 விஜயகாந்த்
2021 தலைவர்
2026 தலைவர்
இப்போ SoFa பார்த்து விஜய் கிட்ட ஓடிட்டாரு.
பஞ்சதந்திரம் படத்துல கமல் கார் இடிச்சு பிரச்சனை ஆனவுடன், ஓடிப்போயி பிளாட்பார்ம்ல நின்னுகிட்டு வேடிக்கை பாக்குற ஸ்ரீமன் மாதிரி இருந்துட்டு இவரு திமுக Safety ய பத்தி பேசுறாரு.
ஒரு அமைச்சர் பதவிக்கே இவ்ளோ பேச்சா? @thirumaofficial
விசிகவில் மாநில நிர்வாகி இரண்டு நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் இறந்ததற்கு ஒரு இரங்கல் பதிவுகூட திருமாவிடமிருந்தோ, வன்னியரசிடமிருந்தோ வரவில்லை. எனக்கு ஒரே ஒரு கேள்வி கேட்கணும்… திருமாவிடமோ, வன்னியரசிடமோ இல்லை… @mkstalin சார் கிட்ட. சார், கொள்கைக் கூட்டணின்னு பத்து வருஷம் எங்களை விபூதி அடிச்சிருக்கீங்களே. இதே சம்பவம் உங்க ஆட்சியில நடந்திருந்தா? திருமா சும்மா இருந்திருப்பாரா? சங்கத் தமிழனை ஏவிவிட்டு ஒவ்வொரு YouTube சேனலிலும் உங்களைத் திட்டி விட்டிருப்பாரு. நல்லவரா இருங்க சார். ரொம்ப நல்லவரா இருக்காதீங்க!
சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்ததாக சி.விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு
#CVVijayabaskar#News18TamilNadu |https://t.co/rRJCTTegh9
எப்பா தலைமை தற்குறி உன் தற்குறி கும்பலுக்கு ரீல்ஸ் போடுற மாதிரி 3 பைல் இருக்கு 30 பைல் இருக்குன்னு எப்பவும் போல வீரவசனம் எல்லாம் பேசி கதை விட்டுட்டு போய்ட்டா இல்ல
இப்ப பாரு இந்தியாவின் மிக பெரிய பொருளாதார ஆளுமை நீ விட்ட கதை எல்லாம் டூபாக்கூர்ன்னு சொல்லிட்டாரு
இந்திய ஒன்றியத்திற்கு வழிகாட்டியாக வாழ்ந்துவந்த தலைவனை தமிழ் தாயின் மணிமகுடத்தை ஏழைகளின் ஒளி விளக்கை இந்த தமிழ் தேசத்தை உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ஒப்பற்ற தலைவனை தோற்கடித்த மக்கள் இன்று புரிந்து இருப்பார்கள் இந்த மனிதர்கள் மாணிக்கத்தையா தோற்கடித்தோம்
நீதிமன்ற உத்தரவு வந்தாலும், அதன் விளைவுகளைப் பற்றி அஞ்சாமல், “I am not afraid of the consequences” என்று கூறி தமிழ்நாட்டின் சிறுபான்மை சமூக மக்களுக்கும் சமூக அமைதிக்கும் அரணாக நின்ற மகத்தான தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல்.
ஆனால் இன்று?
தவெக அரசு பொறுப்பேற்று வெறும் மூன்று மாதங்களிலேயே, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பிரச்சினைகளில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் மன்றத்தில் தெளிவாக அறிவிக்க முடியாத ஒரு ஆட்சி!
புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கும் உரிய சலுகைகள் கிடைக்க வழிவகுத்த கடந்த திமுக அரசின் அரசாணையை, மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்தபோதும், அதுகுறித்து உடனடியாக ஒரு தெளிவான அறிக்கைகூட வெளியிடாத முதலமைச்சர். வாய்வீரர்களாக இருந்த அமைச்சர்களும் மௌனம்!
சிறுபான்மை சமூகத்தின் சார்பில் வாய்கிழியப் பேசும் முஸ்தபாவும், தாஹிராவும் எங்கே? சிறுபான்மைத் துறையின் அமைச்சராக இருக்கும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஷாஜஹான் எங்கே? ஒரு வார்த்தைகூட இல்லை. சில நாட்கள் கழித்து வந்து, “மேல்முறையீடு செய்கிறோம்” என்று சொல்வது மட்டும் போதுமா ?
இப்போது பக்ரீத் வந்தால் ஆடு, மாடுகளுக்குத் தடை என்று பேசுகிறார்கள். நாளை விடிந்த பிறகு என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது. ஆனால் சிறுபான்மைத் துறை அமைச்சரும், தாஹிராவும், முஸ்தபாவும் இன்னும் வாய்திறக்கவில்லை.
வெறும் மூன்று மாத ஆட்சியிலேயே, கடந்த ஆட்சியில் சிறுபான்மையினர் பெற்ற உரிமைகளையும் பாதுகாப்பு அரண்களையும் பாசிசத்தின் பல்வேறு வடிவங்கள் உடைத்தெறிய முயன்றபோது, வாய்பொத்தி வேடிக்கை பார்த்த இந்தக் கோழைகள் இன்று வந்து “சிறுபான்மை சமூகத்திற்கு திமுக என்ன செய்தது?” என்று கேட்பதுதான் அரசியலின் மிகப்பெரிய நகைமுரண்!
சிறுபான்மையினருக்காகப் பேசுவது வேறு. அவர்களின் உரிமைகள் தாக்கப்படும்போது துணிச்சலாக நின்று பாதுகாப்பது வேறு. அந்த வித்தியாசத்தை தமிழ்நாடு நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க அமைச்சர் மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?
அமைச்சர் ஆவதற்கு முன் ஆஜரானவர்,
பதவிக்கு வந்தபின் ஆஜராக மாட்டாரா?
தவெக அரசின் அமைச்சர் மரிய வில்சன் அவர்கள் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி.
100 நாளில் நடந்த மிகப்பெரிய #மாற்றம்,.
ஒரு ஆளுங்கட்சி சபாநாயகர் ,
ஆளும் MLA , அமைச்சர்களை பார்த்து , வாயிலேயே வடை சுடாமல் , மக்களுக்காக பேசுங்கள் என எச்சரித்து சொல்லியிருக்கிறார் ,
அடேங்கப்பா..👌💥👌
முதலமைச்சர் இல்ல !
முதன்மை செயலாளர் இல்ல !
துறை செயலாளர்கள் இல்ல !
என்ன தான் ஆட்சி இது ?
திராவிடத்தை வீழ்த்த ஃபாசிசத்தின் சூழ்ச்சி இது
நாம் பயந்த காட்சி இது !
கவர்ச்சி ஆட்சிக்கு சாட்சி இது !
ஜன நாயகத்தின் வீழ்ச்சி இது !