முன்னாள் முதல்வர் EPS மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் – யார் மக்கள் நலனில் உண்மையாக முனைந்தவர்?
#EPSvsStalin – ஒரு ஒப்பீட்டு தொடரில் பார்ப்போம். (1/10)
உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து பதிவிடவும் 👇
#ADMK#DMK
தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்!
மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது!
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு!
இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்!
ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும்.
தொற்று நோய் தடுத்து,
விவசாயம் செழிக்கச் செய்து,
கல்வியில் புரட்சி செய்து,
தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும்,
@AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும்,
உங்கள் பொன்னான வாக்குகளை
#இரட்டைஇலை சின்னத்திலும்,
#தாமரை சின்னத்திலும்,
#மாம்பழம் சின்னத்திலும்,
#குக்கர் சின்னத்திலும்
அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது!
சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும்.
அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
கடந்த ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் மூலம் கொள்ளை அடித்த பணத்தை வைத்து கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு மூக்குத்தி கொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என்று செந்தில் பாலாஜி திட்டமிட்டு வருகிறார். ஆனால் அது ஒருபோதும் நடக்காது!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
#Epsfor2026
நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம்.
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள்.
இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.
இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது?
தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது.
வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது.
பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
#சமூக_அநீதி_திமுகஅரசு
பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை மறைப்பதுதான் திராவிட மாடலா? பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அய்யா வைகுண்டர் அவதார நாள்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் வாழ்த்துச் செய்தி.
திருச்செந்தூர் கடற்கரை, சந்தோசபுரத்திற்கு தென்புறம் அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில், 'வள்ளியூர் அய்யாவழி அகிலதிருக்குடும்ப மக்கள் சபை பெரியவர்களால்' அய்யா வைகுண்டர் அவதாரபதி அமைக்கப்பட்டது. இந்த அவதார பதியில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 19 இரவு அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில் ஒன்றுகூடி, மாசி 20 அன்று அதிகாலை சூரிய உதயத்தில் பதமிட்டு அய்யா வைகுண்டர் அவதார காட்சியை கண்டு அருள் பெறுவார்கள்.
மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்கள் அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் அவதார காட்சி கண்டு அருள் பெறுவதற்கு வசதியாக உள்ளூர் விடுமுறையை அறிவித்தார்கள்.
அதன்படி இந்தாண்டு அய்யா வைகுண்டர் 194-ம் அவதார நாள் மாசி 20ம் நாள், (4.3.2026) நடைபெறவுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் அவதார நிகழ்வில் கலந்துகொண்டு பிறகு, கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கும் சென்று அய்யா அவர்களது திருவருளை பெறுவதற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் அனைவரும் அய்யா வைகுண்டர் அவர்களது திருஆசியை பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சமயத்தில் நான் கடந்த 22.1.2024 அன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு நேரில் வந்து, அய்யா வைகுண்டர் அவர்களது அருளாசியை பெற்றதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம்,
"மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை,
இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, @AIADMKOfficial தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி!
#என்றென்றும்_அம்மா
காரிய மங்கலத்தில் எடப்பாடியாரை வரவேற்க தவெக தொண்டர்கள் பேனர்கள் அமைத்தனர்..!!
திமுக அரசு மக்களின் கோபத்தால் முற்றிலும் சீர்குலைந்து கிடக்கிறது.
மக்களை ஏமாற்றிய திமுகக்கு மக்கள் 2026ல் சொல்லப்போவது ஒன்றே ஒன்று தான் – #ByeByeStalin@AIADMKITWINGOFL@EPSTamilNadu#ADMK_TVL
#AyudhaPooja and #VijayaDasami Wishes to All Digital Propagandists!
May our Digital Ayudhas-
Analytics, Algorithms and Strategy,
Wield our Leader the Victory
our state needs!
#EPSfor2026@EPSTamilNadu
2021 தேர்தலில் வெற்றி மமதையில் கொடி ஏற்றி வைத்த திமுக-வினரின் கொட்டத்தை அடக்கி, @AIADMKOfficial வெற்றிக் கொடியை நாட்டிய #கிணத்துக்கடவு தொகுதி மக்கள், 2026 தேர்தலிலும் இத்தொகுதியில் பறக்கப்போவது அண்ணா முகம் பொறித்த நம் கொடி தான் என்பதை சூளுரைக்கும் வகையில் பேரெழுச்சிமிக்க வரவேற்பளித்தனர்.
ஆட்சி இருக்கும் மமதையில் எள்ளி நகையாடும் விடியா ஆட்சியாளர்களுக்கு, எளியவர்களின் இயக்கமான அஇஅதிமுக, தமிழக மக்களின் துணையோடு 2026 தேர்தலில் தக்க பதிலை உரக்கச் சொல்லும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
#வால்பாறை தொகுதி மக்கள், ஆனைமலை பகுதியே அதிரும் அளவிற்கு ஆர்ப்பரிப்பான வரவேற்பு அளித்தனர்.
திமுக ஆட்சி தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டரில் இருக்கிறது.
எனவே, அதிகாரத் திமிரில் பேசுவோருக்கு, இன்னும் 7 மாதங்கள் தான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விழைகிறேன்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
@AIADMKOfficial
#பொள்ளாச்சி தொகுதிக்கே உரித்தான தித்திக்கும் இளநீர் போன்றே இனிமையான மக்கள், இன்முகத்தோடு வரவேற்றனர்.
சாமானிய மக்களைப் பற்றியே சிந்தித்து, அவர்கள் வாழ்வை வளமாக்கிய இயக்கம் @AIADMKOfficial.
2026-ல் அமையவுள்ள நமது அரசு, எளிய மக்களை ஏற்றம் பெறச் செய்யும் நல்லரசாகத் திகழும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
செப்டம்பர் முதல் வாரம் உளூந்தூர்பேட்டையில் political science மாணவர்கள் தங்கள் final year project க்கு எடுக்கப்பட்ட பொது சர்வேயின் முடிவு!!!
#EPSfor2026#DMKFailsTN
அண்ணன் @KumaraguruMla சொல்லி அடிப்பார் போல 2026ல்🔥
#ADMK#DMK#TVK#NTK