ஜாதி வாரிக் கணக்கெடுப்பின் மூலம் எவ்வளவு அளவு ஆதி தமிழர்களான பறையர்களும், தேவேந்திர குல வேளாளர்களும் "திராவிடத்தால்" ஏமாற்றப்படுகின்றனர் என்ற விளக்கம்.திராவிடம் உருவாக்கிய வர்ணாஸ்ர தர்மம்!!!
#DMKisRSS
ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான்; பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக திரைக்கலை பயின்ற நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் பொன்னாட்களாகும். பெரும்புகழ் பெற்ற ஏராளமான திரைக்கலைஞர்களை தமிழ்த்திரைக்கு தந்து வாழ்வளித்த மகாகலைஞனின் மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரைத்துறை மட்டுமின்றி என்னுடைய அரசியல் பயணம் வெற்றியடையவும் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி வாழ்த்திய பெருந்தகையின் மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள்ளத்தை மிகவும் பாதித்துள்ளது. இப்பெருந்துயரிலிருந்து மீள முடியாமல், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன்!
அப்பா பாரதிராஜாவை இழந்து பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவிவாழும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
This is not the first time Kerala has dumped its waste in Tamil Nadu. @xpresstn and other media outlets reported some such incidents, but 100s went unreported.
Some past incidents:
Meat waste from a Kerala slaughterhouse was discarded in open place in Thanakkarkulam panchayat of Tirunelveli district in Tamil Nadu. Truck was just fined, not seized. Culprits not arrested.
TVK government made its first arrest of a social media user in Tirunelveli -James Raja for vulgar videos attacking CM. However, there's a clear difference with Maridhas, who levelled various allegations against the State govt. Maridhas' arrest is not justifiable.
தம்பி மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்! அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்தும் பாசிசப்போக்கு!
@CMOTamilnadu@TVKVijayHQ
ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.
தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.
ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
#ReleaseMaridhas
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அறப்போர் புகாரில் மின்சார வாரியத்தில் திமுக ஆட்சியில் நடந்த ரூ 397 கோடி மின்மாற்றி ஊழலில் சிபிஐ தங்கள் விசாரணையை துவங்கும் நேரத்தில் மின்மாற்றி கொள்முதல் துறையான material management துறையில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஆதாரங்களை அழிக்கும் குற்ற செயல். மேலும் பல முறைகேடுகள் சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் திருடப்பட்டு இருக்கலாம். யார் திருடினார்கள் என்பது மட்டும் கண்டறிந்தால் போதாது. இந்த திருட்டுக்கு பின் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட வேண்டும். அந்த ஹார்ட் டிஸ்க்குகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். திருடியவர்கள் யார் என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்து அவர்களுக்கு துரிதமாக தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இன்றைய தினம் அறப்போர் இயக்கம் கனிமவளத் துறை அமைச்சர் திரு TK பிரபு அவர்களை சந்தித்து மூன்று மனுக்களை கொடுத்தோம். மூன்று மனுக்களின் சாராம்சம் இதோ
1. அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையிலும் அரசாங்கத்திலும் 2024 ஆம் ஆண்டு கொடுத்த திமுக அரசின் ரூபாய் 700 கோடி திருநெல்வேலி கல்குவாரி ஊழல் மீது கிரிமினல் நடவடிக்கையும், கனிமவள இழப்பை மீட்கும் அபராத நடவடிக்கையும் உடனடியாக எடுக்க வேண்டும். அறப்போர் புகாரில் FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
2. கடந்த ஆட்சியில் ஜனவரி 2026 இல் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட GO(Ms) No 2026 One Time Regulairization scheme அரசாணையை புதிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். திரும்ப பெறுவதன் மூலம் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு ஏற்பட இருக்கும் வருமான இழப்பு தடுக்கப்படும்.
3. புதிய ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல் குவாரிகளையும் சர்வே எடுத்து, விதிமீரும் கல்குவாரிகள் அனைத்தும் சட்டப்படி மூடப்பட்டு, இழந்த பணத்தை மீட்டெடுத்து, அரசின் வருமானத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய குவாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் பொது ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு கல்குவாரி அனுமதி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். இ பாஸ் என்ற பெயரிலே நடந்து வரும் மோசடி பாஸ் முறையை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எடை மேடை மற்றும் செக் போஸ்ட்களில் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு மெட்ரிக் டன்னும் மொத்த அனுமதியில் கழியும்படி உண்மையான இ-பாஸ் முறை கொண்டுவரப்பட வேண்டும்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளுடன் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் சில கல்குவாரிகளில் ஆய்வு செய்து அவை தற்காலிகமாக மூடப்பட்டது வரவேற்கத்தக்கது.
அமைச்சர் அறப்போர் மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.
அறப்போர் தொடரும்!
Tenkasi Iyarkai Vala Paathugappu Iyakkam announces protests at Tamil Nadu-Kerala border condemning accidents by mineral vehicles and demanding to control number of vehicles transporting mineral to neighbouring State
விரைவில்!
இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்,
தொடரும் கனிமவள வாகனங்களால் உயிரிழப்புகள் – பொதுமக்கள் இயல்பு வாழ்வு கடும் பாதிப்பு!
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு நாள்தோறும் அளவுக்கு அதிகமாக இயக்கப்படும் கனிமவள வாகனங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ச்சியாக ஏற்படும் விபத்துகள் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்து வருகின்றன.
இப்பிரச்சினை குறித்து பலமுறை தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, இந்த வாகனங்களால் தொடரும் உயிரிழப்புகளை தடுக்கவும், அளவுக்கு அதிகமாக கேரளாவிற்கு செல்லும் கனிமவள வாகனங்களை கட்டுப்படுத்தவும்,
இயற்கை வள பாதுகாப்புச் சங்கத்தின் தலைமையில் சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, தமிழக–கேரள எல்லையில் வருகிற சில தினங்களுக்குள் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவண்,
இயற்கை வள பாதுகாப்புச் சங்கம்.
இசைஞானி வயிற்றில் உதித்த “சுந்தரர்” அருளியது தேவாரம்.
நமது இசைஞானி நமக்கு அருளியது தமிழ் இசை எனும் தேவ அமிர்தம்.
பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் நீங்கள்.
நன்றி
அன்புடன்
அர்ச்சுன்.
@ilaiyaraaja
இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்..!
இசையில் உருவெடுத்த உலகின் முதல் தத்துவம்!
உலக இசை வரிசையில் தமிழுக்கு முகவரி பெற்றுத் தந்த தனித்துவம்..!
மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் இசை வடிவம் கொடுத்த இசைக் கடவுள்! தம் கைவிரல் மீட்டிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் கொட்டிக் கிடக்கும் இசை நுணுக்கங்களால் துயரில் தவிக்கும் மனிதனை, உடைந்து கிடக்கும் மனதினை, காதலால் கசிந்து உருகும் விழிகளை, அன்பால் நெகிழ்ந்து உறையும் ஆன்மாவை, இசை என்ற இன்ப உலகிற்குள் காற்றில் மிதந்தபடி, கைபிடித்து அழைத்துச் செல்லும் எங்கள் ஐயா இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
உலகிற்கே இன்னிசை புகட்டும் தமிழினத்தின் பெருமைமிக்க அடையாளம் இசைஞானி இளையராஜா அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலனுடனும், உள நிறைவுடனும் மகிழ்வாக வாழ்ந்து, அவருக்குள் ஊற்றெடுக்கும் வற்றா இசை அமுதத்தை வாரி வழங்கி, எங்கள் வாழ்வினை அவரது இசை அருளால் நிறைக்க வேண்டும் என இப்பிறந்த நாளில் உளமார வாழ்த்துகிறேன்.
ஈடு இணையற்ற இசை மேதை, இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
@ilaiyaraaja
குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!
திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்...!
திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!
உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!
குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!
இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்...
தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, மாநில வழக்கறிஞர் பாசறையின் துணைச் செயலாளர் அன்புத்தம்பி ப.ரஜீஸ்குமார் அவர்களின் தந்தை ஐயா ச.பன்னீர்செல்வம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா ச.பன்னீர்செல்வம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி திரைக்கலைஞர் அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் அம்மா மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்யவியலாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அன்புச்சகோதரருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.
அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
தமிழ்ப்படைப்புலகின் மகத்தான திரைக்கலைஞன்! பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற படைப்பாளி! மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுகொண்டு நிற்கும் இனமான இயக்குநர்! என் பேரன்பிற்கினிய இளவல் அன்புத்தம்பி சேரன் அவர்களின் தாயார் பாசத்திற்குரிய அம்மா கமலா பாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயின் மறைவென்பது ஈடு செய்ய இயலாப் பேரிழப்பு; தாங்கொணாத் துயரம். அந்தத் தாயை இழந்துப் பெருந்துயரத்திற்கு ஆட்பட்டு நிற்கும் தம்பியின் நிலைகண்டு உடன்பிறந்தவனாய் மனம் கலங்குகிறேன். இக்கொடுந்துயரிலிருந்து மீண்டுவர மூத்தவனாய் தம்பியோடு இத்தருணத்தில் உடன்நிற்கிறேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா கமலா பாண்டியன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
@CheranDirector
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
"உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர் ஓர்மைக்கு அரசியல் இயக்கம் கண்ட தமிழ்த்தேசியர்..!
‘தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கி பாமரரும் உலகியலை அறியும் வகையில் எளிமையான உரைநடையில் செய்திகளை வழங்கி வாசிப்புத்திறனை வளர்த்தெடுத்த பெருமகன்..!
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் உச்சத்தில் இருந்த காலத்தில் எதற்கும் அஞ்சா நெஞ்சுரத்தோடு விடுதலைச் செய்திகளை வெளியிட்டு உண்மைகளை உலகறியச் செய்த தீரர்..!
இந்தித்திணிப்பு எதிர்ப்புப்போரில் பங்குகொண்டு சிறைப்பட்ட மொழிப்போர் வீரர்..!
தமிழீழ விடுதலையை முழுமையாக ஆதரித்து தமிழ்நாட்டிலிருந்து முதன்மை குரல் கொடுத்த தனிப்பெருந்தலைவர்..!
கபடி, சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் தொன்ம விளையாட்டுகள் அழிந்துவிடாது காத்து அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தும் அரும்பணியாற்றிய பெருந்தகை..!
பரந்து விரிந்த இப்பூமிப்பந்தில் தமிழர்க்கென்று ஒரு தேசம் வேண்டுமென்ற உன்னத கனவைச் சுமந்து,
சாதி- மத சகதியில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்டெடுத்து ‘நாம் தமிழர்’ எனும் அரசியல் பேரியக்கத்தைக் கட்டியெழுப்பிய எங்களின் முன்னத்தி ஏர்..!
காலச்சூழலில் அவ்வியக்கத்தைத் தொடரமுடியாது போனபோது, ‘வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்!’ என்று தன்னுடைய ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த இலட்சியத் தாகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு பேரறிவிப்பு செய்து வழிகாட்டிய காலஞானி..!
நாம் தமிழர் கட்சியின் நிறுவனர்!
தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுகிற இந்நாளில், இன விடுதலை எனும் உயரிய இலக்கை அடைய இடையறாது பாடுபடுவோம் என உறுதியேற்போம்!
நாம் தமிழர்!
வைகாசி 10 | 24-05-2026