என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@Kaka_offic எங்கள் தலைவர் கிட்ட கொடுத்த வாக்கை காப்பாத்துகிற ஒரு அடையாளம் இருக்கு உங்கள மாதிரியா கழுகு னு சொல்லிட்டு ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிகிறது #நிச்சயம்வருவேன்தேதிபின்னர்அறிவிக்கப்படும் என்னெல்லாம் படம் கட்டுனீங்க டா தமிழகத்தில் அதிக ஏமாளிகள் கொண்ட கூட்டம் நீங்கள் மட்டுமே @TVKVijayHQ
தமிழக வெற்றி கழகத்தில் மதிப்பிற்குரிய முன்னாள் மதுரை மாவட்ட கலெக்டர் திரு சகாயம் அவர்களையும் இணைந்து பயணித்தால் நம்முடைய வெற்றி மிகப் பிரமாண்டமாக அமையும்
@actorvijay@tvkvijayoffl
நடிகர் நடித்த சூர்யா படங்களை புறக்கணிக்கப்பது, விமர்சனம் செய்வது அவரவரவர் தனிப்பட்ட விருப்பம், ஆனால் அவரை நாங்க எல்லாம் சமூக ஒதுக்கல் செய்து விட்டோம், என்பதும் அவர் படம் தோல்வியடைய வேண்டும் என்று அவரை குறித்து பொய்ச் செய்தி பரப்புவதும் பச்சையான அயோக்கியத்தனம்,
ஜெய்பீம் படத்தில் அவர் நடித்தார் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட ஜாதி அவர் மீது வன்மத்துடன் அழைகிறது, அதே போல அவரது மனைவி ஜோதிகா கோவிலுக்கு கொடுக்கும் பணத்தை கல்விக்கு செலவிட வேண்டும் என்று சொன்னது இந்த சங்க் பரிவார் கும்பலுக்கு வெறுப்பை கொடுத்துள்ளது,
இன்று இந்த இரண்டு கும்பலும் தான் அவரை சிறுமைப்படுத்துகிறது, ஜாதியவாதமும் மதவாதமும் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு அவரை இழிவாக விமர்சிப்பதை நாம் அனுமதிக்க கூடாது,
அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் என்னற்ற மாணவர்களை அவர் படிக்க வைக்கிறார், இவர்கள் செய்யும் வெறுப்பு பிரச்சாரத்தை எதிர்த்து இங்கு கட்டாயம் நாம் சூர்யாவை ஆதரிக்க வேண்டும்.
@Saattaidurai முதலில் நீங்க திருந்துங்க பாய் அப்பரம் வந்து எங்கள தீருத்தலாம் பாத்து பாய் உங்கஓனர்கோவித்துகொள்ளப் போகிறார் #இதுவலிவேறடிபார்ட்மெண்ட் நம்மைவிடஇவர்களுக்குஎப்படிஇவ்வளவு வரவேற்புகிடைக்கிறதுஎன்றுஉங்கள் வாழ்நாளில்இதுவரையிலும்இனியும் இதுபோன்றஒருவரவேற்பையும் ஆரவாரத்தையும்பார்க்கமுடியாது