TVK - TamilagaVettrikazhagam
தவெக - தமிழக வெற்றிக் கழகம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
Official Fans Page @actorvijay @TVKvijayHQ
Follow This Account page
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கரகஅள்ளி சுங்க சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை
கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வெற்றிக் கழகத் தோழர்களை காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களுக்காக தமிழக வெற்றிக் கழகம் என்றென்றும் களத்தில் நிற்கும்.
அராஜக போக்குடன் கைது செய்யப்பட்ட கழகத் தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரைக் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்து, கழகத்தில் உறுப���பினர் சேர்க்கை, மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா எனத் தமிழக வெற்றிக் கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அரச���யல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாகச் சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷமக் கருத்துகளைத் திணிக்கும் பணியைச் செய்து வருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களால் அல்லது அவரின் ஒப���புதலோடு தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே அதிகாரப்பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக���கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளைத் தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஜனநாயகம் என்ற அ��சியலமைப்பின் அடிப்படைக் கூறுகளை முன்வைத்து, புதியதோர் மக்கள�� அரசியலுக்கான அடித்தளத்தை இட்டுள்ளது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா. மக்களோடு இணைந்து, அவர்கள் அரசியலைப் பறைசாற்றிய மாபெரும் மாற்றத்திற்கான மற்றொரு தொடக்கம் இந்த விழா. வரலாற்று நாயகர்கள் யாரும் பிறப்பால் உருவாகுவதில்லை. மக்களோடு உழைக்கிறார்கள், மக்களுக்காகக் களத்தில் போராடுகிறார்கள், பிறகு, மக்கள் உரிமைக் கொண்டாடும் ஜனநாயகன் ஆகிறார்கள். இதன்மூலமே, மக்கள் வரலாறு படைக்கப்படுகிறது.
(1/4)