ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?
#StateRights
கழக இளைஞர் அணிச் செயலாளர்- மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் முன்னெடுப்பில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் #திமுக75_அறிவுத்திருவிழா-வின் ஒரு பகுதியான ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ இருநாள் கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வு - 2 தொடங்கியது.
தலைமை - திரு. கோவி.லெனின், கழக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர்
அண்ணா வழியில் அயராது உழைப்போம் - திரு. செ.சஞ்சய், கழக இளம் பேச்சாளர், தூத்துக்குடி
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் - திரு. அ.தா.டெக்சின் ரொமேரியோ, கழக இளம் பேச்சாளர், சென்னை
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் - திருமிகு. ர.அகிலா கழக இளம் பேச்சாளர், நாகப்பட்டினம்
வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம் - திருமிகு. ரா.ரேவதி கழக இளம் பேச்சாளர், தென்காசி
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி - திருமிகு. சூ.க.தாரணி கழக இளம் பேச்சாளர், ஈரோடு
Warm birthday wishes to my dear brother Thiru @Yadavtejashwi, a true champion of social justice from the land of Bihar. The people of Bihar place their hopes for a brighter future in your leadership.
Your unwavering commitment to secularism and equality inspires younger generation. Wishing you good health, happiness, and continued success in public life.
#TejashwiYadav
விவசாயிகளுக்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்!
எடப்பாடி பழனிசாமி தஞ்சை மண்ணில் பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய திட்டமிடுகிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழ்நாட்டில் டெல்டாக்காரரான திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சி நடக்கிறது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#DMK4TN #DyCMUdhay
நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!
மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.
நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் #RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!
#MahatmaGandhi
கூட்ட நெரிசலில் சிக்கி கரூரில் 40-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் கரூருக்கு வருகைபுரிந்தார். உயிரிழந்தோரின் உடல்களுக்கு கரூர் அரசு மருத்துவமனையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நெரிசலில் இருந்து மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பின்பு, மாண்புமிகு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்கிட ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வுகளின்போது, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களோடு உடனிருந்தோம்.
மக்களைத் தேடி அரசு சேவைகள் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் #உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
இன்றைய தினம், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி - @Chennaicorp மண்டலம் -15, வார்டு 195, துரைப்பாக்கத்தில் நடைபெற்ற முகாமுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் சேவைகளை ஆய்வு செய்தோம்.
பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று முகாமில் இருந்த பணியாளர்களை அறிவுறுத்தினோம். முகாம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களையும் - ஆலோசனைகளையும் பெற்றோம்.
கூடிக் கலையும் கூட்டமல்ல, இது தி.மு.கழகத்தின் கொள்கைக் கூட்டம் என்பதை உறுதி படுத்தும் வகையில் கொட்டும் மழையிலும், கழகத்தின் முப்பெரும் விழா கரூரில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது!
‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!’ என்று விண்ணதிர ஒலித்த கழக உடன்பிறப்புகளின் கொள்கை முழக்கம் 2026-தேர்தல் வெற்றிக்குத் தொடக்கமாக விளங்கட்டும்!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#முப்பெரும்விழா2025 @arivalayam
கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் , @dmk_youthwing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்தவகையில், சென்னை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்!
தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கழகப் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam@Subramanian_ma@Joel_Dmk@PrabhakarRaja88
ஆண்களுக்கு நிகராக கல்வி - வேலைவாய்ப்புகளைப் பெற்று, பெண்களும் பொருளாதார சுதந்திரம் அடையவேண்டும் எனும் தந்தை பெரியாரின் லட்சிய கனவை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் நம் #திராவிடமாடல் அரசு சாத்தியமாக்கியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆண்டாப்பட்டு ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுடனான சமீபத்திய சந்திப்பில், ‘கந்துவட்டி பிரச்சினை தீர்ந்திருக்கிறது, கல்வி - மருத்துவம் - தொழில் என எங்கள் குடும்பத்தின் எல்லா தேவைகளையும் நாங்களே பூர்த்திசெய்துகொள்வதற்கான பொருதாளார சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம்’ என அரசின் மகளிர் நலத்திட்டங்களைப் பட்டியலிட்டு, சுய உதவிக்குழு சகோதரிகள் மகிழ்ச்சியுடன் விவரித்தனர்.
மகளிர் நலனே, மாநில நலன் என செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு, இன்னும் பல லட்சம் மகளிரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து துணை நிற்கும்!
#DMK4Women
வேளாண் துறைக்கு அடுத்தபடியாக மிக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வாழ்வளிப்பது MSME-க்கள்தான்!
அத்துறைக்கு, கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் போன்று இருமடங்கு நிதியாக ரூ.6,626 கோடியை நான்கே ஆண்டுகளில் ஒதுக்கி ஊக்கமளித்துள்ளது நமது #DravidianModel அரசு.
தொழில்நுட்பங்களையும், அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயரவும் தொடரவும் #MSME நிறுவனங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்!
#ACMEE2025
இயக்கத்தின் முதன்மை அணியாம் கழக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு, சமூக வலைத்தளப் பயிற்சியளிக்கவும் அவர்களின் சமூக வலைத்தளம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்கவும் தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன், கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், கழக மாவட்டத்துக்கு ஒருவர் என அனைத்து மாவட்டங்களிலும் @dmk_youthwing துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். கழக மாவட்ட வாரியாக அவர்களை நேர்காணல் செய்து வருகிறோம்.
அந்த வகையில், இன்றைய தினம், விழுப்புரம் வடக்கு-விழுப்புரம் மத்திய-விழுப்புரம் தெற்கு மாவட்ட சமூக வலைத்தளத் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களை, மாநில துணைச் செயலாளர் சகோதரர் @AbdulmalikDmk முன்னிலையில் நேர்காணல் செய்தோம்.
அவர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களைப் பார்வையிட்டு-அவர்கள் இதுவரை ஆற்றியுள்ள கழகப் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்கள் கொண்டு வந்திருந்த ஆவணத் தொகுப்புகளையும் ஆய்வு செய்து, கழக பணி சிறக்க வாழ்த்தினோம்.
#கழக_இளைஞர்_அணி @DinakaranJ1976@anand3kannan
1 லிட்டர் 10 ரூபாய் கொடுத்த ஆட்சி தான் இந்த அடிமை அதிமுக ஆட்சி 🙇♂️🙇♂️
அதே ஒரு லிட்டர் தண்ணிய மக்களுக்கு 24 மணி நேரம் இலவசமா வழங்கும் திராவிட மாடல் ஆட்சி ⚫️🔴
இதுதான் அடிமைக்கும்
ஆளுமைக்கு உள்ள வித்தியாசம்
#DMK4TN
அன்னை மடியில் விளையாடி அறிவு பெற்றிடும் குழந்தைகளென, மாணவச் செல்வங்களைத் #தமிழோடு_விளையாடு எனத் தமிழ்ச்சுவை அறிய வைத்து, தனித்தமிழ் உணர்வு ஏற்படுத்திய @kalaignartv_off குழுவினரைப் பாராட்டி, வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களை வாழ்த்தி மகிழ்ந்தேன்!
தமிழோடு விளையாடிய அவர்கள், தமிழின் இனிமையை - தொன்மையை - வளமையைத் தங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து தமிழுணர்வு வளர்த்திட வேண்டும்!