நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரியலூர் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்,அரியலூர் புறவழிச்சாலையில் அமைந்துள்ள ரிதன்யா மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை நமது மாவட்டத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடுவது குறித்தும், கழகத்தின் அடுத்தகட்ட ஆக்கப் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசித்தோம்.
இந்நிகழ்வில் மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றனர்.
கழகப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம், ஒருங்கிணைந்து செயல்படுவோம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் மரியாதைக்குரிய @Udhaystalin ஆகியோரின் முன்னிலையில் இன்று (17.02.2026) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்றோம்.
மாண்புமிகு நிதியமைச்சர் அண்ணன் @TThenarasu அவர்கள் தமிழ்நாடு அரசின் 2026-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையையும், மாண்புமிகு உழவர் நலத்துறை அமைச்சர் அண்ணன் @MRKPanneer அவர்கள் இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.
திராவிட மாடல் அரசின் நோக்கத்தின்படி, அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய சிறப்பான நிதிநிலை அறிக்கையாக இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
கழக இளைஞரணியை உருவாக்கி, தந்தையாக வழிநடத்தி, இன்றைக்குத் தலைவராகத் தொடர்ந்து ஊக்கமளித்து
கிளை-வார்டு-பாகம் வரை நிர்வாகிகளை நியமிக்க அனுமதி வழங்கி, தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வெற்றிச் சந்திப்பாக அமைந்திட உடன் நின்ற கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
விருதுநகரில் திரண்டு வந்த இளம் நிர்வாகிகள் இடையே எழுச்சி உரையாற்றி, தனித்தன்மையோடு உழைக்க வேண்டும் என ஆணையிட்டிருக்கிறார் கழகத் தலைவர் அவர்கள்.
தமிழ்நாடு vs NDA என்ற ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வென்றிட, கழகத் தலைவரின் மூத்த பிள்ளையான @dmk_youthwing , அவரது கண்ணசைவையே கட்டளையாகக் கருதி கண்துஞ்சாது உழைக்கும் என்று உறுதியேற்போம்!
#Youth4DMK2026
Congratulations to the bold, brave, and brilliant Indian Women’s Cricket Team for lifting our maiden ICC Women’s World Cup 2025 after a spectacular victory over South Africa!
Our champions have scripted history and made the entire nation immensely proud.
This triumph will forever shine as a glorious chapter in Indian cricketing history. Keep rocking, Team India's women champions.
#ICCWomensWorldCup2025 #TeamIndia #WomenInBlue
கரூரில் கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்த செய்திகேட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின் பேரில், நேற்று (27.09.2025) இரவு உடனடியாக கரூர் விரைந்தோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கரூரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களிடம் நலம் விசாரிக்கவும் கரூருக்கு வருகைபுரிந்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி உத்தரவுகளை வழங்கியபோது, அவரோடு உடனிருந்தோம்.
இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை… #KarurTragedy
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை வாலாஜா சாலை அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் திருவுருவப்படத்துக்கு இன்று மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
அண்ணா வழியில் அயராது உழைத்து என்றும் தமிழ்நாட்டின் சுயமரியாதை காப்போம்!
#RememberingAnna
தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டிய தன்மானத்தின் தலைமகன், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள்!
‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தின் வழியே, மாநில உரிமைகளுக்காக ஓயாது ஒலித்த அந்தக் குரலின் வழிவந்ததே நமது திராவிட மாடல் அரசு. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் தலைமையில், அண்ணாவின் கனவான ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும்’ அரசு நடைபெற்று வருகிறது.
அண்ணாவின் வழியில் நமது பயணம் தொடரும்.
#RememberingAnna
#ஓரணியில்_தமிழ்நாடு