திருச்செந்தூரில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட ஆய்வில்..
திருச்சி, திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சக்கர நாற்காலி தள்ளுவதற்கு 100, 200 ரூபாய் என பணம்பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்தார். நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. அதிரடி
அமைச்சர் ரமேஷின் இன்றைய திருச்செந்தூர் ஆய்வில் | VIP தரிசனத்துக்காக அமைச்சரென்று தெரியாது அவரிடமே 4,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு அர்ச்சகர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அதேசமயம், அந்த அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்படாது, மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி, அனுப்பப்பட்டிருக்கிறார்கள். எச்சரித்து
கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம். அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக்கடிதம்!
இரண்டு பேரும் வாங்கியது இலஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு?
எல்லோருக்கும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும். ஏன் அது ஆட்களைப் பொறுத்து மாறுபடுகிறது?
இடும்பாவனம் கார்த்திக்,
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
7000 மெட்ரிக் டன் குப்பைகளை கல் குவாரியில் புதைக்கலாம் எனும் மிக ஆபத்தான யோசனையை சொல்லுகிறார் திருவெறும்பூர் த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி.
வெளிப்படையாகப் பார்க்கும்போது, "பள்ளம் தானே, குப்பையைக் கொட்டி மூடினால் இடம் சுத்தமாகிவிடும்" என்று தோன்றலாம். ஆனால், அறிவியல் ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் மிக மிக மோசமானவை.அதில் மட்கிய குப்பைகளும் இருக்கும், மட்காத நச்சுக் கழிவுகளும் இருக்கும். இதை அப்படியே புதைப்பது என்பது எதிர்காலத் தலைமுறைக்கு நாம் வைக்கும் 'டைம் பாம்' (Time Bomb) போன்றது.
"இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் நச்சுத்தன்மையாகும் (Leachate Contamination)."
50 ஆண்டு காலக் குப்பைகளில் பிளாஸ்டிக், பேட்டரிகள், மின்னணுக்கழிவுகள் (E-waste), இரசாயனங்கள் மற்றும் மட்கும் குப்பைகள் என அனைத்தும் கலந்திருக்கும்.
இவற்றுடன் மழைநீர் சேரும்போது, 'லீச்சேட்' (Leachate) எனப்படும் கரிய நிற நச்சுத் திரவம் உருவாகும்.
பாறைகளில் இயற்கையாகவே விரிசல்களும் (Fissures) துளைகளும் இருக்கும். 1200 அடி என்பது மிக ஆழமான பகுதி என்பதால், இந்த நச்சுத் திரவம் மிக எளிதாக அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த நிலத்தடி நீர்மட்டத்திலும் (Aquifers) கலந்துவிடும்.
இதனால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு கிணற்று நீர் மற்றும் ஆழ்துளைக் கிணற்று நீர் (Borewell water) குடிக்கவோ, விவசாயம் செய்யவோ தகுதியற்றதாக மாறிவிடும்.
இதற்குச் சரியான மாற்று வழி என்ன?
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் இந்த மலை போன்ற குப்பைகளை அகற்ற 'பயோ-மைனிங்' (Bio-mining) மற்றும் 'பயோ-ரெமிடியேஷன்' (Bioremediation) ஆகிய முறைகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.குப்பைகளை சரியாக தரம் பிரித்து ஆக்கபூர்வமாக மறுசுழற்சி செய்யும் போது மீத்தேன் போன்ற எரிவாயுக்களை தயாரித்து நாம் பயன்படுத்தலாம். நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் முன் வைத்தது.
வெகு சில இடங்களைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குப்பை கிடங்குகளிலும் மறுசுழற்சி நடைபெற்றது போல் பொய்யாக கணக்கு காண்பித்து கான்ட்ராக்டர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். துறை சார்ந்த அதிகாரிகளும் அமைச்சர்களுமே அதற்குப் பொறுப்பு. இந்நிலையை சரி செய்ய சுற்றுச்சூழல் விதிகளின்படி நேர்மையான திடக்கழிவு மேலாண்மையை இந்த புதிய அரசு உறுதிப்படுத்த வேண்டும். நெகிழி பைகளுக்கு நிரந்தர தடை உள்ளது. ஆனால் அது தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. அதைச் செய்ய வேண்டும்.
இது ஏதும் செய்யாமல் அந்த நபர் கூறும் யோசனை சுற்றுச்சூழலுக்குப் பேரழிவை ஏற்படுத்தும். குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டிப் புதைப்பது தீர்வாகாது.அதை அறிவியல் பூர்வமாகத் தரம் பிரித்து அழிப்பதே (Zero Waste Management) மண்ணுக்கும், மக்களுக்கும் நல்லது.
பல ஆண்டு குப்பைகளை, ஆழமுள்ள ஒரு பாறைப் பள்ளத்தில் (குவாரியில்) கொட்டிப் புதைப்பது என்பது முற்றிலும் தவறான, ஆபத்தான மற்றும் சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிரான ஒரு யோசனை. இதை ஒரு தனி நபர் செய்யும் பட்சத்தில் ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் இது. கோடிக்கணக்கில் தண்டம் கட்ட வேண்டிய குற்றம் இது.
7000 மெட்ரிக் டன் (அதாவது 70 லட்சம் கிலோ) குப்பைகள் என்பது மிக மிகப் பிரம்மாண்டமான அளவு. இவ்வளவு பெரிய அளவிலான குப்பைகளை எந்தவித பாதுகாப்பு உள்கட்டமைப்பும் இல்லாத ஒரு பாறைப் பள்ளத்தில் புதைப்பது என்பது சுற்றுச்சூழல் ரீதியாக அந்தப் பகுதிக்கே நேரிடக்கூடிய ஒரு மிகப்பெரிய பேரழிவு (Environmental Disaster) ஆகும். உலகில் எந்த நாடுகளும் இது போன்ற ஒரு முயற்சியை செய்யாது. ஏனென்றால் அங்கு இருக்கிற மக்களின் பிரதிநிதிக்கு மனசாட்சி இருக்கிறதோ இல்லையோ அறிவு என்ற ஒன்று கொஞ்சமாவது இருக்கும்.
ஏற்கனவே democracy disaster நடைபெற்ற தமிழ்நாட்டில் தான் இதுபோன்ற environmental disaster நடக்க வாய்ப்பு உள்ளது.
குப்பையை அப்படியே பாறையில் கொட்டி மூடுவது என்பது பிரச்சினையைத் தீர்ப்பது அல்ல; அதை பூமிக்கு அடியில் ஒளித்து வைத்து, ஒரு பெரிய ஆபத்தாக வளர்ப்பது போன்றது.
- வருண் சுப்ரமணியம் (@sssvarun22)
இணை செயலாளர், சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி.
@NTKEnvWing
TVK மீதும் விஜய் அவர்கள் மீதும் விமர்சனம் உள்ளது ஆனால் இன்று கைது செய்யப்பட்ட "ஜேம்ஸ்" என்கிற நபர் பேசுவது விமர்சனம் அல்ல ஆபாசம்.
விமர்சனத்திற்கும் Abusive Behavior-க்கும் வித்யாசம் உள்ளது.
நான் 2009 இல் இருந்து தமிழ் நாட்டின் அரசியலையும், மக்களின் போக்கையும் கவனிக்கிறேன்…
எவ்வளவு நாம் மக்களுக்கு அருகில் நின்று அவர்களுக்காக போராடினாலும்,
தன்னை ஆளுகிற தகுதியை தகுதியற்றவர்களுக்கு மட்டுமே கொடுக்கும் இந்த கேடுகெட்ட சனம், நன்றி கெட்ட தனமாக மட்டுமே நடந்து கொள்ளும்⚠️
"உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர் ஓர்மைக்கு அரசியல் இயக்கம் கண்ட தமிழ்த்தேசியர்..!
‘தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கி பாமரரும் உலகியலை அறியும் வகையில் எளிமையான உரைநடையில் செய்திகளை வழங்கி வாசிப்புத்திறனை வளர்த்தெடுத்த பெருமகன்..!
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் உச்சத்தில் இருந்த காலத்தில் எதற்கும் அஞ்சா நெஞ்சுரத்தோடு விடுதலைச் செய்திகளை வெளியிட்டு உண்மைகளை உலகறியச் செய்த தீரர்..!
இந்தித்திணிப்பு எதிர்ப்புப்போரில் பங்குகொண்டு சிறைப்பட்ட மொழிப்போர் வீரர்..!
தமிழீழ விடுதலையை முழுமையாக ஆதரித்து தமிழ்நாட்டிலிருந்து முதன்மை குரல் கொடுத்த தனிப்பெருந்தலைவர்..!
கபடி, சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் தொன்ம விளையாட்டுகள் அழிந்துவிடாது காத்து அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தும் அரும்பணியாற்றிய பெருந்தகை..!
பரந்து விரிந்த இப்பூமிப்பந்தில் தமிழர்க்கென்று ஒரு தேசம் வேண்டுமென்ற உன்னத கனவைச் சுமந்து,
சாதி- மத சகதியில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்டெடுத்து ‘நாம் தமிழர்’ எனும் அரசியல் பேரியக்கத்தைக் கட்டியெழுப்பிய எங்களின் முன்னத்தி ஏர்..!
காலச்சூழலில் அவ்வியக்கத்தைத் தொடரமுடியாது போனபோது, ‘வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்!’ என்று தன்னுடைய ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த இலட்சியத் தாகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு பேரறிவிப்பு செய்து வழிகாட்டிய காலஞானி..!
நாம் தமிழர் கட்சியின் நிறுவனர்!
தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுகிற இந்நாளில், இன விடுதலை எனும் உயரிய இலக்கை அடைய இடையறாது பாடுபடுவோம் என உறுதியேற்போம்!
நாம் தமிழர்!
வைகாசி 10 | 24-05-2026
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? - சீமான் கடும் கண்டனம்
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் அருகே 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள செயல் மிக கொடூரமானது .
குற்றவாளியை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் நீதி வேண்டியும் சிறுமியின் உறவினர்கள் போராடு வருகின்றனர் .
பெண் குழந்தை என்பது வரம். வாழ்க்கையில் நம்மை தாங்கிக்கொள்ள கிடைத்திருக்கும் மற்றொரு தாய். தமிழ் இனத்தின் மகனுக்கு மகள்.. பிறந்த அன்பின் மருமகள் எல்லோரின் அன்பையும் பெற்று வளரட்டும். வாழ்த்துகள்.@Seeman4TN
வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான புதிய விடியல் குழுவினைச் சேர்ந்த உறவுகள் வாரந்தோறும், அங்கு வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்த்தமிழ் மொழியை கற்பிக்கும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.
பொருளாதார தேடலுக்காக புலம் பெயர்ந்து வாழும் நாட்டில், அங்கு வசிக்கும் தமிழ் மாணவர்கள் எல்லா பள்ளிகளிலும் தமிழை கற்க முடியாத சூழலில், அவர்களுக்கு தாய்மொழியை கற்பிக்க வேண்டும் எனும் உயர்ந்த இலக்கிற்காக பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையிலும், தமிழ் மொழி காக்கும் இவ்வுயரிய பணியைச் செய்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், 'புதிய விடியல்' நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன உணர்வோடும், மொழிப் பற்றோடும் தமிழை வளர்த்து வரும் உங்களின் அரும்பணி தொடர என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்!!!
இந்தக் காணொளியை வெளியிட்ட சில மணி நேரங்களில் இவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளது
எந்தக் காணொளி யாரையும் சென்று சேரக்கூடாது என நினைத்தார்களோ அதை பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர்க்க வேண்டியது நமது கடமை 💯
பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக நேபாள நாட்டின் போக்ரா நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் நேபாளம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில், சிலம்பம் பிரிவில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஐவர் 4 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர் என்பதும், அதில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் திருச்செங்கோடு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புமகள் ச.வர்சா அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தியும் அறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
தமிழ் மண்ணின் பண்பாட்டை பறைசாற்றும் சிலம்பம் சுற்றுதல் விளையாட்டு போட்டிகளில் தங்கள் தனித்திறனை வளர்த்து, சாதனை படைத்துள்ள எனதன்பு மாணவக்கண்மணிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புமகள் ச.வர்சா மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்.