தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
தவெக அரசின் தங்க கிரீடத்தில் இரு வைர கற்கள்:
1. திருப்பரங்குன்றம்.
கொள்கை தலைவர்கள் - பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜர் மகிழ்ச்சி.
2. கள்ளக்குறிச்சி.
அஞ்சலை அம்மாள் மற்றும் வேலுநாச்சியார் மகிழ்ச்சி.
இப்பொற்கால ஆட்சியில் மேலும் பல வைரங்கள் பதிக்கப்படும்.
அருமை ப்ரோ.
கலெக்டராக இல்லாமல்... ஆளுங்கட்சி MLA மீது சாமான்ய பெண் ஒரு புகார் தந்திருந்தால்..இந்தளவுக்கு செய்தியாகி இருக்குமா?
வழக்கு பதிவாகி இருக்குமா?
Can you respond மிஸ்டர்.தாய்மாமன்?
இனிமேலும் கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குற்றமிழைத்த அருள் விக்னேஷைவிட பெரிய அயோக்கியன் விஜய்தான் என்று தமிழ்ச்சமூகம் புரிந்து கொள்ளட்டும்.
Sun TV -ல பல வருஷமா விஜய் படத்தையும், பாட்டயும் போட்டு, Top 10 show, Yearly Top 10 -ல விஜய் படம் முதல் இடம்.. Sun pictures promotion -னு தூக்கி வச்சி..
அஜித்தை அப்படியே ஓரம் காட்டுனாங்க.. ஆனால் இன்னைக்கு Sun TV 2 நாளா அஜித் பின்னாடியே சுத்திட்டு இருக்கு..
@Akracingoffl
Good that @anirudhofficial wedding reception happened during #AK 's race off-season..
Both share a great personal and professional relationship..
It's good that all stars aligned today! 🙏
Ithula oru Vishayam ennanaaa..
Rendu paerukkum Ella vithathilum 100/100 Same Attitude.. Same interest in Life 👌🏻🔥
Ithu thaa Actual Retta #THALA 😅👌🏻
#Daredevils 🔥