சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்கும் தவெக தலைவர் திரு. @actorvijay விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
#Josephvijay#CMOathCeremony
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் @TVKVijayHQ திரு. @actorvijay அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மதச்சார்பின்மை, மக்கள் நலன் சார்ந்த பொருளாதார வளர்ச்சி, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய விழுமியங்களைப் பாதுகாப்பதிலும், தமிழக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் உங்களுக்கும் உங்கள் அரசுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர் @MABABYCPIM பொதுச் செயலாளர் #CPIM #CMJosephVijay #TamilNaduPolitics #MABaby #SocialJustice #Secularism #Federalism
My heartfelt thanks to the Leader of Opposition in Lok Sabha, Thiru @RahulGandhi ji, for gracing my swearing-in ceremony with his presence. Your support and kind wishes are truly appreciated as we embark on this journey to serve the people.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் வணக்கம்!
ஏப்ரல் 23.
தமிழகத்தின் ஜனநாயகத் திருவிழா நாள்.
எல்லோரும் சீக்கிரமாகவே எழுந்து தயாராகி,
காலை 7மணியில் இருந்து
12மணிக்குள்,நமக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று நமது வாக்கினைப் பதிவு செய்திட வேண்டும்.
குறிப்பாக,முதியவர்களும்,
பெண்களும் வெயிலுக்கு முன்பாகவே தங்கள் வாக்கினைப் பதிவு செய்துவிடுவது நல்லது.
மேலும்,வாக்காளர்கள் அனைவரும் மதியத்திற்குள் தங்களது வாக்கினைப் பதிவு செய்துவிட்டால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துகொள்ளலாம்.
எனவே, ஒருவர் விடாமல், ஒரு வாக்குகூட விடுபடாமல் ‘நம் வாக்கு - நம் உரிமை’ என்பதை உறுதி செய்ய, 100% விழிப்புணர்வுடன் இருக்கவே இந்த வேண்டுகோள்.
100% வாக்குப் பதிவினை உறுதி செய்வதை லட்சியமாகக் கொண்டு வாக்களிப்போம்.
ஜனநாயகம் காப்போம்.