புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் போன்ற சிக்கல்களுக்கு எளிமையான தீர்வாக பாரம்பரிய 'மேய்ச்சல் தொழில் நுட்ப'த்தை பின்பற்றும் கிடை மாடு, கிடை ஆடுகள் மூலம் பூமியின் மேல்பரப்பில் உள்ள 'கார்பன்' அளவை தினம்தோரும் குறைக்கவும், பல்லுயிர் பெருக்க சமநிலைக்கு தொடர்ந்து உதவுகிறது - 'தொழுவம்'
தமிழ்நாடு அரசை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம்
மேய்ச்சல் சமூக மேம்பாட்டு நலவாரியம்!
காடுகள் மலைகளில் பாரம்பரிய மேய்ச்சல் உரிமை!
பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவிடும் மேய்ச்சல் நிலம் மீட்பு!
காற்றில் இருக்கும் கார்பனை உள்ளிழுத்து மண் கார்பனாக மாற்றும் மேய்ச்சல் தொழில் மீட்பு!
இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் உழவர்கள், மேய்ச்சலில் ஈடுபடும் கிடைக்காரர்கள், சித்த மருத்துவர்கள் ஆகியோருக்கு ஒருங்கிணைந்த கொள்கை வரைவு அறிக்கை உருவாக்கியுள்ளோம்
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், திட்டக்குழு உறுப்பினர் சித்த மருத்துவர் சிவராமன் பார்வைக்கு கொண்டு சென்றோம்
பாரம்பரிய மேய்ச்சலில் ஈடுபடும் புலிக்குளம் கிடை மாடுகளின் கழிவுகளில் இருந்து தமிழ் நிலத்தை வளப்படுத்தி, இயற்கை விவசாயம் மூலம் ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்கிட உதவும் ‘தொழுவம் இயற்கை உரம்‘ விற்பனை தொடக்கம்.
தொழுவம் தொடர்புக்கு:
82202 49989, +91 96596 65368, +91 98403 69516
பாரம்பரிய மேய்ச்சலில் ஈடுபடும் புலிக்குளம் கிடை மாடுகளின் கழிவுகளில் இருந்து தமிழ் நிலத்தை வளப்படுத்தி, இயற்கை விவசாயம் மூலம் ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்கிட உதவும் ‘தொழுவம் இயற்கை உரம்‘ விற்பனை தொடக்கம்.
தொழுவம் தொடர்புக்கு:
82202 49989, +91 96596 65368, +91 98403 69516
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளோடு - தொழுவம் செய்தி
பாரம்பரிய மேய்ச்சலில் ஈடுபடும் புலிக்குளம் கிடை மாடுகளின் கழிவுகளில் இருந்து இயற்கை விவசாயம் செய்ய முதல் கட்டமாக "தொழுஉரம் முதல் பூச்சி விரட்டிகள் வரை" (14 பொருட்கள்) ஜனவரி முதல் விற்பனை தொடக்கம்...
மேய்ச்சல் சமூகத்தினர் குரல் மெல்ல வெளியே கேட்க ஆரம்பித்துள்ளது!!
தொழுவம் ஆய்வு பணிகளை மாண்புமிகு அமைச்சர் உயர்திரு பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், நபார்டு (NABARD - MABIF) நிர்வாகிகள், விவசாயத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்!
தொழுவம் - தொடரும் ஆவினப் பொருளாதாரம்!!
தமிழக மேய்ச்சல் சமூகத்தினர் குரல், இந்திய மேய்ச்சல் சமூகத்தினரோடு இணைந்து ஒலிக்கும்!
https://t.co/bFylDl051m நிறுவன ஆய்வாளர்கள் தொழுவம் கிடைகளை கள ஆய்வு மேற்கொண்டனர். கிடை மாடு, ஆடு வளர்ப்பு முறைகளையும், கழிவுகளில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பதையும் பார்வையிட்டனர்.
பல்லுயிர் பெருக்கத்திற்கு காரணமான மேய்ச்சல் நிலங்கள் குறித்த புரிதலை தமிழகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்த வேண்டும். ஐ.நா சபை 2026 ஆண்டு மேய்ச்சல் நிலத்திற்கான ஆண்டாக அறிவித்துள்ளது (International Year of Rangelands and Pastoralists) https://t.co/QwPxAKLozi
- தொழுவம்
மேய்ச்சல் நிலம் குறித்த தீர்மானம் முதல் கட்ட முயற்சி வெற்றி! தென் மாவட்டங்களில் அக்டோபர் 2 கிராம சபை கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் "மேய்ச்சல் நிலங்கள்" குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது!!
இடி, மின்னலில் இருந்து காப்பாற்றி வரும் பனை மரங்கள் வரும் தலைமுறைக்கு உதவவேண்டும் என்பதை உணர்ந்து செம்மறி ஆடு வளர்ப்போர் தாங்கள் செல்லும் வழித்தடங்களில் பனை விதைகளை விதைத்து வருகின்றனர்!!
மதுரையில் மகாத்மா காந்தி இடுப்பில் வேட்டியும், தோளில் துண்டும் அணிந்து அரை ஆடை அணியும் 'கீதாரி'யாக மாறினார்!! இவ்வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டுவிழா மதுரையில் இன்று நடைபெறுகிறது!!
மதுரை அருள் ஆனந்தர் கல்லூரி (https://t.co/s3FhLWjCGH Dairy Science and Rural Management) மாணவர்கள் கீதாரிகளின் வாழ்வு மேம்பட தொழுவம் மேற்கொண்டு வரும் ஆய்வு பணிகளை அறிந்துகொள்ளவும், இணைந்து வேலை செய்வது குறித்து வேளாண்மை கல்லூரி வளாகத்தில் (NABARD-MABIF) கலந்துரையாடல் நடைபெற்றது!!
பல மாநிலங்களில் வருமானம் கொடுக்கும் செம்மறியாடு வளர்ப்பு தொழிலை தமிழக அரசு கடந்த 50 வருடமாக கண்டுகொள்ளவில்லை ஏன் ?
"Sheep Development Corporation in TN" ஒன்றை ஆரம்பித்தால் ஆண்டுதோறும் தமிழக அரசுக்கு மூவாயிரம் கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும்.
இனியாவது அரசு கவனம் செலுத்தவேண்டும்!