என்றும் நினைவுகளில் Crazy Mohan.!
இன்று Crazy மோகன் எனும் மாபெரும் நகைச்சுவை ஆளுமை இறந்த தினம்.!
பொதுவா நம்ம அப்பா அம்மா மாதிரி நமக்கு ரொம்ப நெருக்கமானவங்கள இழக்கும் போது, அதுக்கு நம்ம வருத்தப்படுறதும், அவங்க இன்னும் கொஞ்ச வருஷம் உயிரோடு இருந்திருக்கலாமே அப்படினு ஏங்குறதும் சகஜம் தான்.
ஆனால், நமக்கு எந்த தொடர்பும் இல்லாத, முன்ன பின்ன அறிமுகமே இல்லாத, சொல்லப்போனா நம்ம வாழ்க்கையில ஒரு தடவை கூட நேர்ல பார்த்திராத ஒரு மனிதனின் மறைவுக்கு நாம மனசு உடைஞ்சு போறதும், ச்ச அந்த மனுஷன் இன்னும் கொஞ்ச வருஷம் வாழ்ந்திருக்கலாமேனு வருத்தப்படுறதும் நிகழுதுனா - அந்த மனிதர் இந்த உலகத்தில் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சிட்டு போயிருக்கார்’னு அர்த்தம்.
அப்படியான மனிதர்களோட இடத்தை அதுக்கு அப்புறம் யாராலுமே நிரப்ப முடியாது. There’ll be no replacement for such souls.
அது போன்ற ஒரு மனிதரின் நினைவு நாள் இன்று.
கிரோசி மோகனுடன் நெருக்கமாக பழகிய கமல் ஒரு நிகழ்வில், “யார் மீதும் காழ்ப்போ, வன்மமோ இல்லாதவர் கிரேசி மோகன். நான் அவரை அறிமுகப்படுத்தாவிட்டால், என்னை விட பெரியவர் ஒருவர் அறிமுகப்படுத்தி இருப்பார்.
அவர் சொர்க்கத்தில் இருப்பதாக கூறுகின்றனர். அவருடன் இருந்ததே சொர்க்கத்தில் இருப்பது போன்றது தான். உயிர், சோப் மாதிரி கரைய வேண்டும் என்பார். அப்படித்தான் கரைந்து போனார்'' எனக் கூறினார்.
இன்றும் கூட நான் ரிப்பீட் மோடில் அடிக்கடி பார்க்கும் அத்தனை திரைப்படங்களும் கிரேசி மோகனின் கதை வசனத்தில் உருவானவை தான். அவரைப் போல, ஒவ்வொரு வார்த்தையிலும் நம்மை சிந்திக்க வைத்து - பின் நினைத்து நினைத்து சிரிக்க வைத்தவர் யாருமே இல்லை.
கிடைத்த பெயரையும், புகழையும் தலையில் ஏற்றிக்கொண்டு திமிர் பிடித்து அலையாமல், வெற்றிலை-பாக்கு சீவலை வாயில் போட்டு மென்று கொண்டே, கலைந்து கிடக்கும் தலைமுடியும், கேஷுவல் டீஷர்ட்டுமாக எந்த பந்தாவும் இல்லாமல் நடமாடியவர்.
என்ஜீனியரிங் பட்டதாரி, சூப்பராக ஓவியம் வரைபவர். கார்ட்டூனில் கதை சொன்னவர். தமிழ் சினிமாவையும், நாடக உலகையும் தன்னிகரில்லா நகைச்சுவை வசனங்களால் ஆளுமை செய்தவர். பாட்டுகூட பாடுவார். மீனாட்சி அம்மன் குறித்து நூற்றுக்கணக்கான வெண்பாக்களை பாடிய கவிஞானி. முகம் சுளிக்காத வகையில் வசனங்களை கடைசிவரை எழுதியவர். யாரையும் காப்பி அடிக்காத, யாருமே காப்பி அடிக்க முடியாத ஒரு நேர்த்தியான - திறமையான - தன்னிகரில்லாத - தனித்துவமான ஒரு கலைஞன்.
தனது புத்திசாலித்தனமான வசனங்களால் அனைத்து தரப்பு மக்களையுமே சிரிக்க வைத்ததே கிரேஸி மோகனின் வெற்றி. அதனால்தான் பாரபட்சம் பாராமல் அத்தனை பேரையும் அழ வைத்தது அவரது மரணம்.
அவரது இழப்பு காலத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று
ஊர் சொல்ல வேண்டும்..!!
இவர் போல யாருமே இல்லையென ஊரே மெச்சும் ஒரு மகா கலைஞனுக்கு அஞ்சலி!
#CrazyMohan
June 10. ✨
Credits - TF Rinnozah - FB
எங்கேயோ ஒரு மூளையில வசதியா பத்திரமா இருந்துட்டு போர் நடக்குறதை வேடிக்க பாக்குறப்போவும் 50 வருஷத்துக்கு அப்புறம் 'போரில் இந்த நாட்டை வீழ்த்திய இந்த நாடு'ன்னா படிக்குறப்போவும் சிலிர்ப்பா தான் இருக்கும்.
War isn't about who's right
War is about who's left 🙂💔 (1/n)
ஏழ்மையும் வறுமையும் தங்கள் குடும்பத்தினருக்கு ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், ஊதியத்திற்காக வெளிநாடு சென்று பணியாற்றிய தமிழர்கள், வாழ்வின் பாதியிலேயே மரணமடைந்து விடுகின்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இறந்தவர்களின் உடலையாவது பெற முடியுமா, கடைசியாக அவர்களின் முகத்தையாவது காண முடியுமா, இறுதிச் சடங்குகளைச் செவ்வனே செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று அனைத்தையும் இழந்து ஏங்கி நிற்கின்றனர்.
அவர்களுக்காக, மனிதாபிமான அடிப்படையில், நான் பதவியேற்ற இந்த 11 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து இதுவரை 6 உடல்களைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளேன்.
இது மட்டுமல்லாமல், உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டு, வெளிநாடுகளில் வேலை செய்யவோ, வசிக்கவோ முடியாத நிலையில் இருந்த 3 நபர்களை மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்தி பின், அவர்களைச் சொந்த ஊருக்கு அழைத்து வர உதவிகள் செய்துள்ளேன்.
அவ்வாறு, புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர், மட்டயான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவர், சவுதி அரேபியாவில் சிகிச்சை பெற்று, ஊருக்கு அழைத்து வரப்பட்டார்.
அதேபோல், பெரம்பலூர் மாவட்டம், சித்தலி கிராமத்தைச் சேர்ந்த நல்லுசாமி என்பவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, குவைத்தில் இருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், குருவிகுளம் ஒன்றியம், இளையரசனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமியம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், மலேசியாவின் பினாங்கு மாகாணத்தில் பணியின்போது விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயமடைந்து, அறுவை சிகிச்சைக்குப் பின் பத்திரமாகத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
மேலும், வெளிநாடுகளில் இறந்தவர்களின் உடல்களைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரும் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.
தென்னாப்பிரிக்காவின் தான்சானியாவில் இறந்த திருச்சி, கே.கே. நகரைச் சேர்ந்த நிவாஸ் என்பவரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உதவினேன்.
கந்தர்வகோட்டை அருகே பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் நாராயணனின் உடலை கத்தாரில் இருந்தும்,
துவாக்குடி பழனிச்சாமி என்பவரின் உடலை குவைத்தில் இருந்தும் அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு வர உதவினேன்.
சமீபத்தில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒன்றியம், சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் இறந்தார். அவரது உடலையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தேன்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கலங்கபேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஸ் என்பவரின் உடலை கத்தாரில் இருந்து கொண்டு வர உதவினேன்.
அதேபோல், தற்போது, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜி. வெங்கடேஷ் (28) என்ற இளைஞர், மலேசியாவிற்கு விசிட்டிங் விசாவில் சென்று, சமையல்காரராகப் பணியாற்றி வந்துள்ளார். விசா காலத்தைத் தாண்டி அங்கு தங்கியிருந்த அவர், சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நண்பர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.
இந்தச் சோகத்தில் தவித்த அவரது குடும்பத்தினரின் தேவையை உணர்ந்து, கோரிக்கை வைத்த 15 நாட்களுக்குள்ளாகவே அவரது உடலைத் திருச்சிக்கு விமானம் மூலம் கொண்டு வரச் செய்தேன். விசா காலத்தைத் தாண்டி மலேசியாவில் தங்கியிருந்ததால், மலேசிய உயர் அதிகாரிகளுடன் பேசி, பல சட்டப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், மருத்துவமனை நிர்வாகம், மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே உடலை வழங்குவோம் என்று கூறியது.
இதனால், மருத்துவமனைக் கட்டணமாக ரூ. 2.25 லட்சமும், சட்ட நடவடிக்கைகள் மற்றும் விமானக் கட்டணத்திற்காக ரூ. 1.25 லட்சமும், மொத்தம் ரூ. 3.50 லட்சம் செலுத்தி, அவரது உடலைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர முடிந்தது.
அந்த உடலைப் பெறுவதற்காக, நேற்று (08.05.2025) நள்ளிரவு 12 மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு நேரில் சென்று, அதிகாரிகளைச் சந்தித்து, உடலை விரைவாக உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணிகளைச் செய்தேன். இறந்தவரின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களது இல்லம் வரை உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் செய்து கொடுத்தேன்.