To divert the attention from the falling state of law & order in the State and in an attempt to please the Gopalapuram family, the organisation Secretary of DMK, Thiru RS Bharathi, had willfully spread misinformation about me & a criminal defamation case has been filed in Saidapet court today.
We have appealed in our petition for appropriate action by the court on Thiru RS Bharathi, and the compensation received from this case will be used to construct & operate an alcohol-deaddiction centre in Kallakurichi.
நமது @WTLFoundation தொடர்பான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட, பல்லடத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தனது துடிப்பான செயல்பாடுகளால் அனைவரின் அன்பையும், கவனத்தையும் பெற்றிருந்த இளைஞர், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்தக் கடினமான நேரத்தில், சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
உங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடை அருகே செல்பி ரீல்ஸ் எடுத்து பதிவிடுங்கள்!
மாற்றத்தின் பாதையில் இணைந்திடுங்கள்!
சட்டவிரோத டாஸ்மாக் கடைகள் குறித்த தகவல்களை கீழுள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்!
https://t.co/1B0jsvgubG
ஆனைமலை Long Distance Runners குழுவின் நிறுவனர் திரு. லிங்கேஷ் காமாட்சி மற்றும் அவரது குழுவினர், 28 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடி வந்து, நமது 'போதை இல்லா தமிழகம்' மாநாட்டில் பங்கேற்றது, சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் விழிப்புணர்வு முயற்சிக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட இளைஞர்களே மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
மாறுவோம், மாற்றுவோம்!
நமது பொள்ளாச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறிலிருந்து பொள்ளாச்சி வரை, சுமார் 300 கிமீ தொலைவு மிதிவண்டியில் பயணித்து, வரும் வழியெல்லாம், 'போதை இல்லா தமிழகம்' என்ற விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த சகோதரர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றம் என்பது வார்த்தைகளால் மட்டும் வராது, தன்னலமின்றி களத்தில் செயல்படும் திரு. மணிகண்டன் போன்ற நம்பிக்கை மனிதர்களால் தான் உருவாகிறது.
மாறுவோம், மாற்றுவோம்!
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
நிச்சயம் இவரை போல் ஒருவர் தமிழ்நாட்டிற்கு தேவை.. அண்ணாமலையை பின்பற்றுவதற்கு இது தான் காரணம்..!
Annamalai Maanadu | We the Leaders |
#Newstamil24x7#Pollachi#Annamalai
நமது @WTLFoundation மிகவும் இளமையான அமைப்பு. நமது அமைப்பின் தலைவர்களில், 54% பேர், 39 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதும், ஏற்படுத்தப் போவதும் இந்த இளைஞர்கள்தான்.