“நான்தான் முதல்வர்… நான்தான் முதல்வர்…” என்கிறார் தீயசக்தி திமுக என்ற கார்ப்பரேட் குடும்பக் கம்பெனித் தலைவர் கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.. கனவு காண்பதை தன் வீட்டில் கண்டால் பரவாயில்லை. அதை ஒரு கல்யாண வீட்டில் காண்கிறார். அதுவும் பட்டப்பகலில் கனவு காண்கிறார். கனவு காண்பது அவரவர் உரிமை. பவளவிழாப் பாப்பாவை பால்டப்பா போல உருட்டுகிறார் ஜூனியர். இப்போது சீனியரும் சேர்ந்து உருட்டுகிறார். தமிழ்நாட்டையே உருட்டு உருட்டு என உருட்டியவர்கள் இப்போது ஆட்சி அதிகாரம் கனவாகிப் போனக் கடுப்பில் கல்யாண வீட்டில் போய் ‘நான்தான் முதல்வர்’ பகல் கனவுப் பாட்டுப் பாடுகிறார்.
பவளவிழாப் பாப்பா போகிறப் போக்கில் அவலவிழாப் பாப்பாவாக மாறி அழுமூஞ்சிப் பாப்பாவாக ஆகி இருக்கிறது. இறுதியில் அழுகுனிப் பாப்பாவாக மாறும் அவல நிலைக்குச் செல்லப் போவது உறுதி.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது.
ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது.
ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது. Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு. நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட
மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ
மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர். Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார்.
பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று.
சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி.
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே...
அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl |
#தமிழகவெற்றிக்கழகம் | #TVK |
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
everyday electricity problem. Low voltages and multi time power cut. Now itself power cut for past one hour. What happening in maduravoyal eb? Now one attending the call. No response evey time.
Mettukuppam road.Maduravoyal ration shop. @CMOTamilnadu@TANGEDCO_Offcl@rhevanth95
There are two wines shops nearby in same road(mettukuppam main road).For 24/7 you can buy alcohol here. Everyday day and night drinkers are drinking in road itself,behind every transformers and vehicles.Daily evng time always blocking road.Take action
@CMOTamilnadu@TVKVijayHQ