இந்தாளு கருப்பு முருகானந்தம் உங்க கட்சியோட மாநில செயலாளர் , இந்த பெண்மணியை ஏமாற்றியதா அந்த பெண்ணே புகார் கொடுத்திருக்காங்க , இன்னும் நிறைய அந்தரங்க வீடியோக்கள் எல்லாம் வெளிய வந்திருக்கு , அதையெல்லாம் இங்க பகிர முடியாது , அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்கணும்னு இதே மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தீர்களா மேடம் ? இல்ல அவங்க தானா வந்து விசாரிச்சாங்களா ? கட்சிப்பதவியிலிருந்து நீக்கணு சொல்லி மேட்டர முடிச்சிருக்கீங்க , இவ்வளவு அசிங்கத்தை உங்க முதுகுல சுமந்துக்கிட்டு , புகாரே கொடுக்கப்படாத கற்பனை விவாகரத்துக்கு முழு பக்க அறிக்கை கருணாநிதி தேவையா ?
ஒரு பாஜககாரன் @GKNagarajBJP மோடி புகழை சன் நியூஸ் தொலைக்காட்சியில் @sunnewstamil உட்கார்ந்து கொண்டு பரப்புரை செய்வதும், அதை நெறியாளர் குறுக்கிடாமல் ரசிப்பதும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரையும் குறுக்கிட விடாமல் பார்த்துக்கொள்வதும்….. அடடா…
அடடே….. தமிழகம் காணாத ஒரு அதிசயம் 👌🏻
@Shanmugamcpim சண்முகம் சொன்ன மாதிரி திமுகவுக்கு கொள்கையும் கிடையாது ஒரு புடலங்காயும் கிடையாது💦💦💦
@jeevasagapthan1 கொத்தடிமையே இதுக்கு ஏதாவது முட்டு குடுக்கப் போறியா 🤡🤡🤡
@arincindia@manickamtagore இதைக்காண கண்கோடி வேண்டுமே 👏👏
எனக்கு அப்போவேய் ஒரு டவுட் இருந்துச்சு😂😂
@iparanthamen பறந்து bro உங்க தலைவர் மேல இருந்த மொத்த வன்மத்தையும், எங்கள திட்டுற மாதிரி அவர திட்டி தீர்த்துடிங்க 😂😂
வாழ்த்துக்கள் !! வாழ்த்துக்கள் bro
🚨 From the Archives 🚨
கணிப்புனா இப்படி இருக்கணும். சும்மா அரசியல் விமர்சகர், பத்திரிக்கையாளர், மூத்த பத்திரிக்கையாளர்னு போட்டுக்கிட்டு ஒண்ணுத்துக்கும் உதவாத அரசியல் பேசுறவனுங்க மத்தியில் ஒரு வருடத்திற்கு முன்பே @TVKVijayHQ விஜய் முதலமைச்சர் ஆவார்னு சொன்னாரு பாரு. அவருதான் இந்தத் தலைமுறை அரசியல் சூழலை மிகத்துல்லியமாக கணக்கிட்டார். அவர் பெயருக்கு முன் அரசியல் ஆய்வாளர்னு போட்டுக்க அனைத்துத் தகுதிகளையும் கொண்ட ஒரே ஆளுமை அண்ணன் @aperumalmani பெருமாள்மணி மட்டும்தான் 💯💪
@jeevasagapthan1 ஜீவசகாப்தன், ரவீந்திரன் துரைசாமி எல்லார் மூஞ்சிலயும் கரியைப் பூசிய தருணம் 🤡
அண்ணே @aperumalmani அடுத்த இலக்கு 🎯 என்ன என்பது உங்களுக்குத் தெரியும். எப்பொழுது என்று மட்டும் சரியாக கணித்து சொல்லுங்கள் கூடிய விரைவில் 😀🙏
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
#PeriyarArivulagam#PeriyarLibrary
மொத்த நூல்களும் திமுக ஆட்சியில் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது
அகல் விளக்கு பதிப்பகத்திற்கு Order கொடுத்தது - 14.02.26
அகல் விளக்கு புத்தகங்களை பெரியார் நூலகத்திற்கு வழங்கிய தேதி 26.02.26
47 Box களில் 1700 புத்தகங்களை அகல்விளக்கு பதிப்பகம் 25.2.26 அன்று வழங்கியுள்ளது.
Box பிரிக்கப்படவில்லை. அனைவரும் தேர்தல் பணிக்காக சென்று விட்டனர்
ஜூன் மாதம் Box பிரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது
Total Publisher எண்ணிக்கை 405, அதில் தமிழ் பதிப்பாளர்கள் 298, ஆங்கிலப் பதிப்பாளர்கள் 107
மொத்த தொகை 19.19 கோடி
மொத்தப் புத்தகங்கள் எண்ணிக்கை 60,268
அதில் தமிழ் 25,425, ஆங்கிலம் 34,841
அகல் விளக்கு, பீனிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் ஒரே உரிமையாளர்
விண்ணப்பிக்கும்போது கொடவாசல் முகவரியும், புத்தகம் வழங்கும் போது மடிப்பாக்கம் முகவரியும் பதிப்பாளர் குறிப்பிடுகிறார்.
கொடவாசல் முகவரியில் RVR Press இயங்கி வந்தது. அது அகல்விளக்கு உரிமையாளரின் மைத்துனருடையது. அதை அகல்விளக்கு உரிமையாளர் விலைக்கு வாங்கிவிட்டார்.
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.