ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK@DMKWomensWing
#WATCH | Chennai | On the announcement of dates of polls in 5 states/UTs, Former DMK MP MM Abdulla says, "We are already prepared... DMK is always in election mode and always been working for elections... The coalition and other processes have already been started by DMK. Manifesto can be expected in another 2 days..."
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1,426.89 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்ற பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்து, 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் உரையாட தமிழும், உலகத்துடன் தொடர்புகொள்ள ஆங்கிலமும் நமக்கு இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கல்வி சிறப்பாக வளர்ச்சிப் பெற்றுள்ளது.
- மாண்புமிகு அமைச்சர் திரு @KPonmudiMLA அவர்கள்
#StopHindiImposition#FairDelimitationForTN
காவல்துறை சார்பில் ரூ. 56.26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 169 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள் மற்றும் 2 காவல் துறை கட்டடங்களையும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், ரூ. 18.78 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 10 குடியிருப்புகள் மற்றும் 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக் கட்டடங்களையும் மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் ரூ. 3 .75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தடய அறிவியல் மரபணு ஆய்வகப் பிரிவுக் கட்டடத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்.