தேர்தல் முடிவு வந்த பின் வந்த நாட்களில் ஒரே பாடலைத்தான் மீண்டும் மீண்டும் கேட்டு நான் மீண்டேன்..
அறுவடை நாள் படத்தில் வந்த "தேவன் கோயில் மூடிய நேரம்" என்ற பாடல்.. அல்ல, அல்ல.. தேவகானமே அது..
இருளில் இருக்கையில் வெளிச்சம் நோக்கி அந்த இசையே இழுத்துக்கொண்டு சென்றது.
உள்ளுக்குள் எழுந்த பிசாசின் கோவத்தை அதுவே சாந்தப்படுத்தியது..
எதிர்காலம் எண்ணி உருவான நடுக்கத்தை தவிர்க்க அதுவே நம்பிக்கையாக இருந்தது..
அடங்காத பதட்டத்தை நடுவே வந்த ""ஏஏ
தந்தன தந்தன தந்தனா..ஆஆஅ..
தந்தான தந்தான தானன்னா நனா
தந்தானா தந்தனா ஹே.."" தான் அடக்கியது.
பாடல் முழுக்க பின்னால் தூரத்தில் கேட்கும் மணியோசை அதிகாலை தேவாலய அமைதியை உள்ளுக்குள் உருவாக்கியது.
பாடலில் முடிவில் "ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம் அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்" என்னும் பொழுது மேலெழுந்து வரும் மன உளைச்சலின் அழுத்தத்தை எல்லாம் ராகத்தின் வழியே சுத்தமாக துடைத்து இசைஞானஸ்நானம் பெற்றவனாக மீண்டவனானேன்..
என்ன செய்வது இளகிய இதயம் கொண்டவன் இளையராஜாவிடம் தானே தஞ்சமடையவேண்டும்..
இளையராஜா எனும் மீட்பரை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!!!