சோனியா எழுதிய புத்தகத்தில் “எப்படி தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு உதவினேன்?” என எழுதியிருக்கிறாரா என்று புத்தக விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் விஜயிடம் அவரை ஆதரிக்கும் “ஈழ ஆதரவாளர்களும்” “தமிழ்த்தேசிய வெற்றி கழகத்தினரும்” கேட்டு சொல்வார்களா??
முப்பாட்டன் முருகப்பெருமானின் திருவிழாவில் முதலமைச்சருக்குத் துதிபாடுவதா? கோடிக்கணக்கான தமிழர்களின் இறைநம்பிக்கையை இழிவுபடுத்தியவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழர்களின் முப்பாட்டன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில் நடைபெற்ற தமிழர்களின் தொன்மையான சூரன் போர் (சூரசம்ஹாரம்) பெருவிழாவில், முருகப்பெருமானுக்குப் போற்றிப் பாட வேண்டிய ‘அரோகரா’ முழக்கத்தைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேசுக்கும் எழுப்பியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இறைவனை வழிபட வந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், வழிபாட்டு மரபுகளை மீறி ஆட்சியாளர்களுக்குத் துதிபாடியிருப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களின் உள்ளத்தை ஆழமாகக் காயப்படுத்தியுள்ள வெட்கக்கேடான செயலாகும்.
தமிழினத்தின் தொன்மையான வழிபாட்டு மரபின் அடையாளமாகவும், தமிழர் பண்பாட்டின் பெருமையாகவும் திகழ்பவர் நமது முப்பாட்டன் முருகப்பெருமான். அவரது வீரத்தையும், வெற்றியையும், அறத்தையும் போற்றிக் கொண்டாடும் சூரன் போர் (சூரசம்ஹார) பெருவிழா என்பது எவ்வித அரசியல் வேறுபாடுமின்றித் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழிபடும் புனிதமான நிகழ்வாகும். அத்தகைய சிறப்புமிக்க பெருவிழாவிலேயே முருகப்பெருமானுக்குச் சமமாக முதலமைச்சரையும், அமைச்சரையும் வைத்து ‘அரோகரா’ முழக்கமிடுவது எந்த வகையில் நியாயமாகும்?
அதுமட்டுமின்றி, சூரபத்மனை வீழ்த்தி அறத்தை நிலைநாட்டிய முப்பாட்டன் முருகப்பெருமானின் வீரத்தைப் போற்ற வேண்டிய இடத்தில், முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி, அவரைப் போல முருகப்பெருமான் பகையை வென்றதாகப் பொருள்படும் வகையில் பாடல் பாடியிருப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்? முருகப்பெருமானின் வீரத்தை விளக்குவதற்கு முதலமைச்சர் விஜய்யின் பெயர்தான் அளவுகோலா? முருகப்பெருமானுடன் முதலமைச்சரை ஒப்பிடுவதே தவறெனும்போது, முருகனுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்தித் துதிபாடுவது எத்தகைய ஆணவப்போக்கு?
ஆட்சியாளர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று பதவிகளையும், பொறுப்புகளையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழர்களின் தொன்மையான இறை வழிபாட்டையும், பண்பாட்டு மரபுகளையும் கொச்சைப்படுத்துவதா? பதவி மோகத்திற்கும், தனிமனிதத் துதிபாடலுக்கும் ஒரு வரம்பே கிடையாதா? ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்காகக் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும், உணர்வுகளையும் பலிகொடுப்பதுதான் கலைஞர்களின் பணியா? இதற்குப் பெயர்தான் இறைபக்தியா? அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் செய்யும் அடிமைச் சேவகமா?
இதையெல்லாம் முதலமைச்சர் விஜய் சொல்லித்தான் செய்கிறார்களா? அல்லது முதலமைச்சரை மகிழ்வித்து அவரிடம் நற்பெயர் பெறுவதற்காக அவரைச் சுற்றியிருப்பவர்கள் தன்னிச்சையாக இப்படியான கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்களா? முதலமைச்சருக்குத் தெரியாமல் நடந்தது என்றால், இத்தகைய செயலை அவர் இதுவரை கண்டிக்காதது ஏன்? தமிழர்களின் இறைநம்பிக்கையைப் புண்படுத்தியவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதற்கு முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டு மக்களிடம் உரிய விளக்கமளிக்க வேண்டுமா, இல்லையா?
மக்கள் அளித்த பதவி என்பது மக்களுக்குப் பணியாற்றுவதற்குத்தானே தவிர, மக்கள் வணங்கும் இறைவனுக்கு இணையாகத் தங்களை உயர்த்திக்கொள்வதற்கல்ல! ஆட்சியும் அதிகாரமும் இன்று வரும்; நாளை போகும். ஆனால், தமிழர்களின் முப்பாட்டன் முருகப்பெருமானின் பெருமையும், அவரை வழிபடும் மக்களின் நம்பிக்கையும் காலங்காலமாக நிலைத்து நிற்கும். அதனைத் தனிமனிதப் புகழ்ச்சிக்காக இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
எனவே, திருச்செந்தூர் சூரன் போர் (சூரசம்ஹார) பெருவிழாவில் முப்பாட்டன் முருகப்பெருமானின் வழிபாட்டு மரபை மீறி முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்டவர்களும், முருகப்பெருமானுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்திப் புகழ்பாடியவர்களும், கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களிடம் உடனடியாகப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும், அரசு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்படியொரு செயல் அரங்கேறியதற்குப் பொறுப்பேற்று, முதலமைச்சர் விஜய் உரிய விளக்கமளிப்பதோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இனி எந்தவொரு திருக்கோயில் நிகழ்விலும் அரசியல் தலைவர்களுக்கான தனிமனிதத் துதிபாடலுக்கு இடமளிக்கப்படாது என்பதை உறுதிசெய்யவும் வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Chakkaram update
-----------------
As we get closer and closer to the event, the model divergence reduces. Still we are more than 4 days from event. Can wait till tomorrow for more clarity.
ECMWF Physics model - just south of Nellore
GFS physics model - just north of Nellore.
Cyclone enga poona namakku enna. The rains are important. The nellore and below landfall is very favorable for Chennai rains. Innum konjam lower landfall will be semma. We have got some of the best rains when landfall is close to nellore. Michuang in 2023,
The more the delay, more the ridge pushes from west and cuts of the poleward movement.
Note: Cyclone crossing Nellore and below chennai -gets rains. Any landfall above nellore, chennai will miss the rains. Only KTCC (Chennai and surrounding districts) and maybe ranipet will benefit from this cyclone. Not much for other districts.
NTK leader Mr Seeman has rightly said that freebies hv made pple lazy.I hv seen majority of pple don't want to work as they get free ration & many more freebies from Govt. Though freebies hv improved condition of pple but it has given more side effects which can't be removed easily.Hope @PMOIndia will study suggestion of NTK leader & will take action on education & health on priority.Dr @ARanganathan72 ji may suggest more on it.
அவன் எம்எல்ஏ ஆனதிலுருந்தே இப்படித்தான் இருந்திருப்பான் போல!!!
இவன் மீது புகார் கொடுக்கப்பட்டது செப்டம்பர் மாதத்தில்... ஆனால் அக்டோபர் 2 அன்று வெற்றி பயணம் துவக்க விழாவிலும், உட்கார சீட் இருந்தாலும் கலெக்டருக்கு அருகில் தான் நிற்பேன் என அடம்பிடிக்கிறான் பாருங்க!!!
தவெகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.
கூட்டம் முடிந்தப் பிறகு, அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பும் வெளியிடப்படவில்லை. கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் யாரும் உள்ளே நடந்தது என்ன என்பது குறித்து விளக்கவும் இல்லை.
அதிகபட்சமாக, சோழிங்கநல்லூர் MLA ECR சரவணன், " தலைவர் தீபாவளி வாழ்த்துக் கூறினார்" என்றார். இதுதான் அதிகாரப்பூர்வமாக் கிடைத்த அதிகபட்ச தகவல்.
அப்படி இருக்க, தனித் தனியே பேசினார்! கூப்பிட்டு கண்டித்தார்! கடுமையாக எச்சரித்தார்! என எந்த அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன? அதற்கான Source என்ன?
ஜெகதீஸ் பழனிச்சாமி கும்பல் தட்டச்சு செய்து அனுப்பியதை அப்படியே Copy - Paste செய்து செய்தியாக வெளியிடுவதற்குப் பெயர் ஊடகவியல் பணியா?
Dear sweet @actorvijay uncle & my dear schoolmate’s relative @TheRoute, sending my parents' photos to my DM to intimidate me is just cheap. I’m only voicing my anger, not abusing anyone. Honestly, seeing your IT wing operate like this makes me sorry I wasn't backing the DMK alliance earlier. If a normal, small account scares you guys this much, shut me up with actual good work, not this pathetic behavior.
The ID who sent the pictures: @ajithaamaii. Do your worst.
பத்திரிக்கையாளரை சந்திக்க ஏன் பயம்..?
கலைஞர், ஜெயலலிதா, தலைவர் ஸ்டாலின், எடப்பாடியார், சீமான், சாட்டை கூட மைக் பாத்து பயப்படாம நின்னு பேசுறாங்க நிருபர்கள் கேள்விக்கு பதில் சொல்றாங்க..
உதயண்ணன் மாதிரி ப்ரஸ்மீட் குடுக்க தெம்பும் தைரியமும் வேணும்...
துணை சபாநாயகர் ரவிசங்கர் கார்த்திகுமாரை ஏன் அடித்தார்? அடித்து ஆபாசமாக பேசி விரட்டிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தவரை காவல்துறையை வைத்து மிரட்டி மீண்டும் சமரச காணொளி போட வைத்து, காணொளி போடவில்லை என்றால் குடும்பத்தோடு கொன்றுவிடுவேன் என்று ஏன் மிரட்டினார்?
அவர் மீது ஏன் வழக்கு போடவில்லை? இதுதான் ஒரு துணை சபாநாயகர் நடந்து கொள்ளும் லட்சணமா?
இதுதான் தவெக சட்டமன்ற உறுப்பினருடைய லட்சணமா ?
என்று கேள்வி கேட்டால்,
கார்த்திகுமார் என்பவர் மதுபானக் கடையில் மது வாங்கும் காணொளியை போட்டவர் குடித்திருந்தார் என்று முட்டுக்கொடுக்கும் முட்டு பாய்ஸ்.
இங்கே அவர் குடித்திருந்தார் என்பது பிரச்சனை அல்ல. அவர் குடித்துவிட்டே சென்றாலும் அவரை அடிக்கிற உரிமையை யார் கொடுத்தது?
அவரை ஆபாசமாக பேசும் உரிமையை யார் கொடுத்தது? குடித்தவர்களை எல்லாம் அடிப்பீர்கள் என்றால் தமிழ்நாட்டில் தினமும் ஒரு கோடி பேரை அடிக்க வேண்டும்.
அவர் குடிச்சிட்டு போனா உங்க துணை சபாநாயகர் அடிப்பாரா?
அப்படின்னா துணை சபாநாயகர் முழுநேர குடிகாரரா இருக்காரே, அவரை யார் அடிக்கிறது?
மிக முக்கியமானது,
தவெக கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து தவெக உறுப்பினராக இருப்பவர் கார்த்திக்யுமார்.
அவர் குடும்பத்தோடு விஜய் ரசிகர் மட்டுமல்லாது தா.வே.கா கட்சியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். தவெக கட்சிக்காரருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியல, இதுல இவரு தமிழ்நாட்டை பாதுகாக்க போறாராம்.
@TVKVijayHQ@tvkravisankar
மெக்காவில் இருந்து கொண்டு அல்லாவைத் தவிர வேறொருவரைப் புகழ்வதும், அதை வீடியோ எடுத்து பதிவிடுவதும் இஸ்லாமிய சட்டப்படி தவறில்லையா? பங்களாதேஷ் ஏழைத் தம்பதிளுக்கு கொடுக்கப்படும் தண்டனையெல்லாம் இவர்களுக்குப் பொருந்தாதா? @AlimAlbuhari