🙏🧘🏼♂️🧘🏼♂️
பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள்.
படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள்
பார்ப்பவன் பார்க்கட்டும்,
படைத்தவன் காக்கட்டும்.
🔱🔱🔱🔱🔱🔱
ௐ நமசிவாய
கடந்த வாரம் திரு. அண்ணாமலை அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் தனிப்பட்ட முறையில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அவரது இல்ல அலுவலகத்தில் பாரதப் பிரதமர் அவர்களின் புகைப்படமும், அவரைப் பற்றிய நூல்களும் இடம்பெற்றிருந்ததை நான் நேரில் கண்டேன். அது பிரதமர் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையையும் பற்றையும் வெளிப்படுத்தியது.
எங்கள் உரையாடலின் போது அவர் தெளிவாக மூன்று கருத்துக்களை பகிர்ந்தார்:
1. பாரதப் பிரதமர் மீது தனக்கு அளவற்ற அன்பும் பற்றும் உள்ளது.
2. இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் தனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
3. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அதே நேரத்தில், நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் ஆக்கபூர்வமான கருத்துகள் இருந்தால் அவற்றை ஜனநாயக அடிப்படையில் மக்களின் நலனுக்காக பகிரலாம் என்றும் அவர் கூறினார்.
எனவே, அண்ணாமலை அவர்களின் நிலைப்பாட்டை தவறாக சித்தரித்து குழப்பம் ஏற்படுத்த முயலும் சிலரின் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் இது.
இந்தச் சூழலில், @ProfessorBJP அவர்களின் கருத்து மிகவும் முதிர்ச்சியானதாகும்.
அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது; #அண்ணாமலை அவர்களின் புதிய புரட்சி தமிழகத்தில் வரலாறு படைக்கும்.
@annamalai_k@BJP4TamilNadu@WTLFoundation #Annamalai #bjp #Tamilnadu
கடந்த 2020 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில், உதவி மின் பொறியாளர் பணியிட நியமனங்களுக்கான TNPDCL தேர்வு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, நிர்வாகக் காரணங்களைக் கூறி, இந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக, TANGEDCO அறிவித்தது. மேலும், TN Act No. 14 of 2022, TNPSC (Additional Functions) சட்டத்தின்படி, TNPSC மூலமாக, இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்றும், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்பகிர்மானக் கழக உதவி மின்பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக, 2025 ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 26.07.2024 அன்று வெளியிடப்பட்ட, பொதுப்பணித்துறை (PWD) உதவி மின் பொறியாளர் காலிப் பணியிட நியமனங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக, முன்பு ரத்து செய்யப்பட்ட TNPDCL உதவி மின்பொறியாளர் காலிப் பணியிடங்களில், 195 இடங்கள், பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் மூலம் நிரப்பப்படும் என்று திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு வயது வரம்பும் 32 என்று அறிவிக்கப்பட்டது.
இதனால், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு, அந்தத் துறை சார்பான தேர்வுகள் ரத்து செய்து, எந்த மறு அறிவிப்பும் செய்யாமல் காத்திருக்க வைத்து விட்டு, அதே பணியிடங்களை, பொதுப்பணித்துறை சார்பான தேர்வுகள் மூலம் நிரப்ப முடிவு செய்தது, அந்த இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. குறிப்பாக, அரசின் நிர்வாகக் குளறுபடி காரணமாக, தகுதியான இளைஞர்களுக்கு வயது வரம்பில் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு தளர்வு வழங்கும் தமிழக அரசின் 13.09.2021 அன்று வெளியான அரசாணை எண் 91 ன் படி, கொரோனா பெருந்தொற்றால் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால், வயது உச்ச வரம்பு, 2 ஆண்டுகள் தளர்த்தப்படும். ஆனால், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, 04.07.2022 அன்றுதான். ஏற்கனவே தேர்வுகள், 2020 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், பொதுவாக வெறும் இரண்டு ஆண்டுகள் தளர்வு என்பது எப்படிப் பொருத்தமானதாக அமையும்?
இந்த நிலையில், வயது வரம்பில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கை, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மின்பகிர்மான கழக உதவி மின்பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள், கடந்த 23.01.2026 அன்று வெளியாகின. பணி நியமனங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் முன்பாக, வயது வரம்பைக் காரணம் காட்டி, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற இளைஞர்களைக் கூட தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். TNPSC அமைப்பின் இந்த நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார வாரிய உதவி மின்பொறியாளர் பணிக்காகக் காத்துக் கொண்டிருந்த தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த துரதிருஷ்டவசமானது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண் 231 மூலம் தமிழக அரசு சிறப்புத் தளர்வு வழங்கியுள்ளது. அதே போல, கடந்த 2013 ஆம் ஆண்டு, இதே போன்று, நீண்ட கால பணியிட நியமனங்கள் நடைபெறாத நிலையில், விதி 91(h) மூலம், ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை, தமிழக மின்சார வாரியம் வழங்கியிருந்தது. கடந்த 2019 முதல், 2024 வரை, எந்தப் பணியிடங்களும் நிரப்பப்படாத நிலையில், இதே சூழ்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கும், வயது வரம்பில் தளர்வு கொடுத்திருக்க வேண்டும். நிர்வாகத் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு, அந்த நிவாரணத்தை மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். கடந்த கால முன்னுதாரணங்களைப் பின்பற்றி, நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும். மேலும், தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு கூடுதல் அறிவிப்பு என்ற பெயரில் பணியிடங்களையோ, விதிகளையோ மாற்றும் முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலம், அரசின் நிர்வாக அலட்சியத்திற்குப் பலியாக அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
தமிழகத்தில் வேறு யெந்த அரசியல் தலைவரும் இதை வரவேற்ற மாதிரி தெரியவில்லை.
தலைவர் #Annamalai மட்டும்தான் DMKvin ஊழல் யா அவர் அரசியலுக்கு வந்தது முதல் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி கொண்டு இருக்கிறார்
Why is there a sudden swing of increased rabid attacks against thambi annamalai???? The usual ones can be dismissed but a new set of attackers makes me wonder if some thing new is being planned.
But confident about who will emerge victorious from this onslaught.
தனியார் பள்ளிகள் சங்க நிறுவனத் தலைவர் பி.டி. அரசகுமாரும், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பிலும் செய்ய இருந்த திருட்டுத்தனத்தை ஒரு வருடத்திற்கு முன்பே தலைவர் அண்ணாமலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காணொளி இதோ👇
இன்று, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் அதே அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்🔥
#Annamalai
இன்று மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற
We the Leaders சந்திப்பு..
மிகச் சிறப்பாக நடைபெற்றது உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது சமூக சேவை பணிகளில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சத்தியசீலன், சிவமுருகன், சின்ன தங்கம், மாதவன், விக்னேஷ், சரவணன் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்
கிருஷ்ண சாய்,கார்த்திக் சிவன் என்னோடு பங்கேற்றனர்
@annamalai_k@WTLFoundation
இன்றைய தினம், முஹர்ரம் பண்டிகையை அனுசரிக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாகம், நீதி, மனிதநேயம் ஆகியவற்றை நினைவூட்டும் இந்த நாளில், சமூகத்தில் நல்லிணக்கமும், சகோதரத்துவமும், அமைதியும் வலுப்பெறட்டும்.
அனைவரின் இல்லங்களிலும் நலனும் வளமும் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.
The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC), under the direction of the TVK Govt, had filed an FIR & conducted a raid yesterday at the residence and other premises associated with former DMK Minister Thiru E.V. Velu avl in connection with alleged irregularities in the execution of road contracts awarded in 2022.
I welcome the TVK Govt's efforts to investigate allegations of corruption from the previous DMK regime. I sincerely hope that the TVK Govt ensures a swift conclusion to these cases, and that anyone found guilty is held accountable in accordance with the law.
While we are on this subject, I urge the TVK Govt to look into the following scams that were exposed over the past 5 years, order an enquiry, and take action accordingly. Naming a few to begin with.
1.BGR Energy Scam – Flouting rules, re-awarding a contract, and later cancelling it after being exposed.
2.Nutrition Kit Scam – Procurement of Health Mix from private vendors at an inflated price despite Aavin coming forward to manufacture it.
3.Pongal Dhoti Scam – Use of excess polyester instead of cotton, and proofs of which were submitted to DVAC.
4.Multiple scams in the State Transport Department – Procurement of Reflective & Rear Marking Plates and much more.
5.TNMSC Scam – Procurement of Pesticides
6.MGNREGA Scam
We also hope the TVK Govt finds the time to solve a long-pending mystery. For years, we have been asking about the rather curious coincidence of Thiru Udhayanidhi Stalin avl's fan club and Noble Steels operating from the very same address, and about Noble Steels' announcement of a ₹1,000 crore investment in Tamil Nadu soon after former Chief Minister Thiru M.K. Stalin's visit to Dubai (that investment remains an announcement, is a topic for another day).
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
"ஸ்ரீதர் வேம்பு அவர்கள் மாதிரி ஆட்கள்தான் நமக்கு தேவை, சிறந்த தேசியவாதி. சமீபத்தில் நான் பிரான்ஸ் நாட்டில் நடந்த கருத்தரங்கில் ZoHo ஸ்டாலில் அதிக இளைஞர்கள் கூடுவதை பார்க்க முடிந்தது. கடல் கடந்தும் நமது இந்திய நிறுவன பெருமை இளைஞர்கள் மத்தியில் பரவியுள்ளதை பார்க்கும்போது ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் உள்ளது."
- பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி!❣️
#NarendraModi