அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலைய காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ₹5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு.
₹5 Lakh Financial Assistance Announced for the Family of a Home Guard Personnel Who Died While on Police Duty at Thalavai Police Station, Ariyalur District.
ஒரே நாளில் 8,704 போக்குவரத்து விதிமீறல்கள் பதிவு – ₹7.65 லட்சம் அபராதம் விதிப்பு.
சென்னை பெருநகரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிமீறல்களற்ற நாள் கடைபிடிக்கப்பட்டு, 88 இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
8,704 Traffic Violations Recorded in a Single Day – ₹7.65 Lakh in Fines Imposed.
Chennai: As part of road safety awareness initiatives, a Traffic Violation-Free Day was observed, with vehicle checks conducted at 88 locations across the city.
காவல்துறையின் துரித நடவடிக்கை – கொலை சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் 12 மணி நேரத்தில் கைது.
மதுரை மாவட்டம்: சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூர்யா என்ற குட்டிசாக்கு என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் 12 மணிநேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர்.
Swift Police Action – Accused Arrested Within 12 Hours in Murder Case.
Madurai District: The accused involved in the murder of a person named Surya alias Kutti Sakku, within the limits of Samayanallur Police Station, were arrested within 12 hours of the incident.
உங்கள் தனியுரிமை... உங்கள் பாதுகாப்பு!
தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதில் எச்சரிக்கையாக இருங்கள்.
YOUR PRIVACY, YOUR SECURITY!
Think before you share. Keep your personal data safe.
காவல்துறையின் அதிரடி நடவடிக்கை: கத்தியை காட்டி லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூன்று பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம்: எரியோடு காவல் நிலையம் எல்லை: கத்தியை காட்டி லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூன்று பேர் கைது- இரண்டு வாள் மற்றும் கார் பறிமுதல்.
Police Crackdown: Three Arrested for Attempting to Extort Money by Threatening Lorry Drivers with Knives.
Dindigul District: Eriyodu Police Station Limits: Three persons arrested for attempting to extort money from lorry drivers by threatening them with knives, two swords and a car seized.
Beware of Digital Arrest Scams!
Fraudsters impersonating TRAI officials use fake documents and threats of arrest to extort money. Remember, there is NO Digital Arrest!
Never transfer money under threats. Report cyber financial fraud immediately by calling 1930.
#DigitalArrestScam #CyberSafety #TamilNaduPolice
தமிழகத்தில், அக்டோபர் மாதத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 20,623 பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை.
Across Tamil Nadu, police registered cases against 20,623 persons for driving under the influence of alcohol during October and took legal action.
நம் மண். நம் மரபு. நம் பெருமை.
காலங்கள் கடந்தாலும் அழியாத வரலாறு; தலைமுறைகள் கடந்தாலும் மாறாத அடையாளம் — தமிழ்நாடு!
நம் பாரம்பரியத்தைப் போற்றுவோம், பெருமையுடன் பாதுகாப்போம்.
இனிய தமிழ்நாடு நாள் (நவம்பர் 1) நல்வாழ்த்துகள்!
— தமிழ்நாடு காவல்துறை
Our Land. Our Heritage. Our Pride.
A history that stands the test of time; an identity that remains unchanged across generations — Tamil Nadu! Let us celebrate our rich heritage and preserve it with pride.
Happy Tamil Nadu Day! (November 1)
— Tamil Nadu Police
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் விழிப்புணர்வு
Instagram-ல் Fake Profile மோசடி! 📱 ⚠️
👩🎓 மாணவிகளே! Instagram போலி கணக்குகளிடம் எச்சரிக்கை! உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் புகைப்படங்களையும் பகிராதீர்கள்.
📞 Singappen Helpline – 1091, Police – 100, Emergency – 112
Singappen Special Force Awareness
Fake Profile Fraud on Instagram! 📱 ⚠️
Students, beware of fake Instagram accounts! Never share your personal information or photos!
📞 Singappen Helpline – 1091, Police – 100, Emergency – 112
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையிலுள்ள ஒரு காவலர் என மொத்தம் 7 காவலர்களின் குடும்பங்களுக்கு, தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக மொத்தம் 5 கோடியே 96 இலட்சம் ரூபாய்க்கான ஆணைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu handed over sanction orders for a total of ₹5.96 crore in personal accident insurance benefits to the families of six police personnel who died in the line of duty and one police personnel who is in a coma.
Drive Against Drugs (DAD)
திருவாரூர் மாவட்டம்: மன்னார்குடி பகுதியில் கல்லூரி மாணவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் – 5 நபர்கள் கைது, 2 இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tiruvarur District: 100 narcotic tablets were seized from college students in the Mannargudi area. Five persons were arrested, and two two-wheelers and mobile phones were also seized.
@Tvr_Police