☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்!
☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்!
☀️ திராவிட முன்னேற்றக் கழகம் - சாமானிய மக்களால் கட்டமைக்கப்பட்ட இயக்கம்!
இந்தப் பேராளுமைகளின் பிறந்தநாளையும், பேரியக்கத்தின் பிறந்தநாளையும் இணைத்துக் கொண்டாடும் #முப்பெரும்_விழா - வரலாற்றைத் திரும்பிப் பார்க்க மட்டுமல்ல; அடுத்த தலைமுறை முன்னோக்கிப் பயணிப்பதற்கும்தான்!
சிந்திக்காமல் Scroll செய்வதும், சரிபார்க்காமல் Share செய்வதும் அல்ல அரசியல். Clarity over Virality என்பதே இளைஞர்களின் அரசியலாக உருப்பெற உழைப்போம்!
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
ஈராயிரம் ஆண்டு இருளுக்கு எதிராக அறிவுத்தீப்பந்தம் ஏந்திய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் இன்று!
‘மானமும் – அறிவும் மனிதர்க்கு அழகு. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ என்று முழங்கிய தந்தை பெரியாரின் பிறந்த நாளை, தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசு #சமூகநீதி நாளாக அறிவித்தது.
திராவிட இயக்கத்தின் அடித்தளமும் – அடையாளமுமாக திகழும் தந்தை பெரியாரின் பணிகளை இன்னும் வேகமாக முன்னெடுப்போம்.
எக்காலத்துக்கும் பொருந்தும் பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் அதிகமாக கொண்டு சேர்ப்போம். தமிழ்நாட்டின் முற்போக்கு முகத்தை நிலைநாட்டுவோம்.
வாழ்க பெரியார்!
ஓங்கட்டும் அவர் புகழ்!!
#Periyar #SocialJusticeDay
தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!
பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.
ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.
பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.
ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.
பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!
#சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!
#RememberingAnna #CNAisOurDNA
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும்,
குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும்,
இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?
பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?
காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?
பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். #Periyar #Anna
சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.
பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா அவர்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.
கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.
தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு பொய்யைச் சொல்லி விட்டு அதற்கு துணையாக பல பொய்களையும், உண்மைகளுக்கான காரணங்களை பொய்யாகத் திரிக்கும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், ஸ்டாலினை உருவ கேலி செய்தார். அதற்கு அடுத்த நாள் பேசிய அமைச்சர் நிர்மல்குமார் அவருக்குப் பழக்கமான அவர் படித்த வரலாற்றுத் திரிபைத் தொடங்கி வைத்தார்.
நெருக்கடி நிலைக்கால போராட்ட வரலாற்றை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்பது தவெகவிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் அஜெண்டா. என் உடல்மொழியில் எந்த உள்நோக்கமுமில்லை என்ற முதலமைச்சரின் பதிவுக்குப் பிறகும், ஐடி விங் என்ற பெயரிலான மொட்டைக் கடுதாசி வன்மம் அதனை உணர்த்தும்.
ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை மிசா காலத்தில்தான் கைதானார் என்ற அரிய வகை பொய் ஒன்றைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மிசாவில் கைதானது உண்மைதான். இது சட்டப்பேரவையில் சபாநாயகர் சொன்னது. ஏனென்றால் சட்டப்பேரவை ஆவணங்களில் அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. மாற்றிப் பேசினால் பிரச்னையாகும்.
நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் அரசியல் கைதிகள் சிறைக்குள் தாக்கப்படுகிறார்கள் என திமுகவின் G. லட்சுமணன்(பின்னாளில் மக்களவை துணை சபாநாயகராக இருந்தவர்) மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய போது, ஸ்டாலின் உள்ளிட்ட மிசா கைதிகள் தாக்கப்படவில்லை என அப்போதைய உள்துறை அமைச்சர் பிரமானந்த ரெட்டி சொன்ன பதில் பதிவாகியிருக்கிறது.
நெருக்கடி நிலைக் காலத்தில் சிறையில் இருந்த தோழர் தியாகு உள்ளிட்டோர் ஸ்டாலின் மிசாவில் கைதானது பற்றி தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
இந்த பொய் ஆதாரப்பூர்வமாக உடைபடுவதைக் கண்டு அவர்கள் எடுத்த அடுத்த பொய் ஆயுதம், திமுக நெருக்கடி நிலையை எதிர்க்கவில்லை என்பது.
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதற்கான காரணங்களை வகைப்படுத்தினால் 1969லிருந்து தொடங்கப்பட வேண்டும். ஆனால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதற்கான உடனடிக் காரணமாக அமைந்தது இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு. அந்த தீர்ப்பு வந்த போதே, இந்திரா காந்தி ராஜினாமா செய்ய வேண்டுமென கோரியது திமுக.
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட 24 மணி நேரத்தில் திமுக செயற்குழு கூடி, நெருக்கடி நிலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தை Magna Carta of DMK என வைகோ குறிப்பிடுவதை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன்.
காமராஜரைக் கைது செய்ய கலைஞர் மறுத்தது, அது தொடர்பிலான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் கருத்தெல்லாம் வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
நெருக்கடி நிலையை திமுக எதிர்க்கவில்லை என்றால், தமிழ்நாட்டில் மட்டும்தான் சுதந்திரக் காற்று வீசுகிறது என இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் ஏன் பேச வேண்டும்? இந்தியாவில் தமிழ்நாடும், குஜராத்தும்(குஜராத்தில் அப்போது பாபுபாய் படேல் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி நடந்தது) தனித்தீவுகளாக இருக்கின்றன என இந்திரா காந்தி ஏன் எச்சரிக்க வேண்டும்?
அதே போல் தங்கள் பொய்களை நியாயப்படுத்த மிசா சட்டம் கொண்டு வரப்பட்ட போது திமுக அதனை ஆதரித்தது ஏன்?.
நெருக்கடி நிலைக்காலத்திற்கு பின் காங்கிரசோடு திமுக கூட்டணி சேர்ந்தது ஏன்?
என 1971லும் 1979,80லும் நடந்த விஷயங்களை துணைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி இன்னொரு முறை விரிவாக எழுதுகிறேன்.
ஸ்டாலின் மிசாவில் கைதானார்.
திமுக நெருக்கடி நிலையை எதிர்த்தது.
இதுதான் வரலாறு. இல்லை என்பவர்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்கிற்காக ஸ்டாலின் சிறை சென்றார் என்ற அயோக்கியத்தனமான கருத்துருவாக்கத்தை பரப்ப முனைபவர்கள் நீங்கள் சொல்வதற்கான ஆதாரத்தை நீங்கள் எடுத்து வாருங்கள்.
சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள், கமிஷன் அறிக்கைகள் ஏதாவது இருந்தால் எடுத்து வாருங்கள் உரையாடுவோம்.
வாட்ஸ் அப் வாந்திகளையும், பொதுக் கழிப்பறைக் கிறுக்கல்களையும் எடுத்துக் கொண்டு விவாதிக்க வராதீர்கள்; நாற்றமெடுக்கிறது.
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றின் அருவருப்பான அசிங்கங்கள் இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கின்றன.
வரலாற்றில் இடம் இருப்பவர்கள், வரலாற்றைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் இடம் இல்லாதவர்கள் அதனை அசிங்கப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நெருக்கடி நிலை எதிர்ப்பென்பது ஒரு Political Willன் வெளிப்பாடு. ஒன்றிய அரசின் செயல்பாடுகளை, பிரதமரின் பெயரை உச்சரித்த உடன் பாய்ந்து வந்து தடுப்பவர்களுக்கு அந்த Political Willஐப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
1975 ஜூன் 25 அன்று நள்ளிரவு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. ஜூன் 27 அன்று திமுகவின் செயற்குழு கூடி அதனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.
இப்போது தவெக அரசின் Sappers and Miners ஆக இருக்கும் வைகோ Magna Carta of DMK என அந்தத் தீர்மானத்தைக் குறிப்பிடுவார். Magna Carta என்றால் என்ன என்பதை படிக்க முயலுங்கள், அந்த தீர்மானத்தின் வீச்சு புரியும்.
இந்தியா முழுக்க நெருக்கடி நிலைக் காலகட்டத்தை எதிர்த்தவர்கள் தலைமறைவாக இருக்கும் இடமாக தமிழ்நாடு இருந்தது. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் தங்கியிருந்தனர். தமிழ்நாட்டில் மட்டுமே சுதந்திரக்காற்று வீசுகிறது என இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பதிவு செய்திருக்கிறார்.
நெருக்கடி நிலைக்காலகட்டத்தில் இந்திரா காந்தியின் முதல் எதிரியாக கருதப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனோடு கலைஞர் கொண்டிருந்த உறவும், காமராஜரைக் கைது செய்ய மறுத்ததையும், கலைஞரோடு இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்து போராடுமாறு காமராஜரிடம் சொல்லவிருப்பதாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் பகிர்ந்ததையும் தேவசகாயம் ஐ.ஏ.எஸ் பதிவு செய்திருக்கிறார். நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் ஜெ.பி அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையை உள்ளடக்கிய சண்டிகர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் தேவசகாயம்.
நீங்கள் நெருக்கடி நிலையை எதிர்க்காதீர்கள்; பதவிக்காலத்திற்குப் பின்னரும் தேர்தலின்றி உங்கள் ஆட்சி நீடிக்கும் என இந்திரா காந்தி கொடுத்த ஆஃபரை மறுதலித்து நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்தார் கலைஞர்.
அதன் பரிசுதான் ஆட்சிக் கலைப்பு, தொடர்ந்து கட்சியினர் கைது.
மிசா காலத்தில் ஸ்டாலின் கைது பற்றி, ஏற்கனவே பிரச்னை கிளப்பியவர் மாஃபா பாண்டியராஜன். இப்போது அதனை பிரச்னையாக்கியிருப்பவர் நிர்மல்குமார்.
நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தில் தனது அரசியலைத் தொடங்கியவர் நிர்மல்குமார். முதலில் நெருக்கடி நிலையை எதிர்த்த அந்த இயக்கம் பிறகு இந்திரா காந்தியிடம் சரணடைந்து, 20 அம்சத் திட்டம் பற்றி பரப்புரை செய்யத் தொடங்கியது. அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு போராட்டக்காரர்கள் விசித்திரமாகத்தான் தெரிவார்கள்.
நெருக்கடி நிலை காலகட்டத்தில், பிரிவினைவாதம் பேசி தமிழ்நாட்டில் புரட்சி உண்டாக்க முனைந்த காரணத்தால், மிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லும் ஆவணத்தை ஆதாரமாகத் தர முடியும். சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் பேசியதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?
தவெகவின் இந்தக் கருத்துருவாக்கம் நேற்றோ இன்றோ தொடங்கியதில்லை. சில நாட்களுக்கு முன்பு நான் நெறியாள்கை செய்த நிகழ்ச்சியில் தவெகவைச் சேர்ந்த ஒருவர் இதனை பேச முயன்றார். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; வேண்டுமானால் இஸ்மாயில் கமிஷன் அறிக்கையை தருகிறேன் படிக்கிறீர்களா என்றேன். இல்லை அதனை விட்டு விடலாம் என்றார். அந்த அசிங்கமான கருத்துருவாக்கம் இன்று சட்டப்பேரவைக்குச் சென்றிருக்கிறது.
நெருக்கடி நிலை காலகட்டத்தில் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானதற்கு இஸ்மாயில் கமிஷனில் ஆதாரம் இருக்கிறது. அந்த இஸ்மாயில் கமிஷன் அறிக்கை சட்டப்பேரவையில், வைத்து விவாதிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் ஏற்கனவே வைத்து விவாதிக்கப்பட்ட ஒன்றிலிருந்து மாற்றமாக வேறொன்றை, ஆதாரமில்லாமல் பேரவையில் பேச நடுநிலை சபாநாயகர் எப்படி அனுமதித்தார் என்று தெரியவில்லை.
பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்பதை நிறுவுவதற்காக எல்லா அழிச்சாட்டியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
வரலாறு என்பது நடந்தது. ஆவணங்களிலும், ஆதாரங்களிலும் அது நிறைந்திருக்கிறது. பொதுக் கழிப்பறையில் கிறுக்கப்படும் அசிங்கமான கிசுகிசுக்களில் அதனைத் தேடாதீர்கள்.
What happens to a society when the public execution of a father’s dignity is rebranded as political theater?
Imagine a son watching a man mock the physical violence inflicted upon his father, brazenly reenacting a broken jaw for public spectacle. That man operates safely behind the shield of political discourse, insulated by fanatical popularity. Meanwhile, the son is bound to an impossible expectation to show absolute restraint.
If you react harshly, you are immediately labeled volatile, hot-headed, and unfit for governance. If you remain silent, you are forced to stomach a public desecration of blood, lineage, and basic human dignity.
This is the most obnoxious decay of contemporary Tamil Nadu politics. The system demands that the victim absorb the blow gracefully while the instigator reaps the cheap applause of a desensitized crowd.
The present day system weaponizes deep personal trauma under the banner of political critique, forcing a leader to completely sever human instinct for political survival.
It asks a son to watch his father’s past suffering degraded into a punchline, and then audaciously measures his maturity by how effectively he buries his rage. The true danger here extends far beyond the erosion of political debate, it is the dangerous normalization of cruelty, where human dignity is systematically traded for viral content, short-form reels, and cheap political leverage.
When we applaud the weaponization of a son's silent grief for a moment of political entertainment, are we choosing leaders or are we simply validating our own loss of humanity?
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
ஒரு சின்ன டேட்டாவ வாரம் ஒரு நாள் போஸ்ட்டா போட்டு விடலாம்னு ஒரு ப்ளன்..! Social Media Manipulation - How it’s planned and executed..?
இன்னைக்கு வெளியான வீடியோ...! இந்த வீடியோல எதுவோ சரியில்லை என தோன்றியதால் தேடி பாத்ததுல கிடைத்த பல விசயங்களில் ஒரு சிலது மட்டும்..! 1/n