News Update | விலை ரொம்ப குறைவாம்!
இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 'EL01' என்ற புதிய மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வருவதாகத் தகவல்
இந்த புதிய மாடலை வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள Ather Community Day நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது
Ather Energy | Automobile News | 22 July 2021
#Ather #automobilenews
"நீட் குறித்து மாணவர்கள் அறவழியில் போராடினால் ஆதரிப்போம். நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு என்பது தான் தவெக அரசின் நிலைப்பாடு. டெல்லியில் ஜனநாயக முறையில் போராட்டம் நடைபெறுகிறது. மாணவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். சாலை என்பது போராடுவதற்கான இடமல்ல. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும், கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும்"
- அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan #TVK #NEET #DelhiProtest #CJP #ThanthiTV
"நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.கவின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்." - முதல்வர் விஜய்
#Vijay | #TVK | #NEET
திமுக ஆட்சியில அராஜகம் திருட்டுத்தனம் பண்ணாங்க..
இப்ப எல்லாமே தலைகீழ நல்லதா மாறி போச்சு.. அமைச்சர் ரமேஷுக்கு நன்றி தெரிவித்த பழனி மக்கள் ❤️
@RameshOffcl 👌🏻
திமுக சூழ்ச்சி எதும் மக்களிடம் எடுபடல🥱
அறப்போர் வழக்கில் பொதுத்துறை செயலர் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணை ! பின்னணி என்ன ?
சென்னை கோவை மாநகராட்சி ஊழல் மீது அறப்போர் புகார்: செப்டெம்பர் 2018
நெடிய நீதிமன்ற சட்ட போராட்டத்திற்கு பிறகு DVAC FIR: ஆகஸ்ட் 2021
மீண்டும் சட்ட போராட்டத்திற்கு பிறகு, அக்டோபர் 2023 க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணை
ரூ 98 கோடி குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியது : டிசம்பர் 2023
முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் பொறியாளர்களுக்கு நீதிமன்ற விசாரணைக்கு அனுமதி கொடுத்த மாதம் : ஜனவரி மற்றும் பிப்ரவரி 2024.
ஆனால் வழக்கில் 2 IAS அதிகாரிகளுக்கான (விஜய்கார்த்திகேயன் IAS , கந்தசாமி IAS) நீதிமன்ற அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்கான கோப்பை தமிழ்நாட்டின் பொதுத்துறை செயலர் 2024 ஜனவரி முதல் கோப்பையை அனுப்பாமலேயே வைத்து இருந்தார்.
அறப்போர் 2024 ஏப்ரலில் முதல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.
2025 இல் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கிறோம். அந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 2025 இல் விசாரணைக்கு வந்த பிறகு தான் பொதுத்துறை செயலர் 2 IAS அதிகாரிகள் கோப்பை ஆகஸ்ட் 30 2025 மத்திய அரசுக்கு அனுப்புகிறார்.
மத்திய அரசு மொழிபெயர்ப்பு கேட்டு செப்டெம்பர் 1 திரும்ப அனுப்புகிறது.
மொழிபெயர்ப்பு முடித்து நவம்பர் 7, 2025 அன்று மாநில அரசு பொதுத்துறை மத்திய அரசுக்கு அனுப்புகிறது.
மீண்டும் பிப்ரவரி 4, 2026, மத்திய அரசு சில விளக்கங்களை கேட்கிறது. விளக்கத்தை 27 பிப்ரவரி 2026 அன்று லஞ்ச ஒழிப்பு துறை மாநில பொதுத்துறை அதிகாரிக்கு அனுப்பி விடுகிறார்கள்.
மீண்டும் பிப்ரவரி 2026 முதல் இன்று வரை கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பாமல் பொதுத்துறை செயலர் இழுத்து வருகிறார்.
மாநில அரசு எப்பொழுது மத்திய அரசுக்கு அனுப்பும் ? இதற்கு பிறகு மத்திய அரசு எத்தனை காலம் எடுத்து கொள்ளுமோ ? அதற்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் . அதற்கு பிறகு நீதிமன்ற விசாரணை நடைபெற வேண்டும். அதற்கு பிறகு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற மேல்முறையீடுகள் நடைபெறும் !
இந்த இடத்திற்கு வரவே இவ்வளவு போராட்டங்கள். இந்த புகாருக்காக அறப்போர் சந்தித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் - 18, பொய் FIR - 13 .
அறப்போர் தொடரும் !
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தற்போது ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
#CheifMinisterBreakFastScheme | #PerunthalaivarKamarajarBreakFastScheme | #TVK | #TNGovernment
திருப்பத்தூர் : போடாத சாலைக்கு ரூ.6.65 லட்சம் செலவின கணக்கு? ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Panchayat | RoadProject | PublicFunds | CorruptionAllegation
#Newstamil24x7#Tirupattur
கேரள மாநிலம் குமுளி-தேக்கடியில் உள்ள சொகுசு விடுதிகளின் கழிவுநீர், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் முல்லைப் பெரியாறு ஆற்றில் கலப்பதாகக் கூறப்படும் இடத்தை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா நேரில் ஆய்வு செய்தார்.
உடனடியாக சாக்கடை கழிவுநீர் கலப்பை தடுத்து நிறுத்த கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - MLA ஜெகநாத் மிஸ்ரா
MullaperiyarDam | Kerala | WaterPollution | MLAJaganathMishra
#Newstamil24x7 #Environment
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கீழக்கடையம் பகுதியில், விவசாய நிலம் மற்றும் ஜம்பு நதிக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 10 டன் ஆபத்தான கேரளக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டுள்ளன.
#CMVijay | #TNGovt | #Tenkasi | #Keralam