திருவாரூர் - கோவில்வெண்ணி அருகே ஆதனூர் கிராமத்தில் களை எடுக்கும் பெண்களிடம் சற்று உரையாடி, நிறை குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினேன்.
"உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது"
உலகத்திற்கே படியளக்கும் விவசாய பெருமக்களை இன்று ஆதனூரில் நேரில் சந்தித்து நடவுப் பணிகள் குறித்து விசாரித்து கலந்துரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நானும் ஒரு விவசாயி என்பதில் மேலும் உள்ளம் மகிழ்கிறது.
மாண்புமிகு அமைச்சர் திரு.M.R.விஜயபாஸ்கர் அவர்கள், அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றுக்குள்ளான செய்தியறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.
சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு அமைச்சர் @OfficeofminMRV அவர்கள், அவரது மனைவி,மகள் ஆகியோர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திர தினமான இன்று (15.8.2020) சென்னை தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினேன். #சுதந்திரதினம்#IndependenceDayIndia2020
கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.3,000 கோடி உடனடியாக தேவை
நவம்பர் வரை ரேஷனில் வழங்க 55,637 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வழங்க வேண்டும்
- மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களிடம் மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வலியுறுத்தல்.
"நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் யுகம்தோறும் பிறக்கிறேன்" என்றுரைத்த காக்கும் கடவுள் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை உவகையோடு கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் "கிருஷ்ண ஜெயந்தி" நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா பாதித்த பகுதிகளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி @CMOTamilNadu அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பாக உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்த போது..
மான ரோஷம் இருந்தால் அண்ணா திமுக கொடியைக் காட்டி எம்.எல்.ஏ ஆன எஸ்.வி.சேகர் அந்த சம்பளத்தையும் பென்சனையும் திருப்பிக் கொடுக்கவேண்டும்!
-மாண்புமிகு அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் காட்டம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் சகோதரி திருமதி.பானுமதி என்கிற வான்மதி அவர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 5.8.2020 அன்று நடைபெறவுள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க "அயோத்தியில் இராமர் கோவில்" கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.