🏴🚩ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சார முடிவுற்ற நிலையில் நமது கழகத்தின் துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் மதிப்புக்குரிய அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் நமது வெற்றி வேட்பாளர் வி. சி.சந்திரகுமார் அவர்களுடன்,,,🏴🚩. #Erodebyelection
ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மண்ணின் மாவீரர் பூலித்தேவரின் பிறந்த நாள் இன்று.
அடிமைத்தனத்தை வீழ்த்திட வீறுகொண்டு எழுந்த பூலித்தேவரின் வீரத்தைப் போற்றுவோம். அவர் புகழ் ஓங்கட்டும்!
#Pulithevar
கழக மறுசீரமைப்பு தலைமைக் கழக பிரதிநிதிகள் தலைமைக்கழக அறிவிப்பு
கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கழகத் தலைவர் அவர்கள் 110 கழக மாவட்டங்களை அறிவித்துள்ளார்.
கழக சீரமைப்புக்குழு வகுத்துத் தந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பகுதி – நகரம் – ஒன்றியம் – பேரூர் – வட்ட – கிளைக் கழகங்களை மறுசீரமைத்து, தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கும் பணியை நேரடியாக மேற்பார்வையிடுவதற்காக ஒரு வருவாய் மாவட்டத்திற்கு இருவர் வீதம் 76 தலைமைக் கழகப் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் நடத்தும் மாவட்டச் செயற்குழு கூட்டங்கள் அனைத்தும் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். பகுதி – நகரம் – ஒன்றியம் – பேரூர் – வட்ட – கிளைக் கழகங்கள் மறுசீரமைப்பில் ஏதேனும் கருத்துகள், மாறுபாடுகள் இருப்பின் கழகத்தினர் தமது மாவட்டத்திற்குரிய தலைமைக் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கலாம்.
தலைமைக் கழகப் பிரதிநிதிகளுடன், வரும் புதன்கிழமை (செப்டம்பர் 02, 2026) அன்று கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் மாலை 5 மணியளவில் காணொலிக் கூட்டம் நடைபெறும். மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சட்டப்பேரவை நடைபெறாத நாட்களில் நடத்தும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#BREAKING | பேரூராட்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ள பல டெண்டர்களில், விதிகளை மீறி, டெண்டர்களை சமர்ப்பிக்க சில நாட்களே கால அவகாசம்
#SunNews | #TNGovt | #TNTenders
இது அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு!
- தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக குறித்து அவதூறு பரப்ப முயன்ற, காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரத்துக்கு திமுக IT Wing-ன் துணைச் செயலாளர் மதுரை எஸ்.பாலா கண்டனம்!
#PChidambaram#DMK#DMKITWing#Delimitation#KalaignarSeithigal
இன்று தஞ்சை - வடசேரியில் நடைபெற்ற, கழக முன்னோடி திரு. கனகசபை அவர்களின் பேரன் திரு. த.செந்தில்நாதன் - திருமிகு. ம.நந்தினி இணையரின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!
(1/2)
#DMK4TN
என்றும் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தது திமுகதான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மக்கள் மன்றத்திற்குத் தெளிவாகத் தெரிந்த இந்த உண்மைகள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாமல் போனது வியப்பளிக்கிறது. சட்டமன்றம் என்பது கடந்த கால நிகழ்வுகளை வைத்துப் பரஸ்பரம் பழி சுமத்துவதற்கான இடமாக இல்லாமல், எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கான ஜனநாயக மேடையாகத் திகழ வேண்டும்.
— SDPI மாநிலத் தலைவர் திரு. முகமது முபாரக் அவர்கள்
தே.மு.தி.க நிறுவன தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற அன்பும் - கழகத்தலைவர் @mkstalin அவர்களுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர்.
ஏழை எளிய மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர் அண்ணன் கேப்டன் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்!
அவர் புகழ் ஓங்கட்டும்!
#CaptainVijayakant
திரையுலகில் தொடங்கி அரசியலிலும் தனக்கெனத் தனிப் பாதையை உருவாக்கிப் பயணித்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.
தலைவர் கலைஞர் அவர்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவராகத் திகழ்ந்தவர். கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரிடமும் அன்பு காட்டிய பண்பாளர்.
அவரது பிறந்தநாளான இன்று, மனிதநேயத்துடன் மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்கிறேன்.
ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி @PremallathaDMDK அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!