கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் நல்லாசியுடன், கழகத் தோழர்கள் மற்றும் ஆலந்தூர் தொகுதி மக்களின் பேராதரவுடன் ஆலந்தூர் தொகுதிக்கு கழக வேட்பாளராக போட்டியிட கழகத் தோழர்களுடன் ஊர்வலமாகச் சென்று கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் திரு.ஆர்.எஸ்.பாரதி மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த போது..
#வாக்களிப்பீர்_உதயசூரியன் #DMK4TN
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#ஆலந்தூர்_வளரட்டும்
“மகிழ்ச்சி… மகிழ்ச்சி” என்று அலங்காநல்லூரில் கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரிக்க இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டேன்!
#வெல்வோம்_ஒன்றாக#Jallikattu#DravidaPongal
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தான் திராவிட மாடல். பெண் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதும், அவர்கள் உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதும், அவர்களின் உயர்கல்வியையும், வேலை வாய்ப்பையும் முதன்மையாக கொண்டு செயல்படுவதும்தான் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் ஆட்சியின் சிறப்பம்சம்.
#தினகரன் #DMK4TN
#HappyNewYear2026
மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்; தமிழ்நாட்டு மக்களான நாம் அனைவரும் வெற்றி பெறுவோம்!
Marching ahead towards a resounding victory; we, the people of Tamil Nadu, will rise together and succeed.
மக்களுக்கு நாள்தோறும் நலத்திட்டங்களைச் செயல்படுத்திய திராவிட மாடல் ஆட்சியில் 2025 ஆம் ஆண்டை Rewind செய்து பார்ப்போம்! 🤩
திராவிட மாடல் 2.0 Loading.. 🖤❤️
#DMK4TN#HappyNewYear2026
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தியறிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உடனடியாக மாவட்ட ஆட்சியரையும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் நாம் ஈரோட்டிற்கு வந்திருந்த போது, வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வழங்கி வாழ்த்தினோம். மாணவச் செல்வங்கள் காட்டிய அன்பில் நெகிழ்ந்தோம்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்லவும் - நம் மாணவச் செல்வங்களின் முன்னேற்றத்துக்கும் என்றும் துணை நிற்போம்.
@Muthusamy_erode@V_Senthilbalaji@keprakashdmk@vcckdmk
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட சீரிய முயற்சியின் காரணமாக, 2025- 2026 ஆம் ஆண்டு சம்பா மற்றும் நவரை பருவ பயிர்களை காப்பீடு செய்ய விதிகளை தளர்வு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2025 நவ.30-ஆம் தேதி வரை காப்பீடு செய்ய காலநிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் 2025 டிச.1 ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்!
மாண்புமிகு அமைச்சர் திரு @MRKPanneer அவர்கள்
#DitwahCyclone
தேசிய அரசியலில் திமுகவின் தாக்கத்தை விளக்கி கழக துணைப் பொதுச் செயலாளர் @dmk_raja MP அவர்கள் ஆற்றிய உரையின் காணொலி தொகுப்பை இன்று மாலை 6:30 மணிக்கு மணிக்கு @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
#DMK75@arivalayam
தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு ஒருவாரம் காலநீட்டிப்பு!
திமு கழகத்தின் ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது!
திமுக சட்டத்துறைச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான திரு என்.ஆர். இளங்கோ,எம்.பி., அவர்கள் இன்று (30-11-2025) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேர்தல் ஆணையம் SIR நடவடிக்கைக்கு ஒருவாரம் கால நீட்டிப்பு வழங்கியிருப்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தது தொடர்பான செய்திக்குறிப்பு:
தேர்தல் ஆணையம்27/10/2025 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்திய எஸ்.ஐ.ஆர் நடைமுறையும் அதன் கால அளவீடுகளும் நடைமுறைக்கு உவாதவை என்பதை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகம் 2002 ஆம் ஆண்டிலிருந்தே இறந்துபோன வாக்காளர்கள், இரட்டைப் பதிவுள்ள வாக்காளர்கள் மற்றும் குடிமாறிச் சென்றவர்களை நீக்கி தூய்மையான வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. எஸ்.ஐ.ஆர் நடைமுறையை நாங்கள் வரவேற்றாலும், இந்த வழிமுறைகள் சட்டத்திற்குப் புறம்பாக இருக்கின்றன. இவை பல வாக்காளர்களை நீக்குவதற்கும், தகுதியில்லாத வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் வழிவகுக்கும் என்ற அச்சம் எழுகிறது.
மேலும் தகுதி இல்லாத வாக்காளர்களை சேர்ப்பதற்கான வழி காட்டுகிறது என்பதை எடுத்துச் சொன்னோம். அதில் முதலாவதாக காலக்கெடு என்பது மிக நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தோம். கழகத் தலைவர் அவருடைய வழிகாட்டுதலின் பெயரில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது, ஜனநாயக முறையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் இணைந்து அறப்போராட்டம் நடத்தினோம், இருந்தாலும் கூட களத்திலிருக்கும் எந்த ஒரு வாக்காளருடைய வாக்கும் நீக்கப்படக்கூடாது என்பதற்காக திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய பிஎல்ஏக்கள் தீவிரமாக பணியாற்றினார்கள்.
ஒவ்வொரு நாளும் தேர்தல் ஆணையர் எவ்வளவு படிவங்களை வழங்கினோம் எவ்வளவு படிவங்களை கணினி மயமாக்கினோம் என்ற ஒரு கணக்கை தந்து கொண்டே வந்தார், ஏறக்குறைய 95 சதவீதத்திற்கு மேலான படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன என்று சொன்ன தேர்தல் ஆணையம் ஏறக்குறைய 75லிருந்து 80 சதவீதம் வரை கணனிமயமாக்கப்பட்டிருக்கிறது என்றது. ஆனால் சென்னையில் 55 சதவீதம் மட்டும்தான் கணினி மயமாக்கப்பட்டிருக்கிறது.
எத்தனை படிவங்கள் அல்லது எத்தனை சதவீத படிவ செல்வங்கள் திரும்ப பெறப்பட்டன என்ற கணக்கை தேர்தல் ஆணையம் தரவே இல்லை எவ்வளவு கொடுத்தோம் என்று சொல்கிறார்கள் எவ்வளவு கணனி மயப்படுத்தினோம் என்று சொல்கிறார்கள் எவ்வளவு திரும்ப பெற்றோம் என்பதை மட்டும் சொல்லவே இல்லை.
இதன் மூலம் பல வாக்காளர்களுடைய வாக்குகளை நீக்கிவிடும் அச்சம் இருக்கிறது. மேலும் பெறப்பட்ட படிவங்களை கணினி மயமாக்குவதில் மிகுந்த காலத்தாமதம் ஏற்படுதாக நாங்கள் உணர்ந்தோம்; அதனால்தான் மீண்டும் மீண்டும் இந்த கால அட்டவணை சரியானது அல்ல என்பதை வலியுறுத்தி வந்தோம்; மேலும் பருவமழை காரணமாக இந்த பணிகள் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது என்பதையும் சுட்டி காட்டினோம்; அதற்கு ஏற்றார் போல் தற்போது வந்திருக்கக்கூடிய புயலும் அந்த பணிகளை பாதிக்க கூடியதாக இருக்கிறது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய அந்த நியாயமான வாதத்தை ஏற்று ஒரு வார காலத்திற்கு இந்த கணக்கீட்டு காலத்தை நீட்டித்திருக்கிறது அது உண்மையிலேயே திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அதனுடைய ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்; எந்த ஒரு தமிழ்நாட்டு குடிமகனுடைய வாக்கும் விடுபட கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அந்த பயணத்தில் முதல் வெற்றியாக ஒரு வார காலத்திற்கு இதை தள்ளி வைத்திருப்பது கொடுக்கப்பட்ட அனைத்து படிவங்களை திரும்ப பெறுவதற்கும் அவற்றை கணினி மயமாக்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம். இருந்தாலும் கூட இந்த எஸ்ஐஆர் பணியில் பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
அவற்றை உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். பீகார் தேர்தலில் அல்லது பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆரில் வாக்காளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது தெரிந்தெடுக்கப்பட்டவர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர் அதை காட்டி தமிழ்நாட்டில் வாக்காளர் ஆகலாம் என்பதை 13வது ஆவணமாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ளக்கூடியது அல்ல.
அதாவது அந்த வாக்காளர் பீகாரில் சாதாரணமாக வசிக்க கூடியவர் என்பதை ஜூலை மாதம் 2025 தேர்தல் ஆணையம் அறிவித்தது, அந்த வாக்காளர் நவம்பர் மாதத்தில் பீகாரில் வாக்களித்துவிட்டு அதே நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் நடத்தக்கூடிய எஸ்.ஐ.ஆரிலும் சாதாரணமாக வசிக்கக்கூடியவர் என்ற தகுதியை பெறுவார் என்பது எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ளக்கூடியதாக இல்லை. இது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.
அவற்றை எடுத்துச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் 4 ஆம் தேதி எங்களுடைய வாதத்தை எடுத்து வைக்க இருக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குறள் எண்: 128
கலைஞர் உரை:
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
#திருக்குறள்
கழக இளைஞர் அணிச் செயலாளரும், மாண்புமிகு துணை முதலமைச்சருமான திரு @Udhaystalin அவர்களின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளர் திரு.கோல்டு டி.பிரகாஷ் அவர்களின் ஏற்பாட்டில் #ஆலந்தூர் தொகுதியில் உள்ள 500 இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு வெண் சீருடைகளும், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கிய போது…
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் திரு.ஆர்.எஸ்.பாரதி, மாநில இளைஞர் அணிச் துணைச் செயலாளர் திரு.பிரபு கஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்..
S.I.R. குறித்து தமிழ்நாடே புலம்பிக் கொண்டிருக்கிறது! அதை ஆதரித்து அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் சென்றிருப்பது வெட்கக் கேடு!
கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14-11-2025) கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
இன்றைக்கு நாம் எங்கு சென்றாலும் S.I.R. பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதைப் பேசாமல் இருக்க முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும், “நாங்கள் இந்திய குடிமக்கள்தான்” என்று நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். காரணம், தேர்தல் ஆணையம் அப்படிப்பட்ட ஒரு பெரும் சுமையை நம்மீது சுமத்தியிருக்கிறது. மக்களின் வாக்குரிமையே பறிபோகும் அளவிற்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை உருவாக்கியவர்கள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒன்றியத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இதை உருவாக்கியிருக்கிறார்கள். எவ்வாறு, விசாரணை அமைப்புகளை வைத்து, பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ஆட்சிகளுக்கு இன்னல்களையும் துன்பங்களையும் தந்து கொண்டிருக்கிறார்களோ, அதேபோல் தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தி அப்படி ஒரு சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஏற்கனவே, நீங்கள் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் - காங்கிரஸ் பேரியக்கத்தின் இளந்தலைவர் நம்முடைய அருமைச் சகோதரர் திரு. ராகுல் காந்தி அவர்கள் வெளிப்படையாகவே வாக்குத் திருட்டைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்துவைப்பது மட்டுமல்லாமல், ஆதாரங்களோடு அதைச் சுட்டிக்காட்டி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் உண்மையான வாக்காளர் ஒருவர்கூட வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம். மக்கள் மன்றத்திலும் விளக்கிக்கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நம்முடைய தோழமைக் கட்சிகளாக இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சித் தலைவர்களையெல்லாம் அழைத்து இது சம்மந்தமாக கூட்டத்தை நடத்தி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து நவம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டம் கட்சிப் பாகுபாடின்றி - பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் - அது நமக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நம்மை விமர்சிக்கும் கட்சியாக இருந்தாலும் சரி, எந்த கட்சிகளாக இருந்தாலும் பாகுபாடு பார்க்காமல் அத்தனை கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். அந்த கூட்டத்தையும் கூட்டினோம். அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். அந்த அடிப்படையில் நாம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறோம். அதுமட்டுமின்றி, கடந்த 11-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மாவட்டத் தலைநகரங்களில் நம்முடைய தோழமைக் கட்சிகளின் தலைவர்களெல்லாம் பங்கேற்கக் கூடிய வகையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம். நம்முடைய உணர்வுகளையெல்லாம் தொடர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறோம். வழக்கமாகத் தேர்தலில் கழகத்தை வெற்றிபெற வைக்கும் பொறுப்பைத்தான் உங்களிடத்தில் ஒப்படைப்பதுண்டு. ஆனால் இந்த முறை, மக்களுடைய வாக்குரிமையைப் பெற்றுதரும் பெரும் பொறுப்பையும் கூடுதலாக உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். அதுவும் கொளத்தூர் தொகுதியின் செயல் வீரர்களாக விளங்கிக் கொண்டிருக்கும் உங்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை. என்னைவிட விழிப்பாக இருக்கக்கூடியவர்கள் நீங்கள். வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. நமக்கு அதிக கால அவகாசம் இல்லை. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நவம்பர் 4-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையில் ஒருமாத காலம் நிர்ணயம் செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குள் எல்லோருடைய கணக்கீட்டுப் படிவமும், அதாவது நாம் வாக்காளராக சேரும் விண்ணப்பப் படிவம் - அதைத்தான் கணக்கீட்டுப் படிவம் என்று சொல்கிறோம். கணக்கீட்டுப் படிவம் என்றாலும் சில பேருக்குப் புரியாது.
நாம் வாக்காளராக சேருவதற்கு ஒரு படிவம் கொடுக்கிறார்கள். இன்றைக்கு தேதி 14. பத்து நாட்கள் முடிவடைந்துவிட்டன. மீதி இருப்பது எத்தனை நாட்கள் என்று உங்களுக்குத் தெரியும். அந்த விண்ணப்பதை நாம் வாங்கிப் பார்க்கும் போது, நமக்குப் பெரிய குழப்பம் வருகிறது. தலை சுற்றுகிறது. தமிழ்நாடு அதுகுறித்து புலம்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி அவர்கள் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தித் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் எதிர்க்கட்சியும் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அவர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எதிர்க்கட்சியாக இல்லை. இப்படியே சென்றுக்கொண்டிருந்தால் எதிர்க்கட்சியாக மட்டுமல்ல. உதிரிக் கட்சியாக கூட இருக்க முடியாத ஒரு சூழ்நிலை நிச்சயம் ஏற்படும். அதாவது தங்களுடைய கட்சியை டெல்லியில் கொண்டுசென்று அடமானம் வைத்துவிட்டு அந்த SIR-ஐ ஆதரித்து - அவர்கள் போட்டுக்கொண்டிருக்கும் நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக்கொண்ட நிலையில் அவர்கள் அடமானம் வைத்திருக்கிறார்கள். அதை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்லா கட்சிகளும் உச்சநீதிமன்றத்திற்குச் செல்கிறோம்.
ஆனால், இங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. அதை ஆதரித்து உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் வெட்கக் கேடு நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மக்களைச் சந்திக்க அவர்களுக்குத் தெம்பு இல்லை. அதனால்தான் இந்தக் குறுக்கு வழியை அவர்கள் நாடியிருக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட நிலையில் உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, தொகுதி முழுவதும் ஒரு பூத் விடாமல் சுற்றிச் சுழல வேண்டும். அந்தக் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப நாமெல்லாம் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நியமித்திருக்கும் BLO-க்கும் - மக்களுக்கும் இடையே நம்முடைய BLA2-தான் துணை நிற்க வேண்டும். உதவிசெய்ய வேண்டும். ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதைப் பூர்த்தி செய்ய அனைத்து வகையிலும் நீங்கள் துணைநிற்க வேண்டும் என்று உங்களையெல்லாம் இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.
கொளத்தூரில் வெற்றி என்பது, நிர்ணயிக்கப்பட்ட வெற்றிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தப் பணியைப் பொறுத்தவரை, நான் வெற்றி பெறுவதில் எனக்கு இருக்கும் ஆர்வத்தை விட உங்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது.
நான் எப்போதும் கொளத்தூருக்கு வரும்போதெல்லாம் சொல்வதுண்டு. என்னதான் நான் தி.மு.க.வின் தலைவராக இருந்தாலும், என்னதான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சுற்றிச் சுழன்றுக் கொண்டிருந்தாலும், கொளத்தூருக்கு வரும் போதுதான் எனக்குப் பெரிய உத்வேகமும், உற்சாகமும் வழங்கும் வகையில் தொடர்ந்து நீங்கள் வரவேற்பைத் தந்து கொண்டிருக்கிறீர்கள். எனவே, 10 நாட்களுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது இருமுறை நானும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். எனவே, இந்த வாக்காளர்களைச் சரிபார்க்கும் S.I.R. வாக்கு சேகரிக்கும் பணியைப் பொறுத்தவரைக்கும், உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும், நாங்கள் செய்வதற்குக் காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம். ஆனால், நம்முடைய பணியில் சுணக்கம் இருந்துவிடக்கூடாது. நான் ஏற்கெனவே சொன்னதுபோன்று, இந்த மாதம் 4-ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை என்று சொன்னாலும், பத்து நாட்கள் முடிந்துவிட்டது. எனவே, மீதமிருப்பது இன்னும் 15 நாட்கள்தான். எனவே, அதனை முடிக்க வேண்டிய பணிகளில் நீங்கள் ஈடுபடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்துத் தாருங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு, எவ்வாறு கொளத்தூர் தொகுதி, மற்ற தொகுதிகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறதோ, அதேபோல் இந்த S.I.R. பிரச்சினையில் முறையாக வாக்கு சேகரிக்கின்ற பணிகளிலும் முதலிடத்தைப் பெறும் வகையில் நீங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. எனவே, அந்தப் பணியை நிறைவேற்றித் தாருங்கள்… நிறைவேற்றித் தாருங்கள் என்று அன்போடு கேட்டு உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பை பெற்றமைக்கு மீண்டும் ஒருமுறை எனது இதயப்பூர்வமான நன்றி, நன்றி, நன்றி! என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
***