திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக வேட்பாளர் திரு.கருப்பையா அவர்கள் நமது கழக முதன்மை செயலாளர் திருச்சி நாளுமன்ற உறுப்பினர் அண்ணன் துரை வைகோ அவர்களை பற்றி பொய்யான தகவலை வீடியோ மூலம் நேற்றிலிருந்து பரப்பி வருகிறார். அவருக்கு கழக இணையதள அணி சார்பில் இந்த வீடியோ மூலம் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. @Karuppaiah_pa @duraivaikooffl
கிட்டதட்ட 50 நாட்களாக உணவுசெரிமானம் ஆகாமல் வயிற்றுப்போக்கு குறையாமலும், இடைவிடாத பயணத்தாலும் சோர்வுற்று ஒருநாள் இரவில் சிறையில் மயங்கி விழுந்தேன். இரவு நேரம் கழித்து சிறைக்காவலர் என்னை வெளியில் இழுத்து வாசலுக்கு வெளியே போட்டார். மயக்கம் தெளியாத நிலையிலும், சிகிச்சைக்கு கொண்டு செல்ல அனுமதி கிடைக்காமல் இருந்த சமயத்தில் பெயர் தெரியாத ஒரு சிறை காவலர் என்னை தோளில் தூக்கி போட்டுக்கொண்டு சிறை மருத்துவமனையில் சேர்த்தார். மயக்கம் முழுமையாக தெளிந்து பிறருக்கு செய்தி தெரியாமல் இருக்க மீண்டும் என்னை சிறையில் அடைத்தனர். இது ஓரிரு நாளில் சிறைவாசிகளுக்கு தெரியவந்து, ராஜீவ்காந்தி வழக்கின் சிறைவாசி தோழர் முருகன் வாயிலாக மே17 தோழர்களுக்கு தெரியவந்தது. நான்கு நீதிபதிகள் சிகிச்சைக்கு என்னை கொண்டு செல்ல உத்திரவிட்டும் சிறை நிர்வாகம் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை. இது நடந்து மூன்றாவது நாளில் தாம்பரம், சைதாப்பேட்டை நீதிமன்றங்களின் வழக்குகளுக்காக வேலூரில் இருந்து அழைத்து வந்திருந்தனர். தாம்பரம் வழக்கு முடிந்து சைதாப்பேட்டை கொண்டு செல்லும் வழியில் காவலர்கள் பரங்கிமலைக்கு அருகே ஒரு சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டனர்.
பகல் 12 மணியிலிருந்து 3 மணிவரை நின்றுகொண்டிருந்தது. என்னைத் தேடி வழக்கறிஞர்கள் தோழர்கள் அலைந்து இந்த வாகனம் இருக்குமிடத்தை கண்டறிந்து காவலர்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அப்போது தோழர் உரத்த குரலில் சொன்னார்,’ அப்போ ஐயா. வைகோ சைதாப்பேட்டை கோர்ட்ல இருக்கரதால தான் அங்கே திருமுருகனை கொண்டு போகமாட்டீங்களா?’ என்ற போதுதான் எனக்கு என்ன காரணம் என தெரிந்தது. மேலிருந்து உத்திரவு வராமல் நீதிமன்றம் எடுத்துச் செல்லமாட்டோம் என்றார்கள். வாகனத்திலிருந்த காவலரிடம் நான் விசாரித்த போது, ’..மதிய உணவு இடைவேளை விட்டிருப்பதால் வைகோ உணவிற்கு சென்றுவிடுவார் அதன்பின் கொண்டு செல்லலாம், மேலும் அவர் நேரத்திற்கு உணவு எடுக்கவேண்டிய நிலையில் இருப்பதால் கண்டிப்பாக நீண்டநேரம் காத்திருக்கமாட்டார். ஆகவே அவர் வெளியே சென்றபின்னர் உங்களை நீதிபதியிடம் முன்னிறுத்த சொல்லி இருக்கிறார்கள்’ என்றார். ஆனால் நேரம் கடந்தும் வைகோ அவர்கள் நீதிமன்றத்திலிருந்து வெளியேறாமல் என்னை சந்திக்க காத்திருந்தார். வேறுவழியில்லாமல் என்னை நீதிமன்றத்தில் நிறுத்திய போது ஆரத்தழுவி வரவேற்றார். நீதிமன்றத்திற்குள் ஒரு அறையில் எனக்கு என்ன நடந்தது என விசாரித்தார். என் அப்பா உடன் இருந்தார். நான் தயக்கத்துடன் நடந்தவைகளை சொன்னேன். கேட்கும் போது உணர்வுமேலோங்க கண்ணீர் கசிய கைகளை பிடித்து நிச்சயம் இந்த அக்கிரமத்திற்கு போலீஸ் பதில் சொல்ல வைப்போம். தைரியமாயிருங்கள் என்று சொல்லி என் தந்தைக்கும் உறுதிகொடுத்தார். என் கைகளை பிடித்து வெளியே அழைத்து ஊடகத்தில் நடந்தவற்றை விளக்கி அரசை எச்சரித்துப் பேசினார். அந்த சந்திப்பு என்மீது நடந்த அடக்குமுறைகளை உலகிற்கு சொன்னது. கிட்டதட்ட 4 மணிநேரம் காத்திருந்து என்னை சந்தித்த பின்பே அவர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.
இதற்கு முந்தைய வருடத்தில் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் இருந்த போது என் வீட்டிற்கு சென்று மகளுக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்ததோடு நானே வழக்கறிஞராக ஆஜராவதாக சொன்னார். இதுபோன்ற அக்கரையை எனக்கு மட்டுமல்ல, தேர்தலில் பங்கேற்காத இயக்கத் தோழர்கள் பலரிடமும் இதே தோழமையை வெளிப்படுத்தியதை கண்டிருக்கிறேன். அய்யா வீரசந்தானம் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதை அவரிடம் தெரிவித்த பொழுது ஓடோடி நேரில் சந்தித்து வேண்டியவற்றை செய்தார். பரமகுடியில் 2011 இமானுவேல் சேகரனார் நிகழ்வின் போது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்தபோது, அங்கே சென்றதுமட்டுமல்லாமல், காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞனை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார். அந்த இளைஞர் அதன்பின் இன்று வரை அவருக்கு தனி உதவியாளராக இருக்கிறார். 2011 இலங்கையால் கொலை செய்யபட்ட மீனவரின் மனைவியை நான் நேரில் ஆவணப்படம் எடுக்க சந்தித்த போது தனக்கு அரசு வேலை வாங்கிக்கொடுத்து வைகோ அவர்கள் குடும்பத்தை பாதுகாக்க உதவியதை தெரிவித்தார். இதுபோன்ற பல செய்திகளை நேரில் கேட்டிருக்கிறேன்.
2013ல் ஐ.நாவில் இலங்கைகுறித்த தீர்மானம் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட போது மார்க்சிய-லெனினியம் பேசிய தமிழ்த்தேசியர் முதல் கொண்டு பெரியாரிய தலைவர்கள் சிலர் வரை அமெரிக்க தீர்மானம் தீர்வை கொண்டுவந்துவிடும் என்ற போது மே 17 இயக்கம் அதை மறுத்தது. அமெரிக்க தீர்மானத்தை ஏற்றால் இலங்கைக்கான சாதகமான சூழல் உருவாகும் என்றோம். இந்நிலைப்பாட்டின் உண்மைத் தன்மையை உணர்ந்து அமெரிக்கவால் கொண்டுவரப்படும் தீர்மானம் போலியானது என்பதை ஐயா.வைகோ அவர்கள் தீர்மானகரமாக முடிவெடுத்தார். இதை மே17 இயக்கத்தால் நடத்தப்பட்ட ஐ.நா அலுவலக முற்றுகைப்போராட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார். முற்றுகை நடந்து கைதாகி அரங்கத்தில் இருக்கும் சமயத்தில், அமெரிக்க தூதரகத்திலிருந்து தாயகத்திற்கு அழைத்திருப்பதாக உதவியாளர் தெரிவித்தார். இருந்த போதிலும் அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு எதிரானது என தொடர்ந்து வலியுறுத்தி நின்றார். இதற்கு அடுத்த ஆண்டில் அவரது தலைமையில் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிரான எங்களது அமெரிக்க தூதரக முற்றுகை நடந்தது. அப்போராட்டத்தில் அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. ஐ.நா தீர்மானம் குறித்து முற்போக்காளர்கள் முதல் ஆளும் கட்சிகள் வரை ஆதரித்து நின்றபோது இத்தீர்மானம் தமிழர்களுக்கு தீர்வை தராது, தமிழர்கள் போராட்டத்தை நீர்த்துபோக செய்யும், இலங்கையை காப்பாற்றும் என்கிற எங்களது நிலைப்பாடு இன்று உண்மையாகி உள்ளது. அமெரிக்காவை எதிர்த்து போராடியதால் அமெரிக்க செல்வதற்கான அனுமதியை அமெரிக்கா அவருக்கு மறுத்தது. தனது பேரக்குழந்தைகளை சென்று சந்திப்பது சாத்தியமில்லாமல் போகும் என சிரித்துக்கொண்டே சொன்னார். என்றபோதிலும் இந்நிலைப்பாட்டை இறுதிவரை மாற்றிக்கொள்ளவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும், புரட்சியும் பேசிய பலர் அமெரிக்க சார்பில் நின்று சமரசமாகிய நிகழ்வையும், வெகுசன அரசியலில் நின்று தமிழர் உரிமை சார்ந்து துணிந்து எதிர்த்து நின்ற அவரது அரசியலையும் ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
முல்லைப்பெரியாறு, நியூட்ரினோ போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி லட்சக்கணக்கானோரை திரட்டிய போதிலும் தேர்தல் நலனுக்காக இந்த போராட்டங்களை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நியூட்ரினோ திட்டம் நிறுத்தப்பட்டதெனில் வைகோ அவர்கள் மட்டுமே முழுமுதற்காரணி என்பது மிகையில்லை. கேரளா செல்லும் வழிகளை மறித்து 2011ல் அவர் துவக்கிய முல்லைப்பெரியாறு மக்கள் போராட்டம் வெற்றிக்கு அழைத்து சென்றது. இந்தியாவின் மையப்பகுதியான மத்தியப்பிரதேசம் வரை ஆயிரக்கணக்கான தொண்டர்களை படையென நகர்த்தி ராஜபக்சேவின் சாஞ்சி வருகைக்கு எதிராக நின்றார். இதுபோன்ற ஒரு போராட்டத்தை இந்தியாவில் எந்த இனமும் நடத்தியதில்லை. இந்தியாவின் வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு கொள்கை, சூழலியல் கொள்கைகளை தமிழ்த்தேசிய அரசியலில் நின்று எதிர்கொண்ட ஒரே அரசியல் ஆளுமையாக பாரளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் வாதிட்டவர், போராடியவர். திமுக, அதிமுக என இருபெரும் ஆதிக்க-அதிகார கட்சிகளுக்கு இடையே சாமானியர்களின் கோரிக்கையை மையநீரோட்டத்திற்கு எடுத்துச்சென்றவர் அவர். இந்த இரு கட்சிகளுக்கும் அழுத்தம் தரக்கூடிய அரசியலை தொடந்து 30 ஆண்டுகளாக நடத்தியவர். தேர்தல் கூட்டணி என்பது அதிகாரத்தை பங்குபோட நடக்கும் சர்க்கஸாக அனைத்து கட்சிகளையும் மாற்றி மாற்றி கூட்டணி வைத்து இருந்தாலும் மதிமுக மட்டுமே குறிவைத்து கொச்சைப்படுத்தப்பட்டது. காரணம் அவர் இரண்டு கட்சிகளுக்கும் அச்சமூட்டுபவராக இருந்தார். தமிழ்நாடு தழுவிய கட்சியாக மதிமுக நின்று கொண்டிருக்கிறது. மேலும் அக்கட்சி பொறுப்பாளர்கள் எவரும் எந்த ஊழல், சட்டவிரோத செயல்கள் என எதிலும் சிக்காத தூய்மையாக நின்றவர்கள். பலவேறு மக்கள் சார்ந்த போராட்டங்களில் தம்மை இணைத்துக்கொள்ளக்கூடிய நேர்மையான பெரியாரிய-திராவிட கொள்கை தோழர்கள் திமுக-அதிமுகவை காட்டிலும் மதிமுகவில் மட்டுமே உண்டு. இரு பெரிய கட்சிகளின் மாநில-மாவட்ட-வட்ட பொறுப்பாளர்களை போல மக்களிடமிருந்து அன்னியப்பட்ட பொறுப்பாளர்கள் மதிமுகவில் இன்றுவரை கிடையாது. சூழலியல், ஈழம், மனித உரிமை, மதவெறி எதிர்ப்பு , வாழ்வாதார கோரிக்கைகள் என எதுவாக இருப்பினும் அப்போராட்டத்திற்கு ஆதரவையும், தோழமையும் மதிமுகவிடம் இருந்து கிடைக்கும். இப்படியான ஒருபோக்கை திமுக-அதிமுகவிடம் ஒருபோதும் எதிர்பார்க்க இயலாது.
இப்படியாக தமது கட்சி தோழர்களை 30 ஆண்டுகளாக வழிநடத்தி நெறிப்படுத்துவது வெகுசன அரசியலில் பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்பதை நாம் கண்டிருக்கிறோம். நேற்று முளைத்த கட்சிகளில் நடக்கும் சட்டவிரோத செயல்பாடுகளை அன்றாடம் நாம் காணும் போதில், மதிமுகவின் தனித்தன்மை நன்கு விளங்கிடும். இருந்த போதிலும் தமிழகத்தின் பெரும்பான்மை ஊடகத்தால், அறிவுச்சமூகத்தால், சிவில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட அரசியலை மதிமுக சந்தித்தது. அவரது தோழர்கள் பலகாலம் சிறைவாசம், வழக்குகள், அடக்குமுறைகள் என எதிர்கொண்டாலும் எக்காலத்திலும் அதை பொதுவெளியில் வெளிப்படுத்தியதில்லை. ஒவ்வொரு மதிமுக தோழரும் ஏதேனும் ஒருவகையில் அரசு அடக்குமுறை, சிறை, வழக்குகளை எதிர்கொண்டவராக இருப்பார். பேராசிரியர் க.சிவதம்பி தமிழ்த்தேசிய அரசியலை வெளிப்படுத்தும் திராவிட கட்சியாக மதிமுகவை அடையாளப்படுத்தி இருப்பார். 3 தமிழர் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு தேதி குறிப்பிடப்பட்ட பொழுது 3 பெண்கள் உண்ணாநிலை போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இந்த போராட்ட அரங்கில் டேவிட்பெரியார் உள்ளிட்ட தோழர்கள் இருந்த சமயத்தில் ஒருநாள் அழைத்து நேரில் சந்திக்க வேண்டுமென்றார். தான் டில்லியில் இருப்பதாகவும், நேரில் சந்தித்து 10 நிமிடம் பேசிவிட்டு உடனடியாக மதுரை செல்லவேண்டி இருப்பதால் வீட்டிற்கு வர இயலுமா என்றார். நேரில் சந்தித்தோம். அச்சமயத்தில் மூவர் தூக்கு ரத்திற்கான வழக்கிற்கு ராம்ஜெத்மலானி ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். பெரும் நிம்மதியை கொடுத்த முடிவு அது. நேரடியாக ராம்ஜெத்மலானியை சந்தித்து அவரை ஒப்புக்கொள்ள வைத்திருந்தார். இதை எங்களிடம் தெரிவித்து, இதை வெளியில் தற்போது தெரிவிக்க வேண்டாம். வழக்கு வரும்போது தெரிந்து கொள்ளட்டும், இல்லையெனில் இதை தடுக்க முயல்வார்கள் என்றார். உங்களிடம் தெரிவித்ததற்கான காரணம் நீங்கள் போராட்டத்தை உற்சாகத்துடன் எடுத்துச் செல்லுங்கள், சோர்ந்துவிடாதீர்கள் என்பதற்காக சொன்னேன் என்றார். இதே போல தோழர் கயல் இலங்கையின் உளவுத்துறையால் கைதுசெய்யப்பட்டு கொழும்பில் சித்தரவதைக்கூடம் கொண்டு செல்லப்பட்டதை அறிந்த உடன் அன்ற பிரதமர் மன்மோகன் சிங்கை உடனே தொடர்பு கொண்டு, ‘ நாங்கள் கொண்டாடும் பெரும் தமிழ்ப்பாவலர் பெருஞ்சித்திரனாரின் பேத்தியின் கண்ணியத்திற்கு களங்கம் வந்துவிடாமல் விடுவிக்கப்படவில்லையெனில் கடுமையான எதிர்ப்பை இந்தியா சந்திக்க வேண்டிவருமென்றார்’, இது நடந்த ஒரு மணி நேரத்தில் தோழர், கயல் விடுவிக்கப்பட்டு தொலைபேசியில் விடுதலை அடைந்ததை தெரிவித்தார்.
‘குற்றம் சாட்டுகிறேன்’ என தமிழர்களை இலங்கை அரசு கொலை செய்ய இந்தியா உதவுகிறது என இந்திய அரசை குற்றம் சாட்டி அவர் வெளியிட்ட நூலில் இருந்த தகவல்கள் இந்திய அரசை குற்றவாளி என அறிவிக்க ப்ரேமன் தீர்ப்பாயத்திற்கு பெரும் உதவியாக இருந்தது. இந்த புத்தகத்திற்காக அன்றய திமுக அரசு அவர் மீது தேசதுரோக வழக்கை பதிவு செய்தது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடந்து இறுதி தீர்ப்பு வந்த நாளில் நான் அவருடன் நீதிமன்றத்தில் இருந்தேன். அவசர அவசரமாக தீர்ப்பை வாசித்த நீதிபதி, ஐயா வைகோ குற்றவாளி என்றார். பின்னர் தண்டனை காலத்தினை அறிவித்தார். அறிவித்துக்கொண்டிருக்கும் போதே, ஐயா.வைகோ தண்டனையை குறைக்க கேட்டதால் தண்டனையை ஒராண்டு சிறைத்தண்டனை என குறைப்பதாக தெரிவித்தார். உண்மையில் அப்படியான கோரிக்கையை யாரும் அங்கே தெரிவிக்கவில்லை. தாமக அந்த நீதிபதி தெரிவித்து முடித்த உடன் வைகோ உடனடியாக அதை மறுத்து நான் செய்தது தவறு என என்றுமே நினைக்கவில்லை. கடந்த காலத்தில் வி.புலிகளை ஆதரித்திருக்கிறேன், இனியும் ஆதரிப்பேன் அதில் மாற்றமில்லை, நீதிபதி தவறான உள்நோக்கத்தோடு இந்த தீர்ப்பை வாசிக்கிறார், என்னை உடனே கைது செய்யுங்கள், நான் தயாராக வந்திருக்கிறேன், தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்றார். அவரது எதிர்ப்பிற்கும், குற்றச்சாட்டிற்கும் பதில் சொல்ல இயலாமல் நீதிபதி அமைதி காத்தார். இது நடந்த சமயத்தில் நீதிமன்றத்தில் அவருடன் நானும் நின்றிருந்தேன். இவையேல்லாம் மறைமுகமாக நடந்து பின்னர் அவை மிகைப்படுத்தப்பட்ட செய்திகளாக சொல்லப்பட்டவை அல்ல, நாங்கள் நேரில் கண்டவை.
எந்த கூட்டணியில் இருந்த போதிலும் அவர் எடுத்த எந்த வாழ்வாதார- அரசியல் கோரிக்கையிலும் சமரசம் செய்துகொண்டதில்லை. ஈ..ழம், ஸ்டெர்லைட் முதல் கூடன்குளம் வரை இதை காணமுடியும். அவர் மீது அளவிற்கதிகமான வசவுகள், விமர்சனம் எனும் பெயரில் வன்மங்கள், இழிவுபடுத்தல் என ஏராளமான தாக்குதல் நடந்தது. இதே அளவிலான தாக்குதல்களை நேர்மையற்ற, ஒழுங்கீனமான, போராடும் துணிச்சலற்ற, சந்தர்ப்பவாத, சாதியவாத தலைவர்கள் எவர் மீதும் நாம் காணமுடியாது. தமிழ்நாடு சார்ந்து இந்தியாவின் வெளியுறவு, பாதுகாப்பு, வாழ்வாதார, மாநில உரிமை, மொழி சார்ந்த கொள்கைகளில் உரத்த குரலாக தமிழர்களின் ஒலித்த வைகோ அவர்களை தவிர்த்துவிட்டு நகரும் பல அறிவுசீவிகள் பிற திராவிட கட்சிகளின் சந்தர்ப்பவாத தலைமைகளோடு நட்பும், தோழமையும் பாராட்டுவதையும் கண்டிருக்கிறோம். மிகத்தூய்மைவாத புரட்சிகர அரசியலை பேசுகிறவர்கள் இவரை நிராகரித்துவிட்டு, முதலாளித்துவ திராவிட கட்சிகளோடு ஐக்கியம் காண்கிறவர்களையும் கண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தவிர்த்து சனநாயக வெகுசன பெரியாரிய, முற்போக்கு அரசியலை முன்னெடுக்கும் அரங்காக அவரால் உருவாக்கப்பட்ட மதிமுகவை தவிர்ப்பதை கூட்டமைப்புகள் சிலவற்றில் கண்டிருக்கிறேன். ஆயினும் நெருக்கடியான சமயத்தில் வைகோவுடன் பேசி ஆதரவு கேளுங்கள் என என்னிடம் தெரிவிக்கும் விசித்திரமான நிகழ்வுகளையும் நான் சந்தித்து இருக்கிறேன்.
மே17 இயக்கம் எவ்வகையிலும் அவரது தேர்தல் அரசியலுக்கு பயன்பட்டதில்லை என்பது தெரிந்தும் அவர் எங்களுடன் நின்றது என்பது எமது அரசியல் நிலைப்பாடுகளுக்காக மட்டுமே. தேர்தல் முடிவில் எதிர்மறையான முடிவுகள் வந்த அடுத்த நாளில் எங்களுடன் நினைவேந்தலில் பங்கெடுத்திருக்கிறார். உடல்நலம் சரியில்லாத நிலையிலும் நினைவேந்தலில் பங்கெடுத்து இருக்கிறார். வழக்கு வந்த சமயத்திலும் பங்கெடுத்திருக்கிறார், எங்களுடன் கைதாகி இருக்கிறார். கூடன்குளத்தில் காவல்துறை அடக்குமுறை ஏவி தாக்குதல் நடத்திய சமயத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நெல்லையில் அன்றய ஜெயலலிதா அரசிற்கு எதிராக அனைத்து கட்சி-இயக்கங்கள் நடத்திய போது கண்டன போராட்டத்தோடு முடிக்காமல் கைதாகும் போராட்டமாக மாற்றுங்கள் என அறிவித்து முதல் நபராக கைதானார். மதிமுகவின் மாவட்ட பொறுப்பாளர்கள் பலரும் ஏதேனும் ஒரு போராட்ட களத்தில் நின்றவர்கள். அவரோடு உடன்நின்ற தளபதிகளாக போராட்டங்களை நடத்திய பல மதிமுக பொறுப்பாளர்கள் போன்ற ஆளுமைகளை பிற திராவிட கட்சிகளால் பெரிய பட்டியலை காட்ட இயலாது. சாமானிய இயக்கங்கள் அழைத்தால் இன்றும் ஆதரவு தரக்கூடிய மாவட்ட்ட செயலாளர்களை கொண்ட அமைப்பு மதிமுகவாக மட்டுமே திராவிட கட்சிகளில் இருக்கிறது. மணல் கொள்ளை, கல்விக்கொள்ளை, கனிமக்கொள்ளை, கார்ப்பரேட் விசுவாசம், இந்துத்துவ சார்பு, சாராய கம்பெனிகள், தனிமனித ஒழுக்கமற்ற தன்மை, மலிவான ஊழல், கொள்கையற்ற அரசியல் என மலிந்துகிடக்கும் திராவிட கட்சிகளுக்கு மாற்றான நேர்மையான, சுத்தமான கைகளுக்கு சொந்தமான தோழர்கள் நிறைந்த பெரியாரிய-தமிழ்த்தேசிய கொள்கை சார்ந்து, பதவி அரசியலுக்கு ஆசைப்படாமல், சாமானிய மக்களுடன் களத்தில் நிற்கும் கட்சியாக மதிமுகவை வளர்த்தெடுத்து தலைநிமிர்ந்து நிற்கும் தலைவராக இயங்கும் ஐயா. வைகோ அவர்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
@duraivaikooffl
சமூகநீதிக்கு எதிரானவையாய் நீங்கள் IIT க்களை மாற்ற முனைந்தாலும் ,
எங்கும் ஒரு சகோதரத்துவக் குரல் ஒலிக்கும் .
வாழ்த்துகள் தனஞ்ஜெய் பாலகிருஷ்ணா !
நன்றி @sunnewstamil#IIT#Palestine_Genocide
இடுக்கி பீர்மேடு பகுதிகளை முல்லை பெரியாறு அணை பகுதிகளை விட்டுக் கொடுத்தது யார் ?? நம்ம பாட்டன் காமராஜர் தானே வேற யாரு ? அதனால தானே இப்ப நாம தண்ணிக்கு கையேந்தி நிற்கிறோம் இந்த வரலாற்று துரோகத்தை சொல்லாமல் எதுக்கு சப்பை கட்டு கட்டுறீங்க ஜாதி ஓட்டுக்கு தானே
மதிமுக காரன் மட்டுமில்ல
திமுக |அதிமுக |திக|தபெதிக உட்பட அணைத்து திராவிட இயக்க தொண்டர்களும் நினைத்து பெருமைபட வேண்டிய ஓர் போர்வாள்...ஆம் ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் போர்வாள்
#வைகோ@Vaikooffl@duraivaikooffl@thirumaofficial@mkstalin
நமக்கெல்லாம் சுயமரியாதை உணர்வை ஊட்டி வளர்த்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை ஒட்டி நம் தலைமை அலுவலகம் தாயகத்தில் அமைந்திருக்கும் அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தியபின் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.