ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.
குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!
இன்னொரு கைது:
விஜய் தரப்பின் நியாயமான விசயத்தை பேச கூடாது ,
திமுக அரசின் நிர்வாக தவறை சொல்லவே கூடாது!
இந்த இரண்டிற்கு எதிராக எது செய்தாலும் இன்றைய தேதியில் கைது செய்வோம் என்று திரிகிறது திமுக அரசு.
இன்று திரு வரதாராஜன் அவர்கள் கைது இந்த அரசின் கீழ்தரமான அடக்குமுறையே அன்றி வேறு இல்லை.
குறிப்பு : கரூர் நிலவரத்தை பதிவு செய்ய போறவன் எல்லாம், இப்போ திமுக அரசு மீது குறை சொல்ல போகவே முடியாது. விஜயை திட்டுவதற்கு வேண்டுமென்றால் தாராளமாக போகலாம்.
திமுக அரசின் நிர்வாக தவறுகளை கரூரில் எப்படி நடந்தது என்பதையும் நான் களத்தில் போய் பேச தயார் - திமுக அரசு எதிர்கொள்ள தயாரா?
காவல்துறை எப்படி ஒவ்வொரு கட்டத்திலும் கூட்டத்தை அனுமதித்தது ! என்ற ஒரு கேள்விக்கு விடை தேடி சென்றாலே மொத்த உண்மையும் வெளியில் வரும்.
ஆனால் இறந்தவர்கள் புகைப்படங்களை அதுவும் இறந்த நிலையில் இருக்கும் புகைப்ப்டத்தை வைத்து எப்படி மக்களிடம் அரசியல் செய்யலாம் என்பது மட்டும் தான் திமுக அரசின் தற்போதைய நோக்கம். அதற்கு கூட்டணி கட்சி ஆரம்பித்து கமல் வரை விளம்பர தூதர்கள். வெக்கம் யாருக்கும் இல்லை!
கரூர் விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக எதுவும் பேசவில்லை. அடுத்து கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொள்ள காரணம் விஜய்-க்கு நேற்று நீதிமன்றத்தில் நடந்தது அநீதி என்று இன்று நான் உண்மையை உடைத்தது தான் காரணம்.
மீண்டும் சொல்வேன் - விஜய் Tvk தரப்புக்கு எதுவும் தெரிவிக்கபடாமல் , அவர் தரப்பு வாதம் என்று எதுவும் இல்லாமல் நேற்று நடந்த நீதி விசாரனை நியாயமானது அல்ல. இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
விரிவாக முந்தய டிவிடில் சொல்லியுள்ளேன்.
முழு விவரத்தையும் மக்கள் முன் வைக்கிறேன். சில மணி நேரத்தில்.
-மாரிதாஸ்
@TVKVijayHQ அண்ணா உங்களுக்கு நாங்க இருக்கோம் தமிழ்நாடு மக்கள் இருக்காங்க எங்களை மீறி உங்கள யாரும் ஒன்னும் பன்ன முடியாது 🔥 நீங்க அரசியல்ல இறங்கி அடிங்கன இந்த திமுகவ இந்த மாதிரி இருக்குறவர்களுக்கு [ decent attack, decent politics ] லாம் செட் ஆகாது நீங்க இறங்கி அடிங்கன பாத்துக்கலாம் 😌😌
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.
The real politics begins. If government not responsible for this incident vijay also not responsible _ they followed all the rules and regulations of police 🚨
#WeStandWithVIJAY