முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
-மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக!
@OfficeOfOPS
திருப்பூர் பல்லடத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' எனும் தலைப்பில் இன்று நடைபெற்ற கழக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினோம்.
மகளிர் நலன்களுக்காக மட்டுமல்லாது - மகளிர் உரிமைக்காகவும் பல்வேறு திட்டங்களையும் சட்டங்களையும் கொண்டு வந்த பெருமை நமது தி.மு.கழகத்திற்கு உண்டு.
அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நிறைவேற்றி வரும், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், பள்ளிகளில் காலை உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நமது உரையில் குறிப்பிட்டோம்.
சுயமரியாதைமிக்க தமிழ்நாட்டு மகளிர் ஒன்றிணைந்து பாசிஸ்ட்டுகளையும் அடிமைக் கூட்டத்தையும் வீழ்த்தப்போவது உறுதி!
வெல்வோம் 200 - படைப்போம் வரலாறு!
@TRBaaluMP@KN_NEHRU@KanimozhiDMK@dmk_raja@V_Senthilbalaji
பால்பண்ணை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரசு உயர் அலுவலர்களுடன் நேரடி ஆய்வு மேற்கொண்டோம்.
மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் சோதனை முறையில் செயல்படுத்திட சில வழிமுறைகளை ஆலோசனைகளாக வழங்கியுள்ளோம். விரைவில் தீர்வு காண்போம்.
#அன்பில்_in_திருவெறும்பூர்
25 வருடங்களில் 10 முறை முதலமைச்சர் ஆனவர்
எந்த கட்சி வெற்றி பெற்றாலும் இவர் தான் முதலமைச்சர்
வாழும் காலம் எல்லாம் முதலமைச்சர்
வாழ்நாள் முதலமைச்சர்
ஆனா
பீகாருக்கு 25 வருசமா முன்னேற்றம் தராத முதலமைச்சர்
நித்தீஷ் குமார்
#திராவிடமாடல் அரசின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டுள்ள இளைஞர்களின் எழுச்சியை கழகப் பணிக்கு பயன்படுத்தும் வகையில் நம் கழக இளைஞர் அணிக்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள், மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிளை வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் செயல் வீரர்களாக விளங்கப்போகும் @dmk_youthwing-ன் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#கழக_இளைஞர்_அணி @arivalayam@krnrajeshkumar@pssrinivasandmk@ViswaSingDMK
அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டில் பங்கெடுப்பதற்காக ரோட்டரி சங்கத்தின் சார்பாக CARE4SCHOOL எனும் முன்னெடுப்பை தொடங்கியுள்ளார்கள். இதன் செயல்பாட்டினையும் “ROTARY NSNOP” இணையதளத்தினையும் தொடங்கி வைத்தோம்.
#NammaSchoolNammaOoruPalli திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள ரோட்டரி சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@tnschoolsedu
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற
தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளி விழாவில் கலந்துகொண்டு, தமிழ் ஆராய்ச்சியாளர்கள் எழுதிய நூல்களையும் வெளியிட்டோம்.
“மதராசபட்டினம்” உள்ளிட்ட நூல்களை எழுதிய எழுத்தாளர் திரு.நரசய்யா உள்ளிட்ட தமிழறிஞர்களை கெளரவித்து நன்றி தெரிவித்தோம்.
“பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது சமஸ்கிருதம்” எனப் பேசுபவர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் மொழி என்பார்கள். இனியும் இந்தப் போக்கு தொடரக் கூடாது! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழும் அதன் தொன்மையும் என்பதை அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளோம். கீழடியின் தொன்மையை அறிவியல் நிரூபித்துள்ளது!” என உரையாற்றினோம்.
கழக மாணவர் அணியால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட “தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை-2025” உரையாடல்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்-நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு @ikamalhaasan அவர்கள் விழாப் பேருரையாற்றிய இந்நிகழ்வில் கலந்துகொண்டு #SEP2025 -இன் சிறப்புகள் குறித்தும், #NEP2020 -இன் திணிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தோம். மேலும் எளிமையான உள்ளீடுகளுடன் SEP குறித்த கையேட்டினையும் வெளியிட்டோம்.
காலத்திற்கேற்ற வகையில் இந்நிகழ்வை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த @dmk_studentwing அணியினருக்கும், கலைகளின் மூலம் @tnschoolsedu-இன் சாதனைகளை எடுத்துரைத்த புதுகை பூபாளம் மற்றும் @ComradeTalkies நண்பர்களுக்கும் நன்றி.
@rajiv_dmk
திருச்சி(கி) மாநகரக் கழக ஆலோசனைக் கூட்டத்தை மாவட்டக் கழக அலுவலகத்தில் நடத்தினோம்.
🙏🏽 #ஓரணியில்_தமிழ்நாடு இயக்கத்தில் சிறப்பாக களப்பணியாற்றிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி.
🎙️தனது பொய் பிரச்சாரத்தால் ஜனநாயகத் தலைவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கண்டனம்.
🪴 இன்று திருமண நாள் பொன்விழா காணும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும், அம்மா திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி “2026 தேர்தலில் கழக கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற உழைக்க வேண்டும்” என அறிவுறுத்தினோம்.
@arivalayam
#Trichy_South_DMK
எனது #திருவெறும்பூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் #உங்களுடன்_ஸ்டாலின் முகாம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இன்று கீழக்குறிச்சி ஊராட்சி 1, 2, 3, 4 மற்றும் 11, 12 ஆகிய வார்டு மக்களுக்காக நடைபெறும் முகாமினைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினோம்.
#அன்பில்_in_திருவெறும்பூர்