பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் வழிகாட்டுதலில்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் 24.05.2026 அன்று நான் மேற்கொண்ட ஆய்வில் திருக்கோயில் வளாகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் உறையில், ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகள் அடிப்படையில் Bar Code Sticker, தயாரிப்பு தேதி (Mfg Date), காலாவதி தேதி (Exp date) ஆகியவை இடம் பெறாமல் இருப்பது தெரிய வந்தது. சில உணவு பொருட்களின் உறையில் துண்டு சீட்டில் தயாரிப்பு தேதி எழுதி வைக்கப்பட்டும், எந்த வித விவரங்களும் இல்லாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும் தயாரிப்பு தேதி சில பொருட்களில் துண்டு சீட்டில் கையில் எழுதி வைத்திருந்தது உண்மையான தயாரிப்பு தேதியா என்ற சந்தேகத்தையும் எழுப்பும் வகையில் இருந்தது கண்டறியப்பட்டது.
உடனடியாக இதை சரியாக கண்காணிக்காத திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்திட அனைத்து திருக்கோயில் அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் குடிநீர் குடிக்க அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட (RO) குடிநீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டதில் TDS (Total Dissolved Solids) அளவானது அனுமதிக்கப்பட்ட அளவில் பராமரிக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டு இதனை சரிசெய்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் ஆய்வு செய்யப்பட்டு தினசரி 3 முதல் 5 முறை முழுமையாக தூய்மை செய்யப்பட வேண்டும் என்றும் கழிப்பறை தூய்மை செய்வதை கண்காணிக்க, கழிப்பறை வாயிலில் Daily Cleaning Checklist ஒட்டப்பட்டு அதில் தினசரி தூய்மை செய்து, கையொப்பமிட்டு ஆவணப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருக்கோயில்களில் அடிப்படை வசதிகளிலும், உணவுப் பொருட்கள் விற்பனை போன்ற எந்தவித விடயத்திலும், குறைபாடுகளோ முறைகேடோ இருக்கும் பட்சத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்து கோயில்களிலும் அடிப்படை வசதிகள் சரியாகவும், தரமாகவும் பக்தர்களுக்கு கிடைப்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு உறுதிசெய்யும்.
-
S. ரமேஷ் B.E.,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்,
தமிழ்நாடு அரசு.
@TVKVijayHQ | @BussyAnand | @tnhrcedept
மக்கள் மன்றங்களில் ஒலித்த இந்த சாமானியன் குரலை சட்ட மன்றத்தில் ஒலிக்க வாய்ப்பளித்திருக்கும் மாண்புமிகு தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கும், அன்பிற்குரிய பொதுச்செயலாளர் தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் @BussyAnand அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
உங்கள் வீட்டில் ஒருவனாக இருந்து தொகுதியை மேம்படுத்துவேன் என அளித்த எனது வாக்குறுதிகளை ஏற்று 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்களித்து, திருச்சி மாவட்ட தொகுதிகளிலேயே அதிக அளவான 33,590 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நன்றியை நெகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வெற்றியை பெற எனக்கு உறுதுணையாக உழைத்த மாவட்ட,ஒன்றிய,பேரூராட்சி, பகுதி, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பூத் நிர்வாகிகள் ஆகியோருக்கும் இணையதள தோழர்களுக்கும் நன்றிகள்.
முக்கியமாக இணையத்தில் தலைவரின் தளபதிகளாக இயங்கிய நமது தோழர்கள் மற்றும் பொது மக்கள், எனது வெற்றியை தங்களது வெற்றி போல பார்த்து மகிழ்கிறோம் என்று தொடர்ந்து எனது வெற்றிக்காக ஆதரவளித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் என் நெஞ்சத்து நன்றிகள்!
திருவரங்கம் செழிக்கும்!
மக்கள் வாழ்வு சிறக்கும்!!
அன்புடன்,
TVK ரமேஷ்
திருவரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
#தமிழகவெற்றிக்கழகம்
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
Yes. #Master memories are one for the lifetime ♥️♥️☺️. By the way Intha photo laam naanga leaked stills laye paathutom. Weightaa oru update kudunga brother 😟. Army angry aa iruku🤪. #HBDTHALAPATHYVijay