நிர்வாகம் என்றால் என்ன, மாநில உரிமை என்றால் என்ன என்ற எந்த அடிப்படை அறிவுமே இல்லாத, முதுகெலும்பில்லாத கோழைகளைத் தேர்ந்தெடுத்தால் இதுதான் நடக்கும்!
கர்நாடக முதல்வர் காவிரியில் தண்ணீர் திறக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார். ஆனால், அதைப்பற்றிப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சற்றும் வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே ஓடுகிறார்!
தண்ணீர் தர மறுத்துக் கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது. ஆனால் இந்த டம்மி தவெக அரசோ, மைக்கை பார்த்தாலே பயந்து நடுங்கி ஓடுகிறது!
Birthday greetings to Captain Cool Thiru. @msdhoni.
Whether on the field or away from it, your composure, leadership and enduring charisma continue to inspire millions. The anticipation of watching you in action again remains as strong as ever.
Wishing you good health, happiness and many more years of success.
Somewhere in Tamil Nadu, the Western Ghats stand as a living masterpiece of biodiversity, where elephants thrive and nature reigns supreme. Truly a lifeline for life itself
Captured by @shanmughanandam#westernghats#biodiversity#elephants
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
1000 தனியார் பள்ளிகளுக்கு NOC - பின்னணி என்ன?
(Time இருந்தா படிங்க)
2006-11 திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. அதுவரை அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகள் பாடத்திட்டம் ஒன்றாகவும், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பாடத்திட்டம் சிபிஎஸ்இ சார்ந்தும் இருந்தது
மெட்ரிக்குலேசன் உட்பட அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வி பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வந்த பின், தனித்து அடையாளம் வேண்டும் என்ற நோக்கில் பல பள்ளிகள் சிபிஎஸ்இ நோக்கி சென்றது
2011-16 அதிமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை முடக்க பார்த்து அந்த முயற்சி தோல்வியில் முடியவும், அரசின் உதவியுடன் பல பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாறியது. எந்த அளவு என்றால் அந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் எண்ணிக்கை இருமடங்காக மாறியது.
2021 திமுக ஆட்சிக்கு வரும் போது ஏறக்குறைய 1800+ சிபிஎஸ்இ பள்ளிகளும், 13000+ தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் இருந்தது. இந்த காலத்தில் தான் 2006-11 ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். பாலசுப்ரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மாற்றவும் அதை பள்ளிகளில் வெளிப்படையாக வைக்கவும் அறிவுறுத்தியது.
மேலும் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற NOC கொடுட்பதை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளை நடத்தியதை குறைத்ததுடன், சிபிஎஸ்இ பள்ளியாக மாறி இதை தொடர நினைத்தது நடக்காமல் போனது
உடனே தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஒன்றிய அரசை அணுகி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தேவையான NOC கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியது
கடந்த ஆண்டு 2025 Feb 20 ஆம் தேதி ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ இனி பள்ளிகள் தொடங்க NOC இல்லாமலும் Apply செய்யலாம். அவர்கள் நேரடியாக மாநில அரசுக்கு கடிதம் எழுதி 30 நாளில் அனுமதி வழங்க வேண்டும். தவறினால் மேலும் 15 நாள் அவகாசம் வழங்கப்படும். அதிலும் மாநில அரசு பதில் அளிக்கவில்லை எனில் ஒப்புதல் வழங்கியதாக கருதப்படும் என்று விதிகளை மாற்றியது
இருப்பினும் தனியார் பள்ளிகள் ஆளுமை மிக்க அரசை பகைத்துக் கொண்டு சிபிஎஸ்இ பள்ளியாக மாற முயற்சி செய்யவில்லை.
திமுக அரசு NOC வழங்காமல் இருந்த காரணம், சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் National Education Policy படி செயல்படும். தாய்மொழி தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு இருப்பதால் இதுவரை அதை நிறுத்தி வைத்தது
ஆனால் இப்போதுள்ள தவெக அரசு மறைமுக கூட்டணியாக பாஜக மனம் நோகாமல் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்ற NOC கொடுத்துள்ளது
இதன் மூலம் இனி அவர்களுக்கு என்று கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை உட்பட அனைத்தும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து ஒன்றிய அரசு வசம் சென்று விடும்.
இதை மறைக்க தான் லஞ்சம் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்ற அன்னா ஹசாரே வழி ஊழல் ஒழிப்பு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
இந்த ஆட்சி முழுமையான 5 ஆண்டுகளை முடிக்கும் போது 13000 தனியார் பள்ளிகளில் 50% பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
காத்திருப்போம்.!
மாற்றம் 👌🤦
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
அவதூறுகள், ஆபாசப் பதிவுகள், பொய்ச் செய்திகள் பரப்புவோர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
பட்டப்பகலில் நட்டநடு வீதியில் ஓட ஓட விரட்டிப் படுகொலைகள் நடக்கின்றன. அவற்றைத் தடுக்கவும் துப்பில்லை, வக்கில்லை.
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மக்கள் நள்ளிரவு முழுவதும் சாலையில் அமர்ந்து போராடினால் கேட்க நாதியில்லை.
ஆனால், இவர்களின் ஊழல்களையும் உண்மை முகங்களையும் வெளிக்கொணர்ந்து பதிவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். விமர்சனத்தை முடக்குவதில் மட்டும்தான் இந்த அரசு proactive-ஆகச் செயல்படும் போல.
இது பாசிசமா, இல்லை பாயாசமா? ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திலேயே இப்படி அடக்குமுறைகளை அவிழ்த்து விடும் இவர்கள் போகப் போக இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறார்களோ?
என்ன CM Sir, உங்களை எதிர்த்தால் இதுதான் கதி என மிரட்டிப் பார்க்கிறீர்களா?
#TVKFails
"In the last one month, investments worth thousands of crores have slipped away from Tamil Nadu and moved to Andhra Pradesh.
Can someone explain the dangerous politics and policy failures because of which investments that once naturally came to Tamil Nadu are now choosing Andhra Pradesh one after another?
• Hwaseung (South Korea) – ₹1,720 crore project shifted from Thoothukudi to Kuppam, citing faster clearances and better incentives.
• Royal Enfield – ₹2,200–2,500 crore expansion in Satyavedu, Andhra Pradesh; its first major expansion outside Tamil Nadu since 1955.
• Hindalco (Aditya Birla Group) – ₹586 crore aluminium extrusion plant in Kuppam, supported by fast-track approvals, location advantages, and renewable energy access.
• Premier Energies – ₹1,700+ crore solar PV cell project preferred for Naidupeta, Andhra Pradesh.
• Mazagon Dock Shipbuilders – ₹30,000 crore mega shipbuilding and maritime cluster project proposed for Andhra Pradesh.
Clearly, our new Industries Minister is doing a fantastic job of managing Guidance Tamil Nadu.
And, of course, ma'am is doing a great job with her reels!"
SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
#HBDKalaignar
நாகரீகம் குறித்து தமிழர்களுக்குப் பாடம் எடுத்த ஒன்றிய BJP அமைச்சர், #NEET முறைகேட்டிற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டாமா?
நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில், பாஜகவினரே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதைக் கண்டறிந்து சிபிஐ அவர்களை கைது செய்துள்ளது.
தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு எதிர்த்த போது தமிழர்களை "நாகரீகமற்றவர்கள்" என்று பொங்கினார் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். தனது துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு அமைப்பு நடத்திய நுழைவுத் தேர்வில், தனது சொந்த கட்சிக்காரர்களே முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது எப்பேர்பட்ட அவமானம்? இது போன்ற முறைகேடுகள் நடப்பது முதல் முறையல்ல.
2024-ல் இதே போன்று வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏற்பட்ட போது, சிபிஐ விசாரணை நடத்தியது. அது போன்று, குறிப்பிட்ட சில மையங்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதும், அதிக மதிப்பெண் பெற்றதும் சர்ச்சையானது. +2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கூட நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்தனர்.
நாகரீகம் குறித்து தமிழர்களுக்குப் பாடம் எடுத்த ஒன்றிய அமைச்சர் @dpradhanbjp, NEET முறைகேட்டிற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டாமா?
பாஜகவின் முறைகேட்டால் தமிழக மாணவர்கள் 1.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#BJP_NEETScam
#NEET