பெரும்பாலானவர்கள் இடஒதுக்கீடு என்னவோ SCக்கு மட்டும்தான் இருப்பதாக நம்பவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
30% இடஒதுக்கீடு இருக்கும் BC அந்த 30%ல தான் போட்டியிட முடியும்;
18% இடஒதுக்கீடு இருக்கும் SC அந்த
18%ல தான் போட்டியிட முடியும் என்கிற புரிதல் எல்லாருக்கும் வர அரசு முன்னெடுக்கனும்.
பெருகும் சாதிய வன்முறைகள்: சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள பெரும்பத்து பகுதியில் 02.03.2026 அன்று ஒன்பது பேர் கொண்ட சாதிவெறிக் கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்து திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது. அதில் சம்பவ இடத்திலேயே பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஜான் மார்க் (41) என்பவரும், வட மாநிலத் தொழிலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு சாதிகளிலிருந்து ஐந்து பேர் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 21 வயதிற்குட்பட்டவர்கள்.
நெஞ்சை உறைய வைக்கும் இச்சம்பவம் நம் நினைவுகளில் இருந்து மறைவதற்கு முன்பே சிவகங்கை இடைக்காட்டூரில் ராசு என்பவர் மீது வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மோசமான கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. ஒரு கொடூரச் சம்பவம் பேசுபொருளாக இருக்கும் அதே நேரத்தில் அடுத்தடுத்து நிகழும் சாதிய வன்முறைகள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழ்நாடு காவல்துறையும், திமுக அரசும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வதில் முழுமையான தோல்வியை அடைந்திருக்கிறது.
இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாங்குநேரி பெருந்தெரு பகுதியில் சின்னத்துரை என்கிற பள்ளி மாணவனின் வீட்டிற்குள் புகுந்த சக மாணவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்குற்றச் செயலில் தொடர்புடைய இரண்டு சிறார்கள் அதாவது, முதன்மைக் குற்றவாளிகள் தற்போதைய பெரும்பத்து சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2025 வரை மட்டுமே திருநெல்வேலி மாவட்டத்தில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே கொலை, கொலைவெறித் தாக்குதல் என 10 கொடூரச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இக்குற்றச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் பெரும்பாலும் பள்ளி - கல்லூரி மாணவ வயதில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பாபாசாகேப் அம்பேத்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரின் சுவரோவியங்கள் மீது பெட்ரோல் குண்டு எறிந்த மூவரில் இருவருக்கு 19 வயது, மற்றொருவருக்கு 20 வயது. இச்சம்பவத்தின் பின்னணியிலும் சமூகவலைதள மோதலும், ரீல்ஸும் காரணமாக இருந்திருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நிகழ்ந்த கொடூரக் குற்றங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர்கள் சாதாரணர்கள். தாம் யாரால் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்பதைக் கூட சிந்திக்க முடியாமல் இளம் வயதில் வாழ்க்கையைத் தொலைக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பொருளாதார பின்புலமில்லாதவர்கள். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகள் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும், அடுத்த வன்முறைக்கான சூழல் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அரசுக்கும் சமூகத்திற்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன.
1. அரசியல் நலன்களுக்காக ஊக்குவிக்கப்படும் சாதிப் பெருமிதத்தை வீரமாக்கும் கலாச்சாரப் பிம்பங்கள், சமூக ஊடகங்களில் பரவும் வெறுப்புணர்வு அரசியல் ஆகியவை கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
2. சாதி ஆதரவு மனப்பான்மைக்கும் சாதி எதிர்ப்புச் சொல்லாடல்களுக்குமான வேறுபாட்டை விளக்குவதற்காக சமூகநீதி - வரலாறு - பாலினச் சமத்துவத்தைக் கற்பிக்கக்கூடிய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
3. மேடைப் பேச்சுகளிலும், கலை - இலக்கியம் - சினிமா உள்ளிட்ட வெகுஜன ஊடகங்களிலும் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் நிலைபெறச் செய்யப்படும் சாதியப் பெருமைகளால் உருவாகும் விளைவுகளை விமர்சனப்பூர்வமாக அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4. இளைஞர்களிடம் பரவிவரும் சாதிய மனநிலையைக் கட்டுப்படுத்த அரசு கல்வி நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் இணைந்து விழிப்புணர்வு வகுப்புகள், சமூக நல்லிணக்கக் கூட்டங்கள் மூலம் அவர்களுடனான தொடர் உரையாடலைச் சாத்தியப்படுத்த வேண்டும்.
சாதி என்பது சமூக அரசியலுக்காகவும், தேர்தல் அரசியலுக்காகவும் எல்லா நிலைகளிலும் ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை உணர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்னரே பலியிடப்படும் அப்பாவி இளைஞர்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் சமூகத்தின் பல தளங்களில் வேலை செய்கிறவர்களை ஒருங்கிணைத்து நீண்டகால நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கோருகிறது. @Neelam_Culture
அரசு அலுவலகம் ஓர் அனுபவம்
என்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்கோ...
உறவினர்களின் தேவைக்காகவோ இதுவரை யாரிடமும் சிபாரிசுக்காக சென்றதில்லை..
என்னுடைய 1000 சதுர அடி நிலத்திற்கு பட்டக்கோரி 2021-இறுதியில் விண்ணப்பித்து 2023 தொடக்கத்தில் தான் என்னால் பட்டா வாங்க முடிந்தது.முறைப்படி 5 பதிவுத்தபால்கள்,ஈமெயில் நினைவூட்டல்கள்,
100 தொலைபேசி அழைப்புகள் என எதற்கும் எந்த பதிலும் கிடைக்காத பின்னரே ஆத்திரம் தாங்காமல் ட்விட்டரில் எழுதினேன்
லஞ்சம் தராமல் அரசு அலுவலகத்தில் ஒரு நாளும் எந்த வேலையும் நடக்காது என்று நன்றாக தெரியும் என்பதால் சிபாரிசுக்காக செல்வதில்லை
இந்த ஆட்சி அந்த ஆட்சி என்றில்லை யார் ஆட்சிக்கு வந்தாலும்
இது நிச்சயம் மாறப்போவதில்லை.
ஆனால்,,பட்டா திருத்தம் கோரி விண்ணப்பித்தால் லஞ்சம் தராவிட்டால் உங்களின் நிலம் கோவில் நிலத்திற்குள் வருகிறது என்று எழுதிவிடுவோம் என்று சேலம் மாவட்ட வருவாய்த்துறை மிரட்டுவதெல்லாம் உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
25-11-25 ம் தேதி பட்டா திருத்தம் கோரி என்னுடைய தங்கை(லாவண்யா) கணவர் சேலம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்தார்..
விண்ணப்பித்த தினத்தில் இருந்து இன்றுவரை சர்வேயர்,தலைமை சர்வேயர்,தாசில்தார் அலுவலகம் என்று நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்..
அதெப்படி..நேராய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கலாம் என்றும்,
நீங்க அங்கேயே போயிட்டீங்க... நாங்க ரிப்போர்ட்டை அவர்கிட்ட கொடுத்திடுவோம்..உங்களுக்கு கடிதம் மூலமாக பதில் வரும் என்று ஒரு மாதம் அலைய வைத்துள்ளனர்.
மனுஷன் அல்லாடுவதை பார்த்த சில தரகர்கள்
பணம் தராமல் இங்க எந்த வேலையும் நடக்காது சார்..2 லட்சம் கொடுங்க வேலை முடிஞ்சிடும் என்று ஒருவர் அணுகியுள்ளார்..
சரி பணத்தை கொடுத்தாவது பிரச்னையை முடித்துவிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
சர்வேயர் சந்தோஷ் என்பவர் நிலத்தை அளந்து,,மாறியுள்ள T.S நம்பரை குறிப்பிட்டு பிழை திருத்தல் ஆவணம் செய்து சமர்ப்பிக்கும் பட்சத்தில் பட்டா திருத்தம் செய்ய தர இயலும் என மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டு வட்டாட்சியருக்கு கடிதம் வைத்துள்ளார்.
ஆனால்,அந்த கடிதத்தை நிறுத்தி வைத்த தலைமை சர்வேயர் சுரேஷ் என்பவர் இன்னுமொரு 50 ஆயிரம் சேர்த்து தரச்சொல்லுங்க அப்போ தான் வேலை முடியும்..இல்லேன்னா முடியாது
பணத்தை தராம சும்மா சும்மா வந்திட்டிருந்தா உங்க நிலம் கோயில் நிலத்திற்குள் வருதுன்னு எழுதி கொடுத்திடுவேன்னு தரகர் மூலமாக மிரட்டுகிறாராம்...
மாவட்ட ஆட்சியர் @district_salem
அலுவலகத்தின் தொலைபேசி 0427-2450301 என்ற எண்ணிற்கு அழைத்து இந்த சம்பவத்தை கூறினால் புரியுது சார் என்று ஆறுதல் கூறுகிறார்கள்
ஆனால் இதையெல்லாம் நாங்க கலெக்டர்கிட்ட சொல்லமுடியாது..
நீங்களே நேர்ல வந்து புகாரா கொடுங்க இல்லேன்னா கடிதம் மூலமாக அனுப்புங்க என்கிறார்கள்..
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி இருக்கும் மரம் செடி கொடிகளை விட தரகர்களின் கூட்டம் தான் அதிகமாக இருக்கிறது.
கூடுதலாக லஞ்சம் தராவிட்டால்..
உங்கள் நிலம் கோவில் நிலத்திற்குள் வருகிறது என எழுதிவிடுவோம் என்று தரகர்கள் மூலமாக வருவாய்த்துறை அதிகாரிகள் மிரட்டல் விடுவதை என்னவென்று சொல்வது !
அரசியல் ன்னா என்னானே தெரியாத அரைகுறைகள் தான் அணில்களை கண்டு ஆர்பரிப்போர்..!! சினிமா மாதிரி ஒரு நாள் திடீரென தோன்றி, வசனம் பேசி, சண்டை போட்டு, டான்ஸ் ஆடி.. நேரா போய் சீட்ல உட்கார்ர விஷயம் கிடையாது. விசித்திரம் நிறைந்த வினோத உலகம் இந்த அரசியல்!! இன்றைக்கு தமிழ்நாட்டில் அவர் பெயரோ, படமோ இல்லாமல் எவரும் அரசியல் செய்ய முடியாது. இந்த நாட்டிற்கு பெயர் சூட்டியவர். சமுதாயத்தை சீர் திருத்தி, மடை மாற்றி, வழி காட்டி, வாழ வைத்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த அண்ணா அவர்கள் 1962 சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். (திமுக சார்பாக 50 பேர் வெற்றி பெற்றிருந்தனர்) முதலமைச்சராக இருந்து, அரிய பணிகளால் பெருந்தலைவர் என்று பெயரெடுத்த காமராஜர் 1967ல் அவரது சொந்த தொகுதியிலேயே சாதாரண கல்லூரி மாணவரிடம் போட்டியிட்டு தோற்றுப் போனார். முதலமைச்சர், அமைச்சர், பேராசிரியர், பண்ணையார், பெரும்நிலக்கிழார், முதலாளிகள் என பட்டத்துடன் வந்தவர்கள் எல்லாம் கையெழுத்து போடத்தெரியாத பாமர கைநாட்டுகளிடம் தோற்ற வரலாறு தமிழ்நாட்டில் உண்டு. ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் - தம்பி, தந்தை - மகன் போட்டியிட்டு மல்லுக்கட்டிய வரலாறுகளும் உண்டு. தேர்தல் களம் என்பது மக்களுடன் அன்றாட நிகழ்வுகளுடன் தொடர்புடையது. உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களுக்கு பகுப்பாய்ந்து வாக்களிக்கும் அரசியல் விழிப்புணர்வு உள்ள இந்தியாவின் முதல் மாநிலம் தமிழ்நாடு!! கூட்டம் கூடுவதால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது. நகைக்கடை திறக்க நடிகைகள் வந்தாலே பெருங்கூட்டம் பின் தொடரும் பொழுது போக்கு பிரியம் அதிகம் நம் மக்களுக்கு அவ்வளவே!! நாட்டில் அதிக கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்வோர் கோடிக்கணக்கானோர். ஆனாலும் தமிழ்நாட்டில் பிஜேபிக்கு போட்டி நோட்டா தான்!! அது நாள வேடிக்கை பார்க்க கூட்டம் கூடுவதை பற்றி பேசி பொழுது போக்குவதை விட்டுவிட்டு, கிளை கழகக் கூட்டம், பூத் கமிட்டி வலுப்படுத்தும் வேலைகளை வேகப்படுத்தி, அனுதினமும் கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் தரும் தக்க வழிகாட்டுதல்களை நிறைவேற்றி, வெல்வோம் இருநூறு; படைப்போம் வரலாறு!! (குறிப்பு:- இந்த வீடியோ இளம் வயதில் விசிக தலைவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள் உணர்வு பொங்க பேசிய காணொளி. தன் வாழ்க்கையை சமூகத்திற்காக தியாகம் செய்து வாழ்ந்து வரும் இவரை விட அரசியல், கள நிலவரம் அறிந்தவர்கள் சினிமாக்காரர்கள்.?!)
A leader, reformer, chief architect of the Indian Constitution and Bharat Ratna Awardee — Dr. B.R. Ambedkar’s contributions go beyond ink and paper, defining the very principles of our nation.
Today, on his Jayanti, we celebrate his enduring legacy of progress and empowerment.
Happy Ambedkar Jayanti!
#SBI #TheBankerToEveryIndian #AmbedkarJayanti