முதல்வர் @TVKVijayHQ அவர்கள் கற்றுத்தந்த தாரக மந்திரத்தைப் பின்பற்றும் தவெக நிர்வாகிகள்: 'தப்பு நடக்கணும், ஆனா அதை நாங்க மட்டும்தான் பண்ணனும்!' - தமிழ்நாட்டில் தொடரும் தவெகவினரின் குற்றச் சம்பவங்கள்!
MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளாங்கி_அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி.
ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு.
மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள்.
இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது.
அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர்.
இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.
இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி.
இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்?
ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்?
வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்!
சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற SIR நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனைக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிறதா? SIR-இல் இதுதான் அவர்களது நிலைப்பாடா?
தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.மு.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர். எனினும், வரைவு வாக்காளர் பட்டியலிலும் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனது அனைவரும் அறிந்த உண்மை. இப்படி ஊரறிந்த உண்மையைத்தான் இந்தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்கம் மறைக்கிறார்.
உண்மையில், தி.மு.க.வின் தோல்விக்கு S.I.R.-உடன் சேர்த்து மற்றொரு காரணமும் இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, தினமும் தி.மு.க. குறித்து மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொதுவெளியில் கேள்விக்குள்ளானது. தி.மு.க. கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்துக் கொண்டே, வேறு கட்சியின் ஸ்லீப்பர் செல்களாக இவர்கள் செயல்பட்டார்கள்.
இதனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சேர்த்துச் சுமந்ததும் கழகத்தின் வாக்குகள் சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்தபின்னர் மக்களிடம் கழகத்துக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. கழக உடன்பிறப்புகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன.
“தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.” என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் SIR-க்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் கழகம் குறித்துப் பேசலாமா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த கட்டுரை வெளியானதும், ஞானேஷ் குமார் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தொடர்ந்து இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீசிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி!
மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைநடுங்கிதான் விஜய். அப்படிபட்ட தொடைநடுங்கியின் காலைக் கழுவிக் குடிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்குz தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை.
கடந்த இரு நாட்களாக டெல்லியில் இந்தியாவின் இளைஞர் பட்டாளம் ஒன்றுதிரண்டு ஞானேஷ் குமார் அவர்களின் பதவிநீக்கத்தை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பல முன்னாள் முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த அடக்குமுறையில் இருந்து தப்பவில்லை. இவற்றை எதிர்த்து தொடர்ந்து கடும் கண்டனங்களைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து வருகிறார்.
திரிணாமூல் காங்கிரஸ், SFI அமைப்பினர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரே கூட இதற்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கையைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்துதான், “எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்று தி.மு.க. அஞ்சுகிறது” என்று மாணிக்கம் தாகூர் வார்த்தை வாந்தி எடுத்திருக்கிறார். எவரையும் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க.! தேர்தல் பரப்புரைக்கு இடையிலும், கருப்புடை தரித்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொளுத்தி பா.ஜ.க.வின் முயற்சியை வீழ்த்திய வீரர் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார்.
இவர்களெல்லாம் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து கழகத்துக்குப் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அதிலும், பா.ஜ.க. எதிர்ப்பில் இந்தியாவிலேயே மிக வலிமை வாய்ந்த கூட்டணியைக் கட்டமைத்து, தொடர்ந்து இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் முழு வெற்றியைக் குவித்த தி.மு.க. குறித்து, அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதூறு தொடர்ந்தால் அதற்குரிய விளைவை எதிர் கொண்டே ஆக வேண்டும்.
வேங்கைவயல் விவகாரத்தில் வன்னிஅரசு பேச்சு கபடநாடகம்!
பண்ணையார் ஆட்சியில் மந்திரி ஆகியிருக்கும் வன்னி அரசு மன்னிப்பு கேட்பாரா? -திமுக எம்.எல்.ஏ கோவி.செழியன் கேள்வி
‘’மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அக்கறை காட்டுவது ஒரு நாடகம். முதலில், வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனச் சொல்லியிருக்கிறார் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு.
தனக்கு நேர்ந்த அவலத்தை ரோஹித் வெமுலாவோடு ஒப்பிட்டு, கதறினார் பாரதிதாசன். ரோஹித் வெமுலாவுக்கு நடந்தது போன்ற துன்புறுத்தலைப் பாரதிதாசனுக்குச் செய்துவிட்டு, வேங்கைவயலுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் வன்னி அரசு. அன்றைக்கு ரோஹித் வெமுலாவுக்கு ஆர்.எஸ்.எஸ் நடத்தியதை மறைமுக பாஜக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற விஜய் அரசு பாரதிதாசனுக்கு இன்றைக்கு நடத்தியிருக்கிறது. இவையெல்லாம் அம்பலப்பட்டுப் போனதாலேயே வேங்கைவயல் என்ற விவகாரத்தைத் தூக்கிக் கொண்டு வருகிறார்.
வேங்கைவயல் விவகாரத்தில் அறிவியல்பூர்வ விசாரணைக்குப் பின்னர் குற்றவாளிகளை கண்டறிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று தவெக அரசு கருதினால், அந்த குற்றப் பத்திரிகையை திரும்பப் பெற்று - மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன்னிஅரசு குற்றஞ்சாட்டும் நபர்களை கைது செய்து விசாரிக்கட்டும்! அதை யார் தடுத்தது?
அமைச்சராக இருந்து கொண்டு, அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, தவெக பாணி பழிபோடும் அரசியலை வன்னிஅரசு செய்வது சந்தர்ப்பவாதம்! மறுவிசாரணைக்கு உத்தரவிட முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைக்கும் அரசியல் நேர்மை வன்னி அரசிடம் இருக்கிறதா?
வேங்கைவயல் விவகாரத்தில் திமுக ஒருதலைபட்சமாக செயல்பட்டது என்றால், எப்படி 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வன்னி அரசுக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை? விசிக, திமுக கூட்டணியில் எப்படித் தொடர்ந்தது? என வன்னி அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.
“திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் போல பாஜகவைக் கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? பாஜகவைக் கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர் மு.க.ஸ்டாலின்தான். ஆட்சியில் இருந்துகொண்டே சனாதனத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்’’ எனப் பாராட்டு பத்திரம் வாசித்தவர்தான் வன்னி அரசு.
இன்று அமைச்சராக வன்னி அரசு சட்டமன்றத்தில் மோடி, அமித்ஷா பெயரை உச்சரித்த போது அவையெல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. பாஜகவைக் கொள்கை ரீதியாக எதிர்க்கும் கட்சி யாரென்று வன்னி அரசுக்கு இப்போது தெரிந்திருக்குமே! ’கொள்கை எதிரி’ எனச் சொல்லிக் கொண்டே அந்த எதிரியோடு மறைமுக கூட்டு வைத்திருக்கும் விஜய் அரசுக்கு வெண்சாமரம் வீசும் வன்னி அரசு மந்திரி பதவியை ஏற்றுக் கொண்டதற்காக மன்னிப்பு கேட்பாரா?
விஜய் பங்கேற்ற கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் துள்ளத் துடிக்க இறந்தார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சென்னைக்கு அழைத்துச் சந்தித்ததை “அருவருப்பின் உச்சம். கவர்ச்சி திமிர். பண்ணையார்கள் கூட இந்த அருவருப்பைச் செய்ததில்லை’’ என வன்னி அரசு கடுமையாக விமர்சித்தார். அந்த பண்ணையார்கள் ஆட்சியில்தானே மந்திரியாக வலம் வருகிறோமே என வெட்கப்பட மாட்டீர்களா? அப்படிப் பேசியதற்காக எங்காவது நீங்கள் மன்னிப்பு கேட்டிருக்கிறீர்களா? மந்திரி நாற்காலிக்காக தனது கொள்கைகளையும் பேச்சுகளையும் இவ்வளவு சீக்கிரமாக மாற்றிக் கொள்ள முடியுமா? என்ற கேள்வியை வன்னி அரசை பார்த்துத்தான் மக்கள் கேட்பார்கள்.
’சந்தர்ப்பவாத அரசியல்’ ’பிழைப்புவாத அரசியல்’ எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதைவிடக் கேவலமான 'அரசியல் வியாபாரவாதம்' என்ற புதுத் தியரியை அல்லவா உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்.
பட்டியலின மக்களின் உரிமைகளை இன்றைக்கு அதிகாரத்திற்காகவும், அமைச்சர் பதவிக்காகவும், சுயநலத்திற்காகவும் அடகு வைக்கத் துணிந்துவிட்டார் வன்னி அரசு.
விஜய் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசப் பாடல்கள் அதிகம் என்றெல்லாம் முழங்கிய நாக்கு, இன்று அதிகாரத்தின் மடியில் அமர்ந்து கொண்டு மாற்றி சுழல்கிறது!
“தொட்டபட்ட ரோட்டு மேல முட்டை பரோட்டா…” என்ற விஜய் பாடலை விவாத நிகழ்ச்சி ஒன்றில் விமர்சித்த வன்னி அரசுதான், அமைச்சர் நாற்காலி கிடைத்ததும் “சேரி இல்லா ஊருக்குள்ள.. பொறக்க வேணும் பேர புள்ள’’ என மாற்றிப் பாடுகிறார். விஜயை விடப் பிரமாதமான நடிப்பை வெளிக்காட்டுகிறார் வன்னி அரசு.
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் வென்று எம்.எல்.ஏ ஆகி, ஆள் காட்டி விரலின் அடையாள மை அழிவதற்கு முன்பே விஜய் ஆட்சியில் போய் ஒட்டிக் கொண்டு அமைச்சர் ஆனீர்களே. அதற்காக நீங்கள் முதலில் மன்னிப்பு கேளுங்கள்.
கறுப்புப் பணத்தில் வருமானம் வாங்கி அதை மறைத்த குற்றத்திற்கு 1.5 கோடி அபராதம் வாங்கிய அயோக்கியன், அவமானத்தில் முகத்தை மூடிக்கொண்டு திரிந்ததை உலகமே பார்த்தது. அந்த அபாரதத்தையும் கட்ட மாட்டேன் என நீதிமன்றம் சென்று அங்கும் கேவலப்பட்ட ஒரு ஊழல் பேர்வழிக்கு எல்லாம் ஊழல் ஒழிப்பு குறித்துப் பேச எந்தவித தகுதியும் கிடையாது!
அதிகாரம் கிடைச்சதும் நன்றி மறக்கும் மனிதர்கள்.
எவ்வளவு கஷ்ட காலம் வந்தாலும் நன்றி மறந்தவர்களை போல் வாழ்ந்துவிடக் கூடாது.
Just see how cheap humans will behave if power throws at them.
Well done, @TheAIDravidian! 🖤♥️
கருத்துகளைக் கலையாக மாற்றிடும் வாய்ப்பை வழங்கும் A.I. தொழில்நுட்பத்தின் வழியாக, சமூகத்துடன் Constructive-ஆக உரையாடும் trend-ஐ இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டும்.
https://t.co/g07GDGSmSx