இந்த மூன்று திரைப்படங்களுக்கும் ஒ���ு ஒற்றுமை உண்டு.
இந்த மூன்று திரைப்படங்களும் இட ஒதுக்கீட்டை நேரடியாக திரைப்படத்தில் விமர்சித்தவை.
ஒரே ஒரு கிராமத்திலே படத்தில் கதாநாயகி லட்சுமி ஒரு பிராமண பெண். அவரது தாயாருக்கு அவர் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை. ஆ��ால் அதிக மதிப்பெண் தேவை என்பதால், அவர்களுக்கு தெரிந்த தாசில்தார் மூலம் தாழ்த்தப்பட்ட பெண் என்று போலி சர்டிபிகேட் வாங்கி கருப்பாயி என்கிற பெயரை வைத்துக் கொண்டு ஐஏஎஸ் பாஸ் செய்வார்.
இதில் என்ன கொடுமை என்றால், இந்த படம் வந்த ஆண்டில் (1987) மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. அந்த இட ஒதுக்கீடானது விபி சிங் ஆட்சி காலத்தில் 1990 ஆம் ஆண்டு தான் அமல்படுத்தப்பட்டது.
அதுவரை மத்திய அரசு வேலை வாய்ப்புகளில்/ படிப்புகளில் பட்டியல் இனத்தவர்களுக்கு 18% இட ஒதுக்கீடும், ஒரு சதவிகிதம் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கும் இருந்தது. மீதி 81% open competition. ஆனால் அதில் கிடைக்கவில்லை என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக கருப்பாயி என்று பெயரை மாற்றிக்கொண்டு போலி சர்டிபிகேட் வாங்கி ஐஏஎஸ�� பாஸ் செய்வார் நாயகி. இந்த திரைப்படம் வந்த பொழுது கலைஞர் அவர்கள�� நிறைய எதிர்ப்புகளை பதிவு செய்தார். ஆனால் அப்போதைய வெகுஜன பத்திரிகைகள் இந்த படத்தை கொண்டாடத்தான் செய்தன.
இன்னொரு விஷயம் இது வாலி என்கிற புனைபெயர் கொண்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் அவர்கள் எழுதிய காந்திகிராமம் என்கிற கதையை தழுவிய படம்.
அடுத்து கே. பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை. இந்த திரைப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களின் மகன் கௌதம் சுந்தர்ராஜன் ஒரு முதலியார் வீட்டு பையனா��� நடித்திருப்பார். நான் முதலியாராக பிறந்ததால், எனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என்று பாரதியாரிடம் போய் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். இதில் நேரடியாகவே இட ஒதுக்கீட்டை விமர்சித்து வசனங்கள் இருக்கும்.
அடுத்தது பாலகுமாரன் வசனத்தில் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன். இந்தத் திரைப்படத்தில் ஒரு பிராமண பையன் வினித் தனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை தன்னைவிட குறைவான மதிப்பெண் பெற்ற ���ாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவனூக்கு கிடைத்திருக்கிறது என்று தற்கொலை செய்து கொள்வார். இந்த படமும் ��ேரடியாக இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்தது
இட ஒதுக்கீட்டையும் திராவிட அரசியலையும் தொடர்ந்து விமர்சனம் செய்தவர்களின் லிஸ்ட் எடுத்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.
சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் விசு அவர்கள் 1967 க்கு பின்னர் நான் பேன்ட் போடுவதையே நிறுத்தி விட்டேன் என்று சொல்வார். அவரது படங்களிலும் சமூக நீதி இட ஒதுக்கீடு போன்றவற்றை குத்தலாக கேலி செய்யும் காட்சிகள் இருக்கும். முக்கியமாக திராவிட அரசியல்வாதிகளை.
ஷங்கர் திரைப்படங்களில் முக்கியமாக முதல்வன் திரைப்படம். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜியைப் போற்றி, ராஜாஜி மாதிரி முதல்வராக நீ வரவேண்டும் என்கிற வசனம் இருக்கும். அந்தத் திரைப்படத்தின் வசனகர்த்தா சுஜாதா என்கிற புனைபெயர் கொண்ட இன்னொரு ஸ்ரீரங்கம் ரங்கராஜன்
அரசியல்வாதிகளை விமர்சிக்கும் போக்கு திரைப்படங்களில் வந்த காலகட்டத்தை பார்த்தால் அவை எல்லாமே திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் அதிகமாக இருக்கும். அதற்கு முந்தைய திரைப்படங்களில் அரசியல்வாதி என்றாலே ஒரு உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் & ஒரு பெரிய மனிதர் அவரை விமர்சிக்கும் காட்சிகளோடு நிறுத்திக் கொள்வார்கள்.
இப்படி தொடர்ச்சி��ாக திரைப்படங்களின் மூலம் விதைக்கப்படும் hate என்றாவது பலன் கொடுக்கும் என்று நினைத்தார்கள். பலன் கிடைத்தது. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள். தேய்ந்தது.
IMPORTANT THREAD!
There are a several scaremongering tweets & videos viral with a false claim that Hindi speaking migrant workers from Bihar are being attacked in Tamil Nadu. Many news Channels misreported with similar misleading claims. @NitishKumar@bihar_police@tnpoliceoffl
இதற்கு பெயர் தான் திராவிட மாடல் !!
திராவிடத்தின் மீது ஒவ்வாமை கொண்டு வன்மம் கக்குபவர்கள் யாரும் தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியை பற்றி பேசவே மாட்டார்கள் !!
நாம் தான் பேச வேண்டும் !!
8 கோடி தமிழர்களுக்கும் இந்த செய்தியினை கொண்டு போய் சேர்க்க வேண்டும் !!
This is what the Delhi Police did to Jamia Students in the library of Jamia 2 years ago. The UP police did the same to students in Prayagraj day before & the Bihar police did the same to protesting students day before. Yet, the BJP claims to be student & youth friendly!