Aadhav has one of the wildest biographies. Born into a poor family, lost both parents at a young age, studied at a Govt school while staying at his maternal uncle’s house, became a basketball player and got into a Govt sports school. Graduated in political science, married into one of the richest families in TN, and grew his father-in-law’s business while his machan was a spoiled brat. Later started his own business and sold it to his father-in-law for a hefty sum
Became President of the Basketball Federation of India, worked with the DMK alongside Sabareesan during their winning years, started Voice of Commons, joined VCK, then TVK, and eventually became PWD Minister. His long time vision of pursuing a political degree, even when he was poor, seems to have come full circle. And finally, got divorced!
விருமாண்டி படத்தில் கொத்தாளத்தேவர் பேசும் ஒரு வரிக்குப் பின்னால் மதுரையின் 300 வருட வரலாறு ஒளிந்திருக்கிறது!
"திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பாகவே பாண்டிய மண்ணில் ஆட்சி செய்த பரம்பரை..." என்று அவர் பெருமையாகச் சொல்வதன் பின்னணி இதுதான்:
• 1311 - 1323: பாண்டிய அரச குடும்ப வாரிசு சண்டையைப் பயன்படுத்தி மாலிக் காபூர் படையெடுத்தார். தொடர்ந்து மதுரை சுல்தானியம் உருவானது; சுமார் 48 ஆண்டுகள் மீனாட்சி அம்மன் கோவில் வழிபாடு நின்றது.
• 1371: தென்னிந்தியாவின் விஜயநகரப் பேரரசின் குமார கம்பணர் மதுரையை மீட்டு, நாயக்கர்களை ஆளுநர்களாக நியமித்தார்.
• 1623 - 1659: தெலுங்குப் பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், மதுரை கலாச்சாரத்தோடு ஒன்றிப்போன திருமலை நாயக்கர் மகால் மற்றும் கோவில் விரிவாக்கத்தைச் செய்தார்.
படத்தின் கதாபாத்திரங்களும் ஒரு வரலாற்று குறியீடுதான்.
கொத்தாளத்தேவர்:
பழைய பாண்டியர் பெருமையைப் பிடித்துக்கொண்டிருப்பவர்
நல்லம நாயக்கர்:
பின்வந்த நாயக்கர் ஆட்சியின் குறியீடு
விருமாண்டி:
இந்த மண்ணும் இங்கே வாழும் சாமானிய மக்களும்.
ஆட்சிகள் மாறலாம், நம்பிக்கைகள் உடையும். ஆனால் ஒரு மண்ணின் வரலாறு அங்கு வாழும் எல்லா மக்களுக்குமானது!
#Virumaandi #KamalHaasan #MaduraiHistory #TamilCinema #madurai
வெற்றி தமிழ் சொல்லாடல்கள்!
பெட்ரோல் குண்டு- எரியும் பொருள்!
Bomb- வெடிக்கும் பொருள்!
துப்பாக்கி- சுடும் பொருள்!
அரிவாள்- வெட்டும் பொருள்!
ரவுடி- குறும்பு செய்யும் நபர்!
காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிக்கணும் 💪🫡
i’m just awestruck by how an actor could be THIS versatile & convincing in what he does. indian cinema isn’t witnessing another kamal haasan. oh, what a performer. 🛐
People who aren't even born yet will discover Kamal, become his fans, fall in love with his work, and feel inspired to become filmmakers and technicians.
Happy Birthday Demigod @ikamalhaasan
'தசாவதாரம்' போன்ற ஒரு கதை எழுதி அதில் பத்து கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு போட்ட உழைப்பிலும் நேரத்திலும் அவரால் 7க்கும் மேற்பட்ட கமர்ஷியல் படங்களை எடுத்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை.
பண்டிகை காலத்தில் 'மகாநதி' போன்ற சோகமான படத்தை வெளியிடுவது, ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தும் முழுக்க முழுக்க நகைச்சுவை படங்களான சிங்காரவேலன், அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்ச தந்திரம், தெனாலி போன்ற படங்களில் நடித்தார். இன்றைக்கு நான்காம் நிலையில் இருப்பவர்களே தயங்கும் ஒன்றை அன்றைக்கு உச்சத்தித் இருக்கும் போது அதுவும் ரஜினி போன்ற ஒரு போட்டியாளரை வைத்துக்கொண்டு நடித்தார் கமல்
காரணம், அவரது கலைத்தாகம். எல்லா வகையிலான படங்களிலும் நடித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கலைத்தாகம். இன்னொரு விஷயம், இந்த நகைச்சுவை படங்களை எல்லாம் அவர் வெளியிடும் விதம் முக்கியமானது குருதிபுனல் போன்ற டெரரான படத்துக்கு பிறகு அவர் அவ்வை சண்முகி நடித்தார். ஹே ராமுக்கு பிறகு தெனாலி, ஆலவந்தானுக்கு பிறகு பம்மல் கே சம்பந்தம், விருமாண்டிக்கு பிறகு வசூல் ராஜா என இப்படியாக தரமான கலை-கமர்ஷியலின் உச்சமாக கமல் இருந்தார்.
கமல் நான்-கமர்ஷியல் படங்கள் இன்றளவும் வியப்புக்குரியதே. ஹே ராம் என்ற ஒற்றை படத்துக்காக அவர் உள்-புறம் இரு பக்கங்களிலிருந்தும் பிரச்சினைகளை சந்தித்தார். பார்ப்பானாக இருந்து இப்படியான படத்தை எடுப்பது, அந்த அந்த சாதி-மதத்து கதாபாத்திரத்துக்கு அந்த சாதி-மதத்தினரையே நடிக்க வைத்தது, பார்ப்பனியத்தின் முகத்தை காட்டியது என அரசியல் கலை ரீதியில் அது முக்கிய படைப்பு.
விருமாண்டி படத்துக்கும் கடும் எதிர்ப்பு. ஆனால் அந்த கடும் நெருக்கடியிலும் எந்த வித பிசிறும் தட்டாத வகையில் அந்த படத்தை எடுத்து முடித்தார் கமல்.
புது விதமான Effects மற்றும் Technologyக்களை எல்லாம் கொண்டு வரவேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம். வெறுமனே பணம் பார்க்க படம் எடுக்காமல் அதிலும் புதிய புதிய வகையிலான அம்சங்கள், கதைகள், காமெடி என்றாலும் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் அன்றைக்கே நான்கு வேடங்களில் ஒரு ஷாட்டில் வைக்கும் படியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.
உத்தம வில்லன் போன்ற ஒரு கதையை அவ்வளவு நேர்த்தியாக எடுத்து தந்தார். கண்டிப்பாக கமலுக்கு தெரியும் இந்த படம் இப்போது ஓடாது என்று ஆனால் சில காலங்களுக்கு பிறகு இன்றைக்கு உத்தம வில்லன் சிறந்த படைப்பாக கருதப்படுகிறது. ஓடாது என்று தெரிந்தும் வருங்காலத்துக்காக தற்காலத்தை தியாகம் செய்த கணத்தில் கமல் ஆகச்சிறந்த கலைஞன் ஆனார்.
பேசும் படம் போன்ற பேச்சே இல்லாத படம் எல்லாம் நடித்தார். எதிர்மறை கதாபாத்திரம், இறக்கும் வகையிலான கதைகள், அடிவாங்குவது போன்ற சீன்கள் என கமல் தமிழ்ச் சினிமாவுக்கு தந்தது அதிகம். அடுத்த நூற்றாண்டிலும் நிகரற்றதாக இருக்கும்.
கமல் போட்ட உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா என்றால் இல்லை என்மது தான் பொருள் அந்த இடத்தில் தமிழர்கள் தோல்வியடைந்தனர். தான் போட்ட உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பல்வேறு படைப்புகளை வழங்கிய இடத்தில் கமல் கலைஞனாக வென்றார்