டாலர் ₹97 வரைக்கும் போச்சு... RBI என்ன செய்தது?
ஒரு டாலரின் விலை கிட்டத்தட்ட ₹97 வரை .
இது என்ன பிரச்சனை? RBI என்னென்ன நடவடிக்கை எடுத்துச்சு? அதனால ஏற்பட்ட நன்மைகள் என்ன? பாக்கலாம்.
முதலில் பிரச்சினையைப் புரிஞ்சிக்கிட்டு அதுக்கப்புறம் நடவடிக்கைக்குள்ள போவோம்.
இந்தியா கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யுது ன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். அதற்கான பணத்தை டாலர்ல தான் குடுத்தாகனும். எண்ணெய் விலை ஏறுச்சுன்னா Indian Oil, HPCL, BPCL போன்ற நிறுவனங்கள் எண்ணெயை வாங்க இன்னும் அதிகமான டாலர் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இந்த நிறுவனங்கள் சந்தையில் பெரிய அளவில் டாலர் வாங்கும்போது, டாலருக்கான demand அதிகரிக்கும். Demand அதிகமானா டாலரோட விலை உயரும். ரூபாய் மதிப்பு குறையும் - basic economics.
இப்போ இதைச் சமாளிக்க RBI என்ன செஞ்சிது ன்னு பாப்போம்.
Indian Oil, HPCL மற்றும் BPCL நிறுவனங்களுக்குத் தேவையான டாலரை மொத்தமாக அந்த நிறுவனங்கள் RBI இடமிருந்து வாங்கிக்கொள்ளலாம் ன்னு அறிவிப்பு வந்தது.
எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவையைப் பொதுச் சந்தையிலிருந்து RBI தன் வசம் கொண்டு வந்துள்ளது. இந்த USD buying எதுவுமே சந்தையில நடக்காது. அப்படி நடந்தா தானே விலை ஏறும்? இந்த demand-based விளையேற்றதை முழுசா அப்படியே RBI குறைச்சுது.
அடுத்ததாக currency derivative விதிகளையும் கொஞ்சம் கடுமையாக்கியுள்ளது.
இதுவரை, உண்மையான டாலர் தேவை இருப்பதற்கான proof அ குடுத்தாதான், 100 மில்லியன் டாலர் வரை சில derivative transactions செய்ய முடியும். அந்த வரம்பை இப்போ 5 மில்லியன் டாலராக RBI குறைச்சி ஆணை வெளியிட்டுள்ளது.
அதாவது 95% குறைப்பு.
ரூபாய் மேலும் சரியும், நாம லாபம் சம்பாதிக்கலாம் ன்னு நினைச்சு, தேவையை விட அதிகமாக position எடுப்பவர்கள் இப்போ அந்த மாதிரி செய்யவே முடியாது. அதாவது, "தேவையிருந்தா டாலர் வாங்கு. இல்லைன்னா மூடிக்கிட்டு உக்காரு" ன்னு RBI மறைமுகமா சொல்லுது.
ரத்து செய்யப்பட்ட rupee linked forex contract எல்லாம் இப்போ roll-over செய்ய முடியாது.
மேலும் 2 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட குறிப்பிட்ட derivative contracts க்கு, வங்கிகள் அதன் ரூபாய் மதிப்பில் 20% ஐ RBI யிடம் cash reserve ஆக வச்சிருக்கணும் ன்னு வங்கிகளுக்கும் ஆப்பு.
இதனால் பெரிய அளவிலான speculative hedging குறையும். Speculation குறைஞ்சா டாலரின் உண்மையான தேவைகளுக்கு மட்டுமே எல்லாரும் டாலர் வாங்குவாங்க.
இந்த அறிவிப்புகள் வந்த பிறகு என்ன ஆச்சு?
வெள்ளிக்கிழமை ஒரு டாலருக்கு ₹96.71 ன்னு இருந்த ரூபாய் மதிப்பு, திங்கட்கிழமை காலையில ₹95.76 வரை குறைஞ்சிச்சி. ஏறக்குறைய 1% முன்னேற்றம்.
ஆனால் இதைப் பாத்துட்டு பிரச்சினை முடிஞ்சிடிச்சு ன்னு நினைக்கக்கூடாது.
RBI எடுத்த நடவடிக்கைகள் உடனடி டாலர் தேவையையும் speculative trading அ மட்டும் தான் குறைச்சிருக்கு. ரூபாய் வேகமா பாதாளத்துக்கு போராத தடுத்துருக்கு. அவ்ளோதான்.
ஆனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறிக்கிட்டே போனா என்ன ஆகும்?
FII's இந்தியாவிலிருந்து தொடர்ந்து பணத்தை எடுத்துக்கிட்டு போனா என்ன ஆகும்?
அமெரிக்க டாலர் உலகம் முழுவதும் strong ஆ இருந்தா என்ன ஆகும் (இப்போவே அப்படித்தானே இருக்கு)?
இந்த basic pressures அ RBI ன்னால மாத்தவே முடியாது.
சுருக்கமாகச் சொன்னா, RBI தன்னோட control ல என்னென்ன செய்ய முடியுமோ அதத்தான் செய்ய முடியும். அதுக்கு மேல globally ஒன்னும் செய்ய முடியாது.
அதனால அடுத்த சில வாரங்களுக்கு டாலர் விலையை மட்டும் பார்க்காதீங்க. கச்சா எண்ணெய் விலை, FII exit, இந்தியாவோட forex reserves அப்புறம் அமெரிக்க bond yields - இது எல்லாத்தையும் பாருங்க.
அங்கேதான் ரூபாயின் தலையெழுத்து (ரூபாய் செஞ்சுரி அடிக்குமா) என்னங்குறத்துக்கான உண்மையான பதில் இருக்கு.
#RBI #IndianRupee #USDINR #IndianEconomy #Forex #CurrencyMarket #EconomyExplained
Thankyou Major sir🙏
Starlink ஏன் வேணா ன்னு இதை விட clear ஆ விளக்க முடியாது👌
இதுக்கு மேல..இது வேணும்னு சொல்றவன் ஒன்னு உலக அறிவு இல்லாத ஒரு அப்பாவி யா இருக்கணும் இல்ல இந்தியாவை நேசிக்காதவனா இருக்கணும்🙏🙏
கடவுளுக்கு காணிக்கை கொடுப்பார்கள்…
ஆனால் இங்கே,
கடவுளே வந்து காணிக்கை கொடுத்திருக்கிறார்!
தளபதி குடித்த டீ கிளாஸும்,
அவர் கொடுத்த ₹500-ம்
சாமி படத்திற்கு முன் வைத்து
தினமும் பூஜை செய்யும் அளவுக்கு…
மக்களின் மனதில்
விஜய் — ஒரு தலைவர் மட்டுமல்ல,
ஒரு தெய்வீக உணர்வு!