பாரதியை ஒரு வித்தியாசமான குழந்தைப் பார்வையில் புரிந்து கொள்ள உதவும் நூல் இது. பாரதியைப் பிடித்தவர்களும் புரிந்துகொள்ள நினைப்பவர்களும் கட்டாயம் வாசித்துப்பாருங்கள். இப்போது கிண்டிலிலும் கிடைக்கிறது. #புத்தகம் | 3
பாரதி புதுச்சேரியில் வாழ்ந்தபோது அவருடன் பக்கத்திலே வாழ்ந்து அவருடனும் அவர் குடும்பத்துடனும் நெருங்கிப்பழகிய யதுகிரி அம்மாள் அந்த நினைவுகளை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். “பாரதி நினைவுகள்” என்று. #புத்தகம் | 2
பாரதியும் காந்தியும் பலராலும் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஆளுமைகள். பாரதி வாழ்க்கையைப் பற்றி இன்னும் பல கற்பனைக் கதைகள் உலவுகின்றன. #புத்தகம் | 1
ஏற்கனவே பல உணர்வு தூண்டல்களால் மழுங்கியிருக்கும் தமிழ்ச்சாதிக்கு இது மற்றுமொரு பின்னைடைவே. திராவிட அரசியல்வாதிகளும் இதற்கு ஒத்து ஊதுவதுதான் இன்னும் வலிக்கிறது. | 3
அதற்குப் பதில் ஏதாவது ஒரு குறளை எடுத்து அதன்படி வாழ்வது என்று வாழ்ந்து காட்டினால் திருவள்ளுவரை மகிழ்விக்கலாம். சமீப காலமாக அதிகரித்துவரும் இந்து உணர்வு தூண்டல்கள் தமிழ்கத்திற்கு நல்லதாகப் படவில்லை. | 2
திருவள்ளுவர் தான் சார்ந்த மதத்தை வெளிப்படுத்த நினைத்திருந்தால் 1330 குறளில் எங்கு வேண்டுமானாலும் எளிதாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் கடவுள் வாழ்த்தில் கூட எந்த கடவுள் பேரும் வராமல் மறைத்தே பேசுபவருக்குப் போய் இப்போது பட்டையும் கொட்டையும் போடுகிறார்கள். | 1
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க சென்னைய? ஒரு பத்து வருசம் வெளியூர்ல இருந்திட்டு வந்து பாத்தா காலைலயே எதுத்தால இருக்கவன் மூஞ்சி தெரிய மாட்டுது. #AirPollution#Chennai
28 ஆண்டு காலம் ராஜீவ்காந்தியை கொன்றது தமிழர்கள் தான் என்று சொன்ன போது கெடாத சட்ட ஒழுங்கு, ஆம் நாங்கள் தான் தமிழர்கள் தான் கொன்றோம் என்று சொல்லும் போது மட்டும் எப்படிடா கெட்டுவிடும்? - முகிலன் (மழலையர் பாசறை- நாம் தமிழர் கட்சி)
#நாம்தமிழர்கட்சி#சீமான்#அமைதிப்படை_அட்டூழியம்