ஜனவரி 26 முதல் இப்போதுவரை எனது கணக்கு என்னிடமிருந்து திருடப்பட்டிருந்ததை தற்போதுதான் எதேச்சையாக கவனித்தேன்.
மேற்சொன்ன காலகட்டத்தில் நான் பதிவிட்டதாக எனது கணக்கில் பகிரப்பட்ட பதிவுகளை பொருட்படுத்திக்கொள்ள வேண்டாம்.
உங்கள் அனைவரிடமும் சிரம் தாழ்ந்து மன்னிப்புகளை கோருகிறேன்.
--
எங்கு எப்படியோ தமிழ் நாட்டில் தோழர் சிவன், தோழர் கிருஸ்து, தோழர் அய்யனார், தோழர் முகம்மத், தோழர் சித்தார்த்தர் என அனைவரும் தோழர்களே.
இவர்களைத் தொடர்வோர் அனைவரும் அங்காளி பங்காளி, அக்கா தங்கை, மாமன் மச்சான், அண்ணன் தம்பிகளே.
சேராக் காதலர்கள் காதலை வென்றியங்க வியலாது. என்றேன்றும் கூடும் காதலில், காதலர்கள் விழுங்கப்படுவர்.
தீராக் காதலெனினும், அதுவும் ஒரு நாள் தூர்ந்தே தான் போகும்.
காதல், அது அப்படித்தான்.
கூடிக்கழித்த ஆதி இரவில் கையோடு வந்த ஏவாளின் கேசம் காட்டி, ‘நம் பிழையால் பிழைத்த
மயிர் காண்’ என்றான் ஆதாம்.
பக்குவமாய் வாங்கி இரு கரம் அடைத்து, குலுக்கி, வானில் தூரமாய் எறிந்து சொன்னாள், “பிழையால் பிரபஞ்சம் ஆகக் கடவது”.
அஃதே ஆனது மயிர்.
ஏவாள்கள் படைத்துக் கொண்டிருந்த காலம் அது.