TVK கட்சி மருத்துவரணி நிர்வாகி இந்த பெண் ஒரு மருத்துவர் இல்லை - அட நர்சு கூட இல்லை.. எப்படி MLA எல்லாம் பொய் சொல்லி திரிந்தானுகளோ அதே போல இது டாக்டர் என்று சொல்லி கொண்டு போய் ஆய்வு செய்துள்ளது...
ரீல்ஸ் போடும் கும்பல் இதை நம்பி பரப்பிட்டு இருந்தானுக.. இதான் பிரச்சனையே... இப்படி தான் இவனுக தேர்தலையே மொத்தமா நடத்தி முடித்தனர்...
குரங்கு கையில் பூமாலை.
கடந்த 5 ஆண்டுகளாக, கையாலாகாத திமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டாலும், ஊழல் முறைகேடுகளாலும் முடங்கிப்போன தமிழகத்தை மீண்டும் தலைநிமிர செய்யவேண்டும் என்ற இலக்குடன் வீறுநடை போடும் தேசிய ஜனநாயக் கூட்டணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
கடந்த 25 ஆண்டுகளாக, பொள்ளாச்சி மக்களின் நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்து தனது மக்கள் சேவையை தொடர்ந்து வரும் சிறப்புமிக்க வேட்பாளர் திரு. பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள். ஆனால், அவரை எதிர்த்து நிற்க கூடிய திமுகவின் கொத்தடிமை கட்சி கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் தான் சார்ந்த கட்சியின் கொடியை கூட அவமானமாக கருதுகிறார். தனது கட்சி பெயரை சொல்வதற்கே கூச்சப்படும் அவரால் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா?
மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு, பொள்ளாச்சி நகரத்திற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய உலகத்தரம் வாய்ந்த நகரம் என்ற அங்கீகாரத்தை கொடுத்தது. ஆனால், தென்னை நார் சார்ந்த தொழிலை வெள்ளை பட்டியலில் இருந்து ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றி, ரூ.5000 கோடி வணிகம் நடைபெறும் தொழிலை முடக்க முயற்சித்தது திமுக அரசு.
திருப்பரங்குன்றத்தில் பேசிய திருமதி.கனிமொழி அவர்கள், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை, எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகிறார்கள் என கூச்சமின்றி பொய் சொல்கிறார். பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி வராத நாளே இல்லை என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, மக்களை பொய் சொல்லி ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கும் திமுகவை துரதியடிக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்து காத்திருக்கிறார்கள்.
திட்டங்களை அறிவித்து ஊழல் செய்யும் காங்கிரஸும், ஊழல் செய்யவே திட்டங்களை அறிவிக்கும் திமுகவும் தமிழகத்தை கொள்ளையடித்தது போதும். மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முடிவுக்கட்டவும்,மக்களுக்கான நல்லாட்சி அமையவும் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களுக்கு பொள்ளாச்சி மக்கள் மகத்தான வெற்றியை மீண்டும் பரிசளிக்கப்போவது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! தமிழகம் செழிக்கட்டும்!
தமிழகத்தின் வளர்ச்சியும், தமிழக மக்கள் நலனுமே கொள்கை என கொண்டு ஒன்றிணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் திரு. @AnanthAyyasamy அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
தமிழகத்தில் குடும்ப அரசியலும், ஊழல் ஆட்சியுமே அடையாளமாக கொண்ட ஒரே கட்சி திமுக தான். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தமிழகம் இருண்ட காலத்தைச் சந்தித்துள்ளது. தங்களின் சுயநலத்திற்காகத் தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்து, மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கியுள்ள கையாலாகாத திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறியத் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால் தமிழகம் போதைப்பொருட்களின் கூடாரமாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகவும் மாறியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், சாமானிய மக்களை வஞ்சித்து, ஊழலில் திளைக்கும் இந்த கமிஷன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் இது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண்.84-யில் செண்பகவல்லி அணையை சீரமைப்போம் என கூறியது. கடந்த 5 ஆண்டுகளில், செண்பகவல்லி அணையைச் சீரமைக்கத் துப்பில்லாத திமுக அரசு, வீரகேரளம்புதூர் பகுதியில் இரட்டை குளம் திட்டத்தையும் செயல்படுத்தாமல் உள்ளது. அதனால் 48 குக்கிராமங்களும், 15 கிராம பஞ்சாயத்துகளும் வறட்சியின் பிடியில் உள்ளன. இப்படி விவசாயிகள் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளது திமுக அரசு. விவசாயிகளின் கண்ணீருக்கு வரவிருக்கும் தேர்தல் பதில் சொல்லும்.
வாசுதேவநல்லூர் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறவும், வளர்ச்சியடைந்த வாசுதேவநல்லூர் உருவாகவும், வரும் 23-ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. ஆனந்தன் அய்யாசாமி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். திமுகவின் காட்டாட்சி ஒழியட்டும்! தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! வாசுதேவநல்லூர் வளரட்டும்! (1/2)
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து, பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய திமுக ஆட்சியை அகற்றுவதற்காக நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், உதகமண்டலம், காங்கேயம், அரவக்குறிச்சி, கரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி, நாளை மாலை (10.04.2026) பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறேன்.
இருண்ட காலத்திலிருந்து தமிழகத்தை மீட்டு, நல்லாட்சியும் வளர்ச்சியும் அமைய, பொதுமக்கள் அனைவரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான, திரு. எஸ். ரவீந்திரன் துரைசாமி அவர்களின் தந்தை, திரு. ஶ்ரீகிருஷ்ணன் அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
திரு. எஸ். ரவீந்திரன் துரைசாமி அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டேன்.
ஐயா திரு. ஶ்ரீகிருஷ்ணன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமும், மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவமும் நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. இவை மக்களின் மனதில் ஆறாத காயமாக இருக்கும் நிலையில், தனது கல்வி தொடர்பான ப்ராஜக்ட் பணிக்காக சென்னை வந்த திருச்சியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி மீதும் பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடைபெற்றுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னைக்கு வந்த திருச்சி கல்லூரி மாணவியை, ஒரு கும்பல் மிரட்டி, காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரிலேயே, அதுவும் தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் இல்லத்திலிருந்து வெறும் பத்து நிமிட தூரத்தில், இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது.
தமிழகத்தில் நம் சகோதரிகள் மீது நடைபெறும் ஒவ்வொரு பாலியல் வன்கொடுமையும், இந்த கையாலாகாத திமுக அரசின் கீழ், சட்டம், ஒழுங்கு எவ்வளவு செயலிழந்து போய் விட்டது என்பதை, வேதனையுடன் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.
#DMKFailsTN
Before the scars of the horrific sexual assault and brutal murder of a 17-year-old girl near Vilathikulam and the sexual assault of a 14-year-old by a gang near Madhuranthakam have healed, yet another sexual assault has been reported of a college student from Trichy who came to Chennai for project work.
The college student was reportedly threatened by a group of men, forcibly abducted in a car, and subjected to sexual assault, an incident that occurred in the capital city of Tamil Nadu, merely ten minutes away from the residence of the state’s Chief Minister, Thiru @mkstalin.
Every sexual assault of our sisters in Tamil Nadu is a painful reminder of the state of law & order under this useless DMK government.
#DMKFailsTN
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?
இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?
We welcome the order of the Honourable Madras High Court directing the TN Police’s Department of Vigilance and Anti-Corruption to register an FIR against DMK Minister Thiru KN Nehru in the ₹888 crore bribery case related to job appointments in the Municipal Administration and Drinking Water Supply Department.
In October last year, the Enforcement Directorate formally wrote to the Chief Secretary of the Tamil Nadu Government, the Director General of Police, and the Department of Vigilance and Anti-Corruption, urging the registration of an FIR against Minister Thiru KN Nehru in connection with this ₹888 crore corruption case.
Similarly, in December last year, the Enforcement Directorate once again sought the registration of a case against Minister Thiru KN Nehru, citing bribery of nearly ₹1,020 crore in the awarding of contracts in the same department. Further, in January this year, for the third time, the Enforcement Directorate forwarded documentary evidence of another bribe scandal of ₹365.87 crore related to transfers and postings within the department.
Despite repeated communications supported by clear evidence, the DMK government chose not to act and kept all three letters pending for several months.
After receiving multiple evidence-backed communications from the Enforcement Directorate, what plausible explanation will TN CM Thiru @mkstalin now offer for not registering a case against Minister Thiru KN Nehru?
If corruption amounting to nearly ₹2,300 crore has occurred in just one department within a single year under the DMK regime, what does this say about the state of governance in Tamil Nadu? Will the Chief Minister now claim that all these scams took place without his knowledge?
We urge immediate action to register FIRs in the ₹1,020 crore contract bribery case and the ₹365.87 crore transfer bribery case, along with this case. Failure to do so will only reinforce that these massive corruption scandals occurred with the full knowledge and consent of TN CM Thiru MK Stalin.
திருச்சி மாநகராட்சி உறையூரில், மாநகராட்சி சார்பாக விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், நான்கு வயது பெண் குழந்தை உட்பட மூன்று உயிர்கள் பலியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.
குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக, கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் புகாரளித்த நிலையில், மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசின் போக்கு இப்போதும் தொடர்கிறது. சென்னை பல்லாவரத்திலும், இது போலவே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் மூன்று உயிர்கள் பறிபோயின. அப்போதும் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்று கூறிய திமுக அரசு, அதற்கான பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் ஓடி ஒளிந்து கொண்டது. தற்போதும் அதே கதையை முன்வைக்கிறது. பொதுமக்கள் உயிர் என்ன உங்களுக்கு அத்தனை மலிவாகி விட்டதா?
பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க முடியாத கையாலாகாத மாடல் திமுக அரசு, பொய்களைக் கூறி சமாளிப்பதை விட்டுவிட்டு, உடனடியாக உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அந்தப் பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
உத்தமர் காந்தியை ஒருவனுக்கு பிடித்தும் ஏதோ வகையில் பிடிக்காமல் போவதற்கு அவன் நாதுராம் கோட்சேவை ஆதரிப்பவனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை...!!!
அவன்...???
1. பகத்சிங்கை தூக்கிலிடுவதை எதிர்க்காமல் காந்தி கள்ள மெளனம் சாதித்ததை அறிந்தவனாக இருக்கலாம்...!!!
2. நேதாஜியை கட்சியை விட்டு தனது ஒத்துழையாமையால் ஒதுக்கியதை தெரிந்தவனாக இருக்கலாம்...!!!
3. அவரது வெள்ளையனே வெளியேறு போராட்டம் உட்பட அனைத்தும் ஒத்துழையாமை இயக்க போராட்டமும் தோல்வியில் முடிந்ததை அறிந்தவனாக இருக்கலாம்...!!!
4. நவகாளி கொலைகளை காந்தி அணுகிய விதத்தை தெரிந்தவனாக இருக்கலாம்...!!!
5. ஒரு முஸ்லிம் கொல்ல வந்தால் இந்துக்கள் மரணத்தை ஏற்று கொள்ள வேண்டும் திருப்பி தாக்க கூடாது என்ற காந்தியின் இந்துக்களுக்கு எதிரான அஹிம்சை தத்துவத்தை அறிந்தவனாக இருக்கலாம்...!!!
6. இஸ்லாமிய தேவையற்று பிரிவினைவாதம் எனும் சிறு செடியை நீர் ஊற்றி மரமாக வளர்த்த கதையை தெரிந்தவனாக இருக்கலாம்...!!!
7. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்துக்களை சீக்கியர்களை பற்றி ஒரு நொடி கூட சிந்திக்காமல் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததனை அறிந்தவனாக இருக்கலாம்...!!!
8. பிரிவினையின் போது கொல்லப்பட்ட மக்களின் மரண ஓலங்கள் இன்னமும் தனது காதால் கேட்பவனாக இருக்கலாம்...!!!
9. சுதந்திரத்துக்கு காந்தி ஒரு காரணமே அல்ல ஆனால் பிரிவினைக்கு அவர் முக்கிய காரணம் என்பதை தெரிந்தவனாக இருக்கலாம்...!!!
10. சர்தார் வல்லபாய் படேலுக்கு போக வேண்டிய பிரதமர் பதவியை தனது சூழ்ச்சியால் நேருவிற்கு கொடுத்த வரலாறு அறிந்தவனாக இருக்கலாம்...!!!
11. சுதந்திரத்துக்கு உண்மை காரணமான நேதாஜியை நேசிப்பவனாக இருக்கலாம்...!!!
12. வஉசி செக்கிழுக்க
திலகர், லாலா
லஜபதி ராய், பிபின் சந்திர பால் மற்றும் நேதாஜி தேடப்படும் குற்றவாளி
என தனக்கு உடன்படாத பல தலைவர்களை ஆங்கிலேயனை கொண்டே அழித்த யுக்தியாக இருக்கலாம்...!!!
13. நிர்வாகத்துக்கு வெளியே இருந்துகொண்டு தன்னை முன்னிலைப்படுத்தும் நிர்வாக முறையை (தற்போதைய இங்கிலாந்து மன்னர் குடும்பம் போன்ற) உருவாக்க முயன்றதாக இருக்கலாம்...!!
14. தன்னைத் தவிர வேறு தலைவர்கள் உருவாகி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல் பட்டதை அறிந்தவனாக இருக்கலாம்...!!!
காந்தி மீதான மனக்கசப்புக்கு
கோட்சே ஆதரவு தன்மைதான் காரணம் என்பது இந்திய சுதந்திரம் கத்தியின்றி ரத்தமின்றி கிடைத்தது என்பதைவிட அபத்தமானது...!!!
ஜெய்ஹிந்த்...!!!.
(எங்கே பல முறை கேட்டது, படித்தது
விடை தெரியாத புதிர்கள்)
#காந்தி
#gandhiji
@nsitharaman@polimernews@thatsTamil@ThanthiTV@News18TamilNadu@PTTVOnlineNews@PTI_News@dinamalarweb@TamilTheHindu@tskrishnan@KTRaghavanBJP