நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
“தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் செப்டிக் டாங்குகளைச் (septic tanks) சுத்தம் செய்யும்போது 38 பேர் உயிரிழந்துள்ளனர்”
நாடாளுமன்றத்தில் இன்று நான் எழுப்பிய வினாவுக்கு அமைச்சர் அத்வாலே பதில்
==
(a) கடந்த ஐந்து ஆண்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் செப்டிக் டாங்குகளைச் (septic tanks) சுத்தம் செய்யும்போது நிகழ்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மாநில வாரியாகத் தருக;
(b) ஆபத்தான முறையில் மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்திய முகமைகள் அல்லது அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் அந்தப் புகார்கள் மீதான தீர்வு நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தருக;
(c) மாநிலங்கள் முழுவதும் இயந்திரமயமாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் முறையின் செயல்பாட்டை அரசு மதிப்பீடு செய்துள்ளதா, ஆம் எனில், அது குறித்த விவரங்களைத் தருக; மற்றும்
(d) மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளும் முறையை (manual scavenging) முழுமையாக ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
என்ற கேள்விகளை நான் எழுப்பினேன். அதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே அவர்கள் அளித்த பதிலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
(a): துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் (NCSK) தகவலின்படி, 01.01.2021 முதல் 30.06.2026 வரையிலான காலத்தில் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் செப்டிக் டாங்குகளை ஆபத்தான முறையில் சுத்தம் செய்தபோது உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்களின் மாநில வாரியான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
(b): கடந்த ஐந்து ஆண்டுகளில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 193 முதல் தகவல் அறிக்கைகள் (FIRs) பதிவு செய்யப்பட்டுள்ளன.
(c): இல்லை.
(d): "மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம், 2013 (MS Act, 2013)"-இன் விதிகளின்படி, 6.12.2013 முதல் நாட்டில் மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளும் முறை தடை செய்யப்பட்ட நடவடிக்கையாகும். மேற்கூறிய தேதிக்குப் பிறகு, எந்தவொரு நபரோ அல்லது முகமையோ மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளும் பணியில் யாரையும் ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது. MS Act, 2013-இன் விதிகளை மீறி மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளும் பணியில் யாரையாவது ஈடுபடுத்தும் நபர் அல்லது முகமை, அச்சட்டத்தின் பிரிவு 8-ன் கீழ் தண்டனைக்குரியவர் ஆவர்; இதற்காக 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம். அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளும் முறை நடைமுறையில் இருப்பது குறித்த எந்தத் தகவலும் பெறப்படவில்லை.” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செப்டிக் டாங்குகளைச் (septic tanks) சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களின் மாநிலவாரியான தகவல்களைப் பார்க்கும்போது தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுதும் 332 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 58 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக ஹரியானாவில் 47 பேர் மூன்றாவதாக தமிழ்நாட்டில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
செப்டிக் டாங்குகளைச் (septic tanks) சுத்தம் செய்யும்போது உயிரிழக்கும் கொடுமையை இல்லாமல் ஒழிப்பதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
- ரவிக்குமார் எம்.பி
ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சரிடம் கோரிக்கைக் கடிதம்
இன்று தலைவர் @thirumaofficial அவர்களின் வழிகாட்டுதல்படி ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் அவர்களை நேரில் பார்த்துப் பின்வரும் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தைக் கொடுத்தேன். போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை உடனே விடுவிக்க வலியுறுத்தினேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
பட்டியல் சமூகத்தினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) நலன் மற்றும் கல்வி முன்னேற்றம் தொடர்பான சில முக்கியமான விஷயங்கள் குறித்து தங்களின் கனிவான கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். கீழ்க்கண்ட கோரிக்கைகளை தயவுகூர்ந்து பரிசீலித்து சாதகமான நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:
1. பட்டியல் சமூகத்தினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மாணவர்களுக்கான போஸ்ட் -மெட்ரிக் (Pre-Matric) மற்றும் பின்-மேல்நிலை (Post-Matric) கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் தகுதிக்காக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டுக்கு ரூ.2.50 இலட்சம் குடும்ப வருமான உச்சவரம்பை, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) மற்றும் பிற ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகைத் திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான உச்சவரம்புக்கு இணையாக, ரூ.8.00 இலட்சமாக உயர்த்தி வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
2. 2022–2026 காலப்பகுதிக்கான கல்வி உதவித்தொகை நிலுவைத் தொகையாக ரூ.130.20 கோடி இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனால் 2,44,112 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பிரதம மந்திரி யசஸ்வி (PM YASASVI) திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மாணவர்களுக்கான போஸ்ட் மெட் ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்காக ரூ.124.09 கோடியும், போஸ்ட் மெட் ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்காக ரூ.194.22 கோடியும் ஒன்றிய அரசின் நிதியுதவியாக ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளன. மாணவர்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க, இந்த நிதிகளை விரைவாக விடுவிப்பது மிகவும் அவசியமாகும்.
3. 2026–27 நிதியாண்டிற்காக, தாழ்த்தப்பட்டோர் (SC) மாணவர்களுக்கான போஸ்ட் மெட் ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்காக தேவையான ரூ.1,093.20 கோடியையும், தாழ்த்தப்பட்டோர் (SC) மாணவர்களுக்கான ப்ரி மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.108.55 கோடியையும் இந்திய அரசு ஒப்புதல் வழங்கி, இத்திட்டங்கள் இடையூறு இன்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
4. பிரதம மந்திரி அனுசூசித் ஜாதி அப்யுதய் யோஜனா (PM-AJAY) திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.154.08 கோடி ஒன்றிய அரசின் நிதியுதவியை, வாழ்வாதார மேம்பாட்டு முயற்சிகள், கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கல்வி உள்கட்டமைப்புத் திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்துவதற்காக, விரைவாக விடுவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
5. தற்போதைய நிதியாண்டில், உயர்கல்வி பயிலும் பட்டியல் சமூகத்தினர் (SC) மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, 127 புதிய மாணவர் விடுதிகளை கட்டுவதற்குத் தேவையான நிதியுதவியை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
6. தமிழ்நாட்டில் மொத்தம் 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. அவற்றில், தற்போதுள்ள 40 சதவீத SC மக்கள் தொகை என்ற தகுதிநிபந்தனையின் அடிப்படையில், 3,112 கிராம ஊராட்சிகள் மட்டுமே பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா (PMAGY) என்ற PM-AJAY திட்டக் கூறின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தத் தகுதிநிபந்தனையை 30 சதவீதமாக தளர்த்தினால், எஞ்சியுள்ள 9,413 கிராம ஊராட்சிகளும் இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும். எனவே, இந்தத் தகுதிநிபந்தனையை 30 சதவீதமாக தளர்த்தி வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
7. SC மாணவர்களுக்கான போஸ்ட் மெட் ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்விப் பராமரிப்பு உதவித்தொகை (Academic Maintenance Allowance), குறிப்பாக மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு, விடுதிக் கட்டணம், உணவுச் செலவு மற்றும் ஒட்டுமொத்த கல்விச் செலவு கணிசமாக உயர்ந்துள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மறுஆய்வு செய்து கணிசமாக உயர்த்தி வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (1/2)
பழனிக் கோவிலுக்கு சொந்தமான நிலம் கொள்ளைப் போவதை தடுக்கத் தவறிய தவெக அரசை விமர்சித்தும், அறநிலையத்துறையில் நடந்திருக்கும் மோசடிகள் குறித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காரணத்திற்காக அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த திரு. வினோத் சூர்யகுமார் அவர்களின் குடும்பத்தினரை நேற்றைய தினம் சந்தித்தேன்.
சமூக நலன் சார்ந்து, கழகத்தின் கொள்கை வழி செயல்பட்டதற்காக கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கும் அந்த இளைஞருக்கு உறுதுணையாக கழகம் இருக்கும்.
"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Stand such a wonderful" அல்ல.
அது "Stand in front of such a wonderful...".
மூன்று பேரின் பெயர்களைச் சொன்னால், அதற்கடுத்து பயன்படுத்த வேண்டியது 'has' அல்ல, 'have'.
"Any of the sports minister" அல்ல.
அது "Any of the sports ministers".
"have a breakfast" அல்ல.
அது "have breakfast".
அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் மேடைகளில் பேசும் ஆங்கிலத்தில் பல அடிப்படைப் பிழைகள் இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து யாரும் அதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை. ஏனென்றால், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே. ஒருவருக்கு மொழியை விடச் செயல்பாடுகளே முக்கியம் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் எதிர்காலத்திற்குத் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையிலும், அவர்கள் பள்ளிக்கே வர பயப்படும் வகையிலும் நடந்துகொள்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் இதுபோன்ற அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதை தவெக அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!
திமுக வழக்கம்போல் வெட்டி ஒட்டி பிரச்சனையை மடை மாற்றுகிறது.
போலீஸ் ஆதாரம் இருந்தால் கொலை வழக்காக மாற்றுவார்கள். இல்லையென்றால் மாற்ற procedure இல்லை என்கிறார் திருமா.
இறந்த பெண்ணின் Postmor*em ல் தற்கொலை என்று வந்துள்ளதாகவும் பெண்ணின் உறவினர்கள் உடலை எரித்து விட்டதாகவும் திருமாவிடம் சொல்கிறார்.
திருமா விசிக நிர்வாகி துரை அவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உதவ கேட்டுக்கொள்கிறார்.
விசிக நிர்வாகி துரை அவர்கள் உடற்கூறாய்வு நடத்தும்போது கவனிக்கப்பட வேண்டிய செய்முறைகளை விளக்குகிறார்.
திமுக IT wing குற்றச்சாட்டு வைப்பது போல் அரசை காப்பாற்றும் முயற்சி எதுவும் இதில் இல்லை.
திருவாரூர்மாவட்டம் , நன்னிலம்தாலுக்கா, அன்னியூர் பஞ்சயாத்து பாகசாலை கிராமம் மக்கள் இறுதி சடங்கிற்கு இடுகாடு செல்ல பாலம் கூட இல்லாத நிலைமை?
நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
#thiruma_army@CollectorTVR@CMOTamilnadu
ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்றக் கோரி சட்டப்பேரவையில் விசிக சார்பில் வலிமையாகக் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்களின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
கடந்த 18-03-2026 அன்று, தோழர் எவிடென்ஸ் கதிர் மற்றும் தோழர்களுடன் ஆணையத்தின் முன் ஆஜராகி, ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தின் தேவை குறித்த ஆவணங்களை அளித்தோம். மீண்டும் கடந்த வாரம் (25-06-2026) (ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுடன்) ஆணையத்தை சந்தித்து முறையிட்டுள்ளோம்.
ஆணையத்தை நாங்கள் இருமுறை சந்தித்த இந்த 3 மாத இடைவெளியில், தமிழ்நாட்டில் 8 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன.
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது. அதே உறுதியுடன் இப்போது தவெக அரசு, நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
காட்டுமன்னார்கோயிலில் @thirumaofficial அவர்கள் போட்டி போடாமல் பின்வாங்கியதற்கக்கு திமுக தான் காரணம் என்று எல்லோரும் சொல்லும்போது, @thirumaofficial அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று சொன்னார்கள். ஆனால் இன்று அவர் வாயாலே உண்மையை சொல்கிறார் இதற்கு திமுகதான் காரணம் என்று. இன்னும் எவ்வளவு அடக்குமுறைகளை திமுக செய்து இருக்கிறது என்பது @thirumaofficial அவர்களுக்குத்தான் வெளிச்சம் 🤐🤐🤐🤐
என்னை பொறுத்தவரை இந்த ஒரு மாதத்தில் தோழர் திருமாவளவன் மீது செய்யப்பட்ட narratives அசிங்கத்தின் உச்சம்...
அவர் கட்சி ஆரம்பிக்கும் போது கூட இவ்வளவு தாக்குதலை உட்கொண்டு இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்...
Systematic attack on thirumavalavan done by press, dmk,tvk and intellectuals of Tamil Nadu,Shame on u people...
தவெக BJPயின் கைக்கூலி இல்லை என்ற சந்தேகம் எனக்கு இப்போது இல்லை.
ஆட்சிக்கு கடைசிவரை ஆதரவு அளிப்போம் என்று முதல்வர் அவர்களிடம் உறுதி அளித்தோம் -திருமாவளவன்
Alexa play this song for கொத்துஸ்
“வாழ்க்கை நாடகமா..என் பொறப்பு பொய் கணக்கா…” 😂
“ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது
என்பது வேறு;
அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்பது வேறு.
அமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும்
ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவு நீடிக்கும் என்பது தான் எமது தலைவர் எழுச்சிதமிழர் @thirumaofficial தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களின் கருத்து.
இதில் உள்நோக்கம் கற்பிப்பது திரிபுவாதமாகும்”
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
14.6.2026