மக்களிடம் செல்.
மக்களிடம் உரையாடு.
-பேரறிஞர் அண்ணா
மதுராந்தகம் இடைத்தேர்தலில் எங்கள் பகுதி தாய்மார்களிடம் இன்று நான் பேசியது..
கேளுங்கள். பகிருங்கள். 🙏
படிச்ச பண்புள்ள... அனைத்து மக்களோடும் இணைந்து பழகக்கூடிய...
நல்ல வேட்பாளர்.... இளமையான மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய வழக்கறிஞர்.....
ஆரம்பகட்டத்தில் இருந்து கட்சிகள் மாறாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பயணித்து வரக்கூடிய நமது வெற்றி வேட்பாளர்.....
தாராபுரம் தொகுதியின் மக்களின் பேராதரவை பெற்ற வேட்பாளர்
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்...
திருமதி வழக்கறிஞர் சுகன்யா மணிவாசகம் அவர்கள் ....
வாக்களிப்பீர் உதயசூரியன் வெற்றி பெற செய்வீர் உதயசூரியன்🖤❤️
பேரறிஞர் அண்ணா நடத்திய 'ஹோம் ரூல்' பத்திரிகையின் ஆசிரியராகவும், சென்னை மாநகராட்சியின் இளம் வயது மேயராகவும் முத்திரை பதித்தவர் திரு. சிட்டிபாபு. அவசர நிலை காலத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குச் சிறையில் நடந்த கொடுமைகளைத் தன் மீது தாங்கிக் கொண்டு, கழகத்தின் மானம் காக்கத் தன் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகச் செம்மலின் வரலாறு என்றென்றும் போற்றத்தக்கது!
#திராவிட_மாதம்
இவனுங்களை இப்படி தான் Expose பண்ணனும்
ரொம்ப காலத்துக்கு பொய்களை வச்சே காலத்தை ஓட்ட முடியாத
வச்சு உரிச்சு உப்புகண்டம் போட்டுட்டாப்ல
பொருப்புள்ள பதவில இருக்கீங்க பொறுப்புடன் நடந்து கொள்ளுங்க
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது.
இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலி.
பேராண்மை என்ப தறுகணொன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு.
போர்க்குரல் ஒலிப்பதென்று முடிவு செய்துவிட்டால் கோட்டையை நோக்கி நகர்வதே முறை.
நமக்கான ஊடகம் என்பது இனி நாம் நடத்தும் ஊடகம்தான் என்ற படிப்பினைத் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கையில்
D' Nation செய்தி ஊடகத்தை இன்று தொடங்குகிறோம்.
ஆதரித்து வழிநடத்துங்கள்.
தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்.
பெண், தலித், திமுக நிர்வாகி
மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடிய Previlege ஒரு நாளும் உங்களுக்கு கிடைக்காது. But your fight is strong.
Stay Strong Thozar @PriyarajanDMK
Every choice made by women in public life shouldn't be met with constant scrutiny and mockery. Breaking into politics in a patriarchal society is tough enough; doing so from an oppressed community is even harder. Targeting women who push through these barriers is completely unacceptable. I strongly condemn these relentless, orchestrated controversies against Mayor Ms. Priya Rajan.
CM Vijay says he “won’t let anyone speak wrongly about any woman.” But why, then, has he allowed these attacks on Mayor Priya by his fans and cadres?
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.
#மின்வெட்டு#PowerCut
நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவராகவும், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் சிறப்பாகப் பணியாற்றிய தமிழவேள் பி.டி.ராஜன் அவர்கள், ஆன்மீகத் தளத்திலும் தமிழ் மொழிக்கு முதலிடம் பெற்றுத் தந்த பெருமைக்குரியவர். 'கோயில்களில் அர்ச்சனை தமிழில் தான் நடைபெற வேண்டும்' என்று முதன்முதலில் குரல் கொடுத்து, அதன் வரலாற்றுச் சாதனையாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வழிவகுத்தவர்
#திராவிட_மாதம்
தனிப்பட்ட வெற்றியில் நிறைவடைந்திடாமல், சமூக மேம்பாட்டிற்காக பொதுத்தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்தைத் தமது சீரிய பொதுவாழ்வின் மூலம் எமக்குள் ஆழமாக விதைத்தவர்; திராவிட இயக்கம் மற்றும் சமூகநீதிக் கோட்பாட்டின் மீது எனக்கு ஏற்பட்ட உறுதிப்பாட்டிற்கும் அடித்தளம் அமைத்தவர்.
திராவிட இயக்கத்தின் ஊற்றுக்கண்ணான நீதிக்கட்சியின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவர்; அரசு நிர்வாகம், கல்வி, பொருளாதார மேம்பாடு, ஆன்மீகம் என அனைத்துத் துறைகளிலும் ஜனநாயகத் தன்மையுடன் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உறுதியுடன் உழைத்த முன்னோடி; மதராஸ் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர்; எனது தாத்தா ‘தமிழவேள்’ பி.டி. ராஜன் அவர்களின் நினைவு நாளான இன்று, அவரது அறவாழ்வை நெகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
This is "Contempt of Court" in effect. If the Supreme Court does not step in to rectify this gross violation of due process and Citizens' Rights, it is not a functional institution in any sense of the term. And if so, one pillar of our Constitutional structure is now defunct.
ये एक बेहद गंभीर समाचार है कि पिछले 10 महीनों में 2 चुनाव आयुक्तों ने निर्वाचन आयोग के गलत निर्णयों पर 14 बार अपनी आपत्ति दर्ज़ कराई है।
इसका सीधा मतलब ये है कि सभी चुनाव आयुक्त अपना सही काम नहीं कर पा रहे हैं। एक स्वतंत्र निकाय के सदस्यों को अगर न्यायपूर्ण कार्य करने की स्वतंत्रता नहीं है या उनकी कोई सुनवाई नहीं है तो ये लोकतंत्र के लिए बेहद घातक और ख़तरनाक हालात हैं। कुछ लोगों द्वारा सत्ता की कठपुतली बनकर लोकतंत्र को धोखा देना घोर सांविधानिक अपराध है। ये लोकतंत्र को मिटाने के किसी षड्यंत्र से कम नहीं है।
माननीय सर्वोच्च न्यायालय स्वत: संज्ञान ले!