மக்களின் அன்பில் கழக தலைவர்!
கழக வேட்பாளர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட கழக தலைவர்
திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆரவார வரவேற்பளித்த தாய்மார்கள்!
#VoteForDMK
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை ஒவ்வொன்றாக நிறுத்தத் துடிக்கும் ஈகோ தவெக அரசு இப்போது கல்வித் திட்டங்களில் கைவைக்கத் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது!
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற பின்தங்கிய மாணவர்களின் வெளிநாட்டு உயர் கல்விச் செலவுகளை ஏற்கும் பொருட்டு ண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்திப் படுத்தியது திமுக. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று பல்வேறு நாடுகளில் படித்து வருகிறார்கள். தவெக ஆட்சி அமைந்தவுடன் கல்விக் கற்கும் மாணவர்களுக்கு தேவையான கல்விக் கட்டணத்தை விடுவிக்காமல் ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக சம்பந்தப்பட்ட மாணவர்களே குற்றம்சாட்டுகிறார்கள்!
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசன் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். தனது கோரிக்கையை வெளிப்படுத்திய மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவது அப்பட்டமான அராஜகப் போக்கு.
மாணவர் பாரதிதாசனை பழிவாங்குவதை நிறுத்திவிட்டு அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்க சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! இல்லையென்றால், கழகத் தலைவர் குறிப்பிட்டதுபோல 'எங்களால் நிதியை விடுவிக்க முடியாது' என வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். மாணவரின் கல்விச் செலவுகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!
@CMOTamilnadu
தமிழ் அரசியல் அடையாளமாய், மாநில உரிமைக் குரலாய், சாமானிய மக்களின் சரித்திர நாயகராய், உடன்பிறப்புகளின் ஒப்பற்ற தலைவராய் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று...
#C.N.A is our DNA!
#ANNA#MkStalin#DMK
இலத்தூர் வடக்கு ஒன்றியம்❤️🖤
இன்று (13.10.2025) இலத்தூர் ஒன்றியம், திருவாதூர் ஊராட்சி, கல்பட்டு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்ட நியாய விலை கடையினை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி வைத்து இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தேன்.
#panaiyurbabumla #mlababu #cheyyurconstituency #vckmla