இன்றைய தினம் பிறந்த நாள் காணும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் என் ஆருயிர் தம்பி திரு. @annamalai_k அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் சிறந்த ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
"All the films which i've done are either with Debutant or Failed Directors, except Porali film♥️. I'm running a tutorial college, so failed director can easily approach me😁. I don't see them as Flop directors, only the film has failed👏🫡"
- #Sasikumar
ராமநாதபுரத்தில் இன்று நமது "தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்" பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திமுக அரசு தமிழக மக்களைத் துன்பமெனும் பெருங்கடலில் தூக்கியெறிந்தது மட்டுமல்லாமல் அவர்களுக்குக் கைகொடுத்து உதவாமல் தமது திறனற்ற நிர்வாகத்தால் தத்தளிக்கவிட்டு முழ்கடிக்கவும் செய்துள்ளது என்பதை இன்று மக்களிடம் பேசுகையில் நன்கு உணர முடிந்தது. மக்கள் விரோத திமுகவிற்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும் என்பது உறுதி!
#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்
அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை இன்று அறிவற்றவர்களாக மாற்றும் வேலையை பார்த்து வருகிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியாளர்கள்.
அனுதினமும் பயத்தோடும், பதற்றத்தோடும் வாழும் சூழலை உருவாக்கி விட்டு, விடியல் ஆட்சி என்றும், மக்களுக்கான ஆட்சி என்றும் மேடைகளில் மார்த்தட்டிக் கொண்டு இருக்கிறார்கள் நிர்வாக திறனற்றவர்கள்.
இனி யாரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும், யாரை தூக்கியெறிய வேண்டும் என்று தமிழக மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
வைகை நதி, கடலில் சங்கமிக்கும் இடமான ராமநாதபுரத்தில் இருந்து தமிழக ஆட்சியாளர்களுக்கு இறுதி முடிவு எழுதப்பட்டுவிட்டது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பாதையிலே..
திராவிட முன்னேற்றக் கழகத்தை தூக்கியெறிவார்கள் தமிழக வாக்காள பெருமக்கள் விரைவிலே..
நிச்சயம் 2026ல் ஆட்சி மாற்றம் இருக்கும். அதுவே தமிழக மக்களின் முழக்கம் என்று திடகாத்திரமாக சொல்லி வருகிறது " தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்". மக்கள் சந்திப்பிற்கான இந்த மகத்தான பயணத்தின் 20-ஆம் நாள் நேற்று ராமநாதபுரத்தில்..
நேற்றைய கூட்டத்தில் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் திரு. @karuppuMBJP அவர்கள்,
பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் திரு. பொன் பாலகணபதி அவர்கள், ராமநாதபுரம் பாஜக மாவட்டத் தலைவர் திரு. முரளிதரன் அவர்கள்,
ராமநாதபுரம் அதிமுக முன்னாள் அமைச்சர் திரு. மணிகண்டன் அவர்கள், அதிமுக மாவட்டக்கழக செயலாளர் திரு. முனியசாமி அவர்கள், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. முத்தையா அவர்கள்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்
ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் திரு. P.K.K. ராமமூர்த்தி அவர்கள், ராமநாதபுரம் ஐ.ஜே.கே. மாவட்டத் தலைவர் திரு.ராஜா அவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
(1/4)
சோழர்களின் மகிமை, பாண்டியர்களின் வீரம், இருக்குவேள் அரசர்களின் பக்தி, தொண்டைமான்களின் கருணை ஆகியவற்றைக் கண்ட புனித மண்ணான புதுக்கோட்டையில் இன்று நமது பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
மண்ணின் மைந்தர்கள் இருவர் அமைச்சர்களாக இருந்தும் மணல் கடத்தல், கொலை, கொள்ளை எனப் பல இன்னல்களில் சிக்கித் தவித்து வரும் புதுக்கோட்டை மண்ணை வரும் சட்டமன்றத் தேர்தலில் @arivalayam அரசின் கைப்பிடியிலிருந்து மீட்டு, முன்னேற்றப் பாதையில் வீறுநடையிடச் செய்வோம்! புதுக்கோட்டையைப் புதுப்பொலிவுறச் செய்வோம்!
#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்