பொய்கலையும் அவதுருகலையும் உடைத்து எரிவேம் என்ன????@SunTV
திருவள்ளுவர் மாவட்டம் திருவேற்காடு நகரத்தில்
அண்ணன் @Udhaystalin அவர்களின் பிறந்தநாலை முன்னிட்டு 2014ல் என் தலைமையில் நடந்த ஒரு நாள் எழவர் கால்பந்து நிகழ்ச்சி....
:திருவள்ளூர் மாவட்ட திருவேற்காடு நகரத்தில் அண்ணன் @Udhaystalin ரசிகர் நற்பணி மன்றம் @மன்ற என்( 2014: ----- )....என் தலைமையில் ஆரம்பித்து அண்ணனுடன் எடுத்த முதல் புகைபடம் எப்படி???@SunTV
11நான் தாக்குதலை தாங்கிகொள்ளும் பழக்கம் உள்ளவன் மட்டுமல்ல தாக்குதலை விரும்பவனும் கூட தாக்கப்பட்டால் தான் நான் கூட மெருகு பெற முடியும்...@Udhaystalin@SunTV
டாக்டர் கலைஞர்
இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் 2023-ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இத்திட்டம், வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கூடுதல் மகளிர்க்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது என்கிற மகிழ்ச்சியான அறிவிப்பை சட்டப்பேரவையில் இன்று அறிவித்தோம்.
தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட 28 லட்சம் புதிய விண்ணப்பங்களில், விதிகளைப் பூர்த்தி செய்யும் மகளிர் அனைவரும் உரிமைத் தொகை பெறுவார்கள்.
மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்ய என்றும் அயராது உழைப்போம்.
சிவகங்கை மாவட்டக்கழகம் கோவிலூரில் கழக செய்தித் தொடர்பு துணைத்தலைவர் அண்ணன் மருது அழகுராஜ் ஏற்பாட்டில் கலைஞர் நினைவு கொடிக்கம்பம் நாட்டு விழாவில் பங்கேற்று கழகத்தின் கருப்பு - சிவப்பு கொடியை ஏற்றி வைத்தோம்.
பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு - நம் தலைவர் @mkstalin அவர்களால் உயர்த்திப்பிடிக்கப்படும் கழக இருவண்ண கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை கொள்கிறோம்.
உயரப்பறக்கும் கழகக்கொடியை போல 2026-இல் வெற்றிக்கொடி நாட்டுவோம் என்று உரையாற்றினோம்!
@OfficeOfKRP@TamilarasiMLA
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த போது, திருப்பத்தூர் - குன்றக்குடி - பிள்ளையார்ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எழுச்சிமிகு வரவேற்பை வழங்கிய கழக உடன்பிறப்புகள் - இளைஞர் அணி தம்பிமார்கள் - பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@OfficeOfKRP
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பேரூராட்சி அலுவலகத்தின் புதிய கட்டடம் - அண்ணா மன்ற கட்டடம் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை - முன்னாள் அமைச்சர் செ.மாதவன் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த போது சிங்கம்புணரியில் உற்சாக வரவேற்பு அளித்த கழக உடன்பிறப்புகளுக்கு என் அன்பும் - நன்றியும்! @OfficeOfKRP
Heartfelt congratulations to Hon’ble School Education Minister and my dear friend @Anbil_Mahesh, on being awarded doctoral degree for the research titled “Physical Activity for Skill Development through Machine Learning.”
I am truly proud that, despite his demanding administrative responsibilities and vibrant public life, he dedicated the time and commitment required to accomplish this remarkable milestone.
His achievement stands as an inspiration to everyone who aspires to pursue their goals, regardless of age or workload.
I warmly wish Dr. Anbil Mahesh Poyyamozhi, Ph.D., continued success and greater accomplishments in the future.
--
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் – எனது நண்பருமான @Anbil_Mahesh அவர்கள், ஆய்வு முனைவர் பட்டம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.
மாவட்டக் கழகச் செயலாளராக அரசியல் பணி – அமைச்சராக அரசுப் பணி என்று பொதுவாழ்வில் ஓய்வின்றி சுற்றிச் சுழன்றாலும், கல்வியை கைவிடாது சாதித்துள்ளார்.
அவருடைய Doctoral Research-ஐ “Physical Activity for Skill Development Through Machine Learning” எனும் தலைப்பில் சமர்ப்பித்து இன்று முனைவராக உயர்ந்திருக்கிறார்.
பள்ளி மாணவர்களின் உடற்கல்வி திறனை AI தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ள அவரது ஆய்வு, விளையாட்டுத்துறை அமைச்சராக எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
கல்விக்கு வயதும் – சூழலும் தடையில்லை என்பதை செயலில் காட்டியிருக்கும் நண்பர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
#AnbilMaheshPoyyamozhi
மகளிர் சுய உதவி குழுக்களை மேலும் வலிமையாக்கிட குழு சகோதரிகளுக்கு பிரத்யேக ID Cards-ஐ நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்க உத்தரவிட்டார்கள்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் குழுக்களுக்கான ஐடி கார்டுகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 1000 குழு சகோதரிகளுக்கு அடையாள அட்டைகளை தமுக்கம் மைதானத்தில் இன்று வழங்கினோம்.
அவற்றைப் பெற்ற சகோதரிகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்!
@pmoorthy21@ptrmadurai@g_thalapathimla
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக, நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் அரங்கம் மற்றும் நம்முடைய மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளின் தயாரிப்புகளைக் கொண்ட அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டோம்.
குழு சகோதரிகள் தயாரித்துள்ள பொருட்களின் பயன்பாட்டை கேட்டறிந்தோம். மகளிர் குழுக்களுக்கு என்றும் துணை நிற்போம்!
@Avadi_Nasar@SUDHARSANAM_S@s_kanth@office_krishna@VGRajendranDMK@GanapathyK@TJGOVINDARAJAN@ChandranDMK_@MlaPonneri
75 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்கும் பேரியக்கமாம் நம் தி.மு.கழகத்தின் பவள விழாவை 1,120 பக்கங்கள் கொண்ட புத்தகம், 44 கருத்தாளர்கள் பங்கேற்ற இருநாள் கருத்தரங்கம், முற்போக்கு புத்தகக் காட்சி, தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ஏழு முற்போக்கு கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் - தமிழின் தலைசிறந்த ஆளுமைகளின் உரைவீச்சு என #திமுக75_அறிவுத்திருவிழா-வாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் @dmk_youthwing சார்பாக கொண்டாடியிருந்தோம்.
தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்ற அறிவார்ந்த நிகழ்ச்சிகளின் அணிவகுப்பை நாளை முதல் தினந்தோறும் மாலை 6:30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
#DMK75 @arivalayam
நம் பிறந்த நாளான இன்று, தந்தையும், கழகத்தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான @mkstalin அவர்களிடமும் - தாயாரிடமும் வாழ்த்துப் பெற்றோம்.
அவர்களின் வாழ்த்துகளோடு - தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் - #திராவிட_மாடல் ஆட்சி தொடரவும் எந்நாளும் உழைப்போம்.
நம் பிறந்த நாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லம் சென்று கலைஞர் அவர்களின் திருவுருவப்டத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
இந்தியாவின் சமூகநீதி, சமத்துவ, மதச்சார்பற்ற அரசியலைத் தீர்மானிக்கும் தலைமையிடமாக பல்லாண்டுகள் விளங்கிய கோபாலபுரம் இல்லம் நமக்கு கூடுதல் உற்சாகத்தையும் - புத்துணர்ச்சியையும் தந்தது.
@Dayanidhi_Maran@nchitrarasu
பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பார்க்காது... யாராக இருந்தாலும் கடுமையான, உச்சபட்ச தண்டைனையைச் சட்டப்படி பெற்றுத் தருவோம்!
வாச்சாத்தி, தருமபுரி தொடங்கி பொள்ளாச்சி வரை சந்தி சிரித்த ஆட்சி நடத்திய கட்சியின் 'சார்கள்' பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்! சென்சிட்டிவான ஒரு வழக்கில், குறுகிய நோக்குடன் செயல்பட்டு, அரசியல் லாபத்துக்காக நம் மாணவர்களின் கல்வியைப் பாழாக்க வேண்டாம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய போது, மதுரை அரிட்டாப்பட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் வரை, டங்க்ஸ்டன் சுரங்கத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மக்களின் குரலாக முழங்கினார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் நலன் மற்றும் மாநில உரிமை காக்கின்ற வகையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்கிறோம். #திராவிட_மாடல் அரசு என்றும் மக்களின் பக்கமே நிற்கும்!